ரணில், பாராளுமன்ற உறுப்பினர்களிடையே சந்திப்பு; இறுதித் தீர்மானம் மாலை

ரணில், பாராளுமன்ற உறுப்பினர்களிடையே சந்திப்பு; இறுதித் தீர்மானம் மாலை

இன்று மாலை ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்துள்ள நிலையில் சபாநாயகர் கரு ஜயசூர்யவை பிரதமராக பதவியேற்குமாறு அழைப்பு விடுத்ததாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்ரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்த விடயத்தை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர் மட்டம் உறுதிப்படுத்தியுள்ளது.

தாம் அறிவிக்கும் எவ்வேளையிலும் வருவதற்கு தயாராக இருக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே கட்சி தலைமையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்நிலையில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடாது எவ்வித தீர்மானத்தையும் எடுக்க முடியாது என கருஜய சூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்சித்தலைமைப்பொறுப்பை சஜித் பிரேமதாஸவிடம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே இன்று மாலை இறுதி தீர்மானம் தொடர்பான அறிவித்தல் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய கூட்டு அரசாங்கத்தை எவ்வாறு முன்கொண்டு செல்வது என்பது தொடர்பாக, முடிவு செய்வதற்கான சிறப்புக் குழு ஒன்றை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் நேற்றிரவு நடத்தப்பட்ட பேச்சுக்களில் இணக்கம் ஏற்பட்டது.

ஐக்கிய தேசிய முன்னணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களான சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன் மற்றும், ஐ.தே.கவின் தலைவர்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தினார்.

சிறப்பு குழு ஒன்றை அமைத்து, தேசிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து முடிவெடுப்பது எனவும்  இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top