ஐ.தே.க புதிய அரசாங்கத்தை அமைக்குமா?; இன்று மாலை தீர்மானம்

ஐ.தே.க புதிய அரசாங்கத்தை அமைக்குமா?; இன்று மாலை தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சி தனியாக ஆட்சியமைக்குமா இல்லையா என்பது தொடர்பில் இன்று மாலை தீர்மானிக்கப்படுமென கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரவிக்கின்றன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.தே.கவின் தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பிலும் ஐ.தே.க அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

சுமார் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்கள், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஒன்றை அபை்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வது தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடியதாகவும் இது தொடர்பில் இன்று மாலை இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமெனவும் தெரிவித்தனர்.

புதிதாக அமைக்கப்படும் அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் விரும்பினால் இணைந்துகொள்ள முடியுனெவும் அவர்கள் தெரவிக்கின்றனர்.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top