Items filtered by date: Thursday, 07 December 2017

கா.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பரீட்சை அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு வைத்திருத்தல் அவசியமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்மாதம் 12ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள புதிய மற்றும் பழைய பாடங்களுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பாக பரீட்சைத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை புதிய மற்றும் பழைய பாடங்களின் கீழ் 2017.12.12 முதல் 2017.12.21 வரையில் பரீட்சை நடைபெறவுள்ளது. பரீட்சை காலை 8.30 க்கு ஆரம்பமாகவுள்ளமையால் காலை 8.00 மணிக்கு முன்னர் அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்டை அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களுக்கு சமுகமளிக்கவேண்டும்.

பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னர் பரீட்சார்த்தி பரீட்சை அட்டையில் தாம் விண்ணப்பித்துள்ள பாடத்திற்கான மத்திய மற்றும் உறுதிசெய்யப்பட்டமை உள்ளிட்டவை தொடர்பில் சரியாக பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

ஏதேனும் மாற்றங்கள் இருக்குமாயின் உடனடியாக பரீட்சைத் திணைக்களத்திற்கு அறிவிக்கவேண்டும். இதேபோன்று பரீட்சையின் போது பரீட்சார்த்திகளினால் ஸ்மாட் கைக்கடிகாரம், கையடக்கதொலைபேசி, இலத்திரணியல் உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் பரீட்சை மோசடிகள் இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பரீட்சை நிலையத்திற்கு பொறுப்பானவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் பரீட்சார்த்திகளுக்கு 5 வருடங்களுக்கு பரீட்சைத்திணைக்களத்தினால் நடத்தப்படும் அனைத்து பரீட்சைகளிலும் தோற்றுவது தடைப்படும். அத்துடன் இம்முறை பரீட்சை பெறுபேறுகளும் இரத்து செய்யப்படும். பரீட்சை நடைபெறும் சந்தர்ப்பத்தில் வெளித்தரப்பினரால் பரீட்சார்த்திக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்படுத்தப்படுமாயின் அது தொடர்பில் பரீட்சைத்திணைக்களத்திற்கும், பொலிஸ்திணைக்களத்திற்கும் அறிவிப்பதற்கு அனைத்து ஆலோசனைகளும் பரீட்சை மண்டபத்திற்கு பொறுப்பானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் பரீட்சை மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படாத எந்தவொரு நபரும் பிரவேசிக்க கூடாது. பரீட்சை நிலையமாக உள்ள பாடசாலை வளவுக்குள் நிர்மாணப்பணிகள், வகுப்புக்களை நடத்துதல், விளையாட்டு வைபவம், கூட்டங்களை நடத்துதல் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் இதற்கமைவாக செயற்படுவதற்கு பரீட்சை மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ள பாடசாலை அதிபர்கள் இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பரீட்சை தொடர்பாக முறைப்பாடுகளுக்கு கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும். இதற்கான தொலைபேசி இலக்கங்கள் பரீட்சை திணைக்களத்துடன் உடனடியாக தொடர்புகொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கம் 1911 பரீட்சை ஏற்பாட்டுக்கிளை தொலைபேசி இலக்கம் 0112784208 , 0112784537 , 0113188350 , 0113140314 பொலிஸ் தலைமையகம் 0112421111 , பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் 119“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published in உள்நாடு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவியான ஷஷி வீரவன்சவுக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணைக்கான தினங்களாக பெப்ரவரி 6ஆம் மற்றும் 27ஆம் திகதிகள், கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டாரவினால், இன்று குறிக்கப்பட்டன.

இன்றைய தினம், 16ஆவது சாட்சியான ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளரின் தனிப்பட்ட உதவியாளர் பிரசாத் ராஜேந்திர பெரேராவிடம் சாட்சிய விசாரணை நடத்தப்பட்டது.

அதன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டதுடன், சாட்சியாளர்களுக்கு அழைப்பாணையும் பிறப்பிக்கப்பட்டது.

