நாடாளுமன்றை கலைக்க வேண்டிய அவசியம் இல்லை

நாடாளுமன்றை கலைக்க வேண்டிய அவசியம் இல்லை

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடனான தீர்மானமொன்றை நிறைவேற்றாமல், நான்கரை வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது என அரசியலமைப்பு தொடர்பான சட்டத்தரணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்தரப்பினரால் நாடாளுமன்றை கலைக்க வேண்டுமென கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஆட்சியிலிருக்கும் அரசு உள்ளூராட்சி மன்றங்களை இழந்தால், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்ற பாரம்பரியம் அல்லது முன்னுரிமை இல்லை. இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் தேர்தல் முடிவுகளை கவனத்தில் எடுக்க வேண்டும். தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்  கூறியுள்ளார்.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top