எந்தவொரு அரசாங்கத்துடனும் இணையப்போவது இல்லை; சுமந்திரன் திட்டவட்டம்

எந்தவொரு அரசாங்கத்துடனும் இணையப்போவது இல்லை; சுமந்திரன் திட்டவட்டம்

எந்தவொரு அரசாங்கத்துடனும் இணைந்து செயற்படும் எண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இல்லையெனவும், தமிழ் மக்களின் பிரச்சினைகைளைத் தீர்ப்பதனை நோக்காகக் கொண்டு தமிழ்க் கூட்டமைப்பு தொடர்ந்து செயற்படும் எனவும், கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் இதற்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ்க் கூட்டமைப்பு கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் சுடர்ஒளி எம்.ஏ.சுமந்திரனிடம் வினவிபோதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, புதிய அரசாங்கம் ஒன்று அமைப்பது தொடர்பில் எந்தவொரு கட்சியும் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என  எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் பேசுவதற்கு எவ்வித தேவையும் தமது கட்சிக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வழங்கியுள்ள தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

.........

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top