ஷஷி வீரவன்ச, போலிப் பெயர் மற்றும் போலியான பிறந்த தினத்தைக் கொண்டு இரண்டு அடையாள அட்டைகளை எடுத்துள்ளமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததுடன், அவற்றைக் கொண்டு இராஜதந்திர மற்றும் சாதாரண கடவுச்சீட்டுக்களை பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வழக்குத் தொடரப்பட்டது.

ரணசிங்ககே ரண்முத்து முதியன்சலாகே ஷேஹசா உதயகாந்தி மற்றும் ரணசிங்ககே ரண்முத்து முதியன்சலாகே ஷிர்ஷா உதயகாந்தி ரணசிங்க ஆகிய பெயர்களில் இரண்டு கடவுச்சீட்டுகள் பெறப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

முறைப்பாட்டாளர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் ஆஜராகியிருந்ததுடன், ஷஷி வீரவன்ச சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான அனில் சில்வா மற்றும் ஜயந்த வீரசிங்க ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

Published in உள்நாடு

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் கிறிஸ்மஸ் மரத்தில் மின் விளக்கு அலங்காரத்தை சேதப்படுத்திய அனிலை கைது செய்த பொஸார் பின்னர் பிணையில் விடுவித்துள்ளனர்.

நியூ ஜெர்சியில் ‘சீ கிர்ட்’ பகுதியில் மிகப்பெரிய அளவில் கிறிஸ்மஸ் மரம் வைக்கப்பட்டிருந்தது. அந்த மரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த மின் விளக்கு அலங்காரத்தை ஒரு அனில் கடித்து சேதப்படுத்தியிருந்தது.

இதனால் கிறிஸ்மஸ் மரத்தில் பல மின் விளக்குகள் ஒளிரவில்லை எனவே, அந்த அனிலை நியூஜெர்சி பொலிஸார் தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர். இத்தகவலை ‘பேஸ்புக்’கிலும் பதிவிட்டிருந்தனர்.

எனினும் சில மணி நேரத்திலேயே அது பிணையில் விடுதலையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"வடக்கில் இராணுவத்தின் வல்லாதிக்க ஆட்சியே இன்னமும் தொடர்கின்றது. இராணுவத்தினரின் அடிமைகளாகவே தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இராணுவத்தின் சிறையில் இருக்கும் வடக்கில் சிவில் நிர்வாகத்தைக் கொண்டு வாருங்கள்." என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் ஆவேசமாகத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2018ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி, தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு மற்றும் அரச கருமமொழிகள், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, இந்துமத விவகார அமைச்சுகளின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்

அவர் மேலும் தெரிவிக்கையில், "வடக்கில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சியே நடக்கின்றன. அங்கு படையினர் சலூன்களை நடத்துகின்றனர். சாப்பாட்டுக் கடைகளை நடத்துகின்றனர். விவசாயம் செய்கின்றனர். வடக்கு மக்கள் தொடர்ந்தும் இராணுவத்தினருக்கு அடிமைப்பட்டவர்களாகவே வாழ்கின்றனர். இதற்கு எப்போது முடிவுகட்டப்படும்? பயிர்ச்செய்கை நிலங்கள் இராணுவத்திடம் உள்ளன. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் வடக்கிலுள்ள நிலைமையை நேரில் சென்று பார்க்க வேண்டும். இராணுவத்தினர் பல ஏக்கர் கணக்கில் நிலங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆகையால் தொடர்ந்தும் இராணுவத்தினரின் பிடிக்குள் அப்பகுதி மக்கள் அகப்பட்டுள்ளனர்.

சலூன், சப்பாட்டுக் கடை நடத்துவது போன்று இராணுவத்தினர் அனுமதியில்லாமல் கட்டடம் கட்டுகின்றனர். அங்கு இராணுவ ஆட்சியே நடக்கின்றது. இராணுவத்தில் இருந்து வடக்கு விடுதலையாகவில்லை. முன்னாள் போராளிகளை விடுவித்ததன் ஊடாக வடக்கின் நிலைமைகளை மாற்ற முடியாது. அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

வடக்கில் விடுதலைப்புலிகள் வீதிகளை ஒழுங்காக வைத்திருந்தனர். தற்போது வடக்கின் வீதிக் கட்டமைப்பு மோசமடைந்துள்ளது" என்றார்.

