பிரதமர் பதவியை ஏற்குமாறு எவரும் கோரவில்லை - கரு

பிரதமர் பதவியை ஏற்குமாறு எவரும் கோரவில்லை - கரு

பிரதமர் பதவிக்கு தமது பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் ஊடாகவே அறிந்துகொண்டதாகவும், தான் பிரதமர் பதவியை கோரவில்லை எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு என்னிடம் யாரும் கோரவில்லை, எனினும் ஜனாதிபதியும் பிரதமரும் தொடர்ந்து இணைந்து செயற்பட வேண்டுமென்பதே எனது பிரார்த்தனை“ எனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தேசிய அரசாங்கத்திற்குள் பிரச்சினைகள் காணப்படுகின்றனவே என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர் இதற்கு பதில் அளித்த சபாநாயகர் “அது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, நான் சபாநாயகர்.“ என பதிலளித்தார்.

மேலும் தான் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் தற்போது தான் மத்தியஸ்தன் வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top