பெண்ணுக்காக கைதிகள் நிர்மாணித்துள்ள வீடு

பெண்ணுக்காக கைதிகள்  நிர்மாணித்துள்ள வீடு

தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் ஒன்றிணைந்து குடும்பம் ஒன்றுக்கு வீட்டை வழங்கியுள்ளனர்.

களுத்துறை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், தமக்கான உணவு வேளையில் வழங்கப்படும் இறைச்சியை தவிர்த்து அந்தப் பணத்தைக் கொண்டே இந்த வீட்டை நிர்மானித்துள்ளனர்.

வடக்கு களுத்துறை புகையிரத வீதியில் வதியும் மானெல் சந்திரிகா மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளுக்கே இந்த வீடு வழங்கப்பட்டுள்ளது.

மானெல் சந்திரிக்காவின் கணவர் புற்று நோயினால் உயிரிழந்துவிட்டதாகவும் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்க மிகவும் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த வீட்டை நிர்மாணிக்கும் அனைத்து பணிகளையும் கைதிகளே மேற்கொண்டுள்ளனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படாத குடும்பம் ஒன்றிற்காக முதல் தடவையாக கைதிகளின் முயற்சினால் வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top