Published in உள்நாடு

கூட்டு ஒப்பந்த காலத்தில் பொகவந்தாலாவை – ஹட்டன் பிரதான வீதியில் போரட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் 5 பேரை இன்று நோர்வுட் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் 1,000 ரூபாய் சம்பள உயர்வு கோரி கடந்த கூட்டு ஒப்பந்த காலத்தில் மலையகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இப்போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் மலையகம் முழுவதிலும் மேற்கொள்ளப்பட்டதுடன், பொகவந்தாலவை ஹட்டன் பிரதான வீதியை மறைத்து சுமர் 3 மணித்தியாலங்கள் சென்ஜோன் டிலரிமக்களும் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

2016 ஆண்டுக்காலப் பகுதியில் இப்போராட்டம் நடைபெற்றதுடன், ஒரு வருடம் கடந்த நிலையில், குறித்த போரட்டத்தை ஏற்பாடு செய்திருந்த 5 தோட்ட தொழிலாளர்களை நோர்வுட் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 5 தோட்ட தொழிலாளர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், ஒரு வருடங்கள் கடந்து தற்போது கைது செய்யப்படுவது நோர்வுட் பொலிஸாரின் பழிவாங்கும் நடவடிக்கை என சென்ஜோன் டிலரி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Published in உள்நாடு

மலையக உதவி ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் மனோகணேசன், குறித்தகுழுவில் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் அங்கம் வகிக்கிறது என்றும், விரைவில் உதவி ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது அவர் இதனைக் கூறினார்.

முன்னதாக, உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், “மலையக உதவி ஆசிரியர்களுக்கு 6ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது அநீதியானது. மிகவும்வறுமையான சூழலிலேயே இவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இவர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும்” என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மனோகணேசன், “உங்களது கருத்து வரவேற்கத்தக்கது. விரைவில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படும் என்றார்.

Published in உள்நாடு

கேப்பாப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் அனைத்துக் காணிகளும் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படும் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2018ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி, தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு மற்றும் அரச கருமமொழிகள், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, இந்துமத விவகார அமைச்சுகளின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், "இரணைதீவுக் காணிகளை விடுவிப்பதாக உறுதியளித்திருந்தீர்கள். இதுவரை விடுவிக்கப்படவில்லை. உங்களது கருத்துகளை நம்ப முடியாதுள்ளது" என்று அமைச்சர் சுவாமிநாதனிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சுவாமிநாதன், "கேப்பாப்பிலவில் உள்ள மக்களின் காணிகள் அனைத்தும் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படும். இரணைதீவு காணிகள் குறித்து அரசுடனும், பாதுகாப்புத் தரப்புடனும் பேசித்தான் தெரிவிக்க முடியும்" எனக் குறிப்பிட்டார்.

Published in உள்நாடு

நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேசசபைகள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும், 1987ஆம் ஆண்டும 33 இலக்க பிரதேசசபை சட்டம் திருத்தப்படாமை, மலையக மக்களுக்கு பெரும் பாதிப்பாகும்” என,தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரைாயற்றியபோது அவர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “கடந்த காலங்களில் காணி உரிமைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலைமை காணப்பட்டது 2015ஆம் ஆண்டு லக்ஷ்மன் கிரியெல்ல பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில்அமைச்சராக இருந்த போது மலையக மக்களுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுக்கும் அமைச்சவை பத்திரத்தில் தெளிவாக பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வருடங்களில் தனிவீடு மற்றும் காணி உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து வருகிறோம். 1978ஆம் ஆண்டு மலைநாட்டு அமைச்சு வழங்கப்பட்ட பின்னர் முதல்முறையாக தமிழ் முற்போக்குக்கூட்டணியால் இவ்வாறு அபிவிருத்தித் திட்டங்கள் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆசியர் உதவியலாளர்களின் விவகாரம் தற்போது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இவர்களை ஆசிரயர் உதவியாளர்களாகவும், ஆறாயிரம் ரூபாய் சம்பளத்திற்கும் உள்ளீர்க்கும் செயற்பாட்டுக்கு அன்று இருந்ததலைமைகள் தலைசாய்த்தமையாலேயே எங்களாலும் என்று இதற்குத் தீர்வுகாண முடியாதுள்ளது. என்றாலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தற்போது குழுவொன்று அமைத்துஇந்தப்பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கையெடுத்துள்ளோம்.

