களனிவெல புகையிரத மார்க்கத்திற்கு நாளை முதல் பூட்டு

களனிவெல புகையிரத மார்க்கத்திற்கு நாளை முதல்  பூட்டு

களனிவெல புகையிரத பாதை 16 ஆம் திகதி இரவு 8 மணி முதல் 19 ஆம் திகதி மாலை 4 மணி வரை மூடப்படும் என மேலதிக புகையிரத முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இப்பாதையினூடான அனைத்து புகையிரத சேவைகளும் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத பாதையின் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வேலைகள் காரணமாகவே இவ்வாறு குறித்த சேவைகள் நிறுத்தப்படுவதாகவும் இதன்மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளுக்கு புகையிரத திணைக்களம் வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் மேலதிக புகையிரத முகாமையாளர் விஜய சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top