தமிழ்க் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்

தமிழ்க் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்பு காரணமாக ஆட்சிமாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்புகள்கூட காணப்படுகின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டுமென ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சுரேஷ் பிரேமசந்திரன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் “மஹிந்த ராஜபக்‌ச தலமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றுள்ளது.  இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அடுத்து என்ன செய்யபோகின்றது? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளை ஒன்றிணைத்து தீர்மானங்களை எடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கவேண்டும்.

வெறுமனே இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் வார்த்தைகளால் கூறிக்கொண்டு இருப்பதால் பயனில்லை.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top