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேசசபைகளை அதிகரித்துள்ளமை குறித்து சந்தோஷமடைந்தாலும், தோட்டபுற மக்களுக்கு அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாத வகையில் 1987ஆம் ஆண்டு 33ஆம் இலக்கசட்டம் காணப்படுகிறது. இது இன்னமும் திருத்தப்படவில்லை. இதனைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துள்ளன. இச்சட்டம் திருத்தப்பட்டால்தான் மலையக மக்களுக்குதங்கு தடையின்றி அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும். இக்கட்டான சூழிலல் பொறுப்பேற்று இன்று ஒருகுறிப்பிட்ட அடைவு மட்டத்தை அடைந்துள்ளோம்.பல சவால்களை எதிர்க்கொண்டு எமது பயணம்தொடர்கிறது” 

மலையகத்திலே வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பது தொடர்பில் காணப்படக்கூடிய பிரச்சினைகளுக்கு அமைச்சின் கீழ் வரக்கூடிய நிறுவனங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. குறித்த அமைச்சுக்கு கீழாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியமும், சௌமியமூர்த்தி தொண்டமான ஞாபகார்த்த மன்றமுமே உள்ளது. இரண்டுமே முழுமையான அரச நிறுவனங்கள் இல்லை. நிதியம் கம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனம். மற்றையது ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடிய மன்றம்.

சௌமியமூர்த்தி தொண்டமான் இந்த நாட்டிற்காக மலையக மக்களுக்காக சேவையாற்றியவர் என்பதை மறுக்கவில்லை. அதனால்தான் பழைய பாராளுமன்றத்திற்கு முன்பு சிலையும் இந்த பாராளுமன்றத்தில் திருவுவருப்படமும் வைக்கப்பட்டு கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது பெயரில் உருவாக்கப்பட்ட மன்றம் பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டது. அந்த மன்றத்தின் பணிப்பளார் சபை உறுப்பினர்களாக சௌமிய மூர்த்தி தொண்டமான் குடும்பத்தினர் ஆயுட் கால உறுப்பினராகவும் அவரால் நியமிக்கப்படும் இருவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஒரு உறுப்பினரும் என ஒரு குழுவினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இவர்களுக்கு மேலதிகமாக இந்த மன்றத்தின் உறுப்பினர்களாக எதிர்கட்சி உறுப்பினரும் திறைசேரி உறுப்பினர் ஒருவரும் உள்வாங்கப்படும் போதும் இப்போதைய பிரதமர் எதிர்கட்சி தலைவராக இருந்த காலத்தில் ஒரு கூட்டத்திலேனும் கலந்துகொண்டிருக்கவில்லை. அதேபோல இப்போதைய எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கும் இந்த மன்றம் தொடர்பில் ஒரு பொறுப்பு இருக்கின்றது. மலையக மக்களின் அபிவிருத்தி விடயம் குறித்து அக்கறையுடன் பேசும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த அக்கறையுடன் பங்களிப்பும் செய்யக்கூடிய இடமாக எதிர்கட்சிதலைவர் என்ற பதவிநிலையில் இருந்து செயற்படல் வேண்டும்.

காரணம் இந்த மன்றத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கணக்கீடுகளில் உள்ள முறைகேடுகள் பற்றி கணக்காய்வாளர் அதிபதி திணைக்களம் விடுத்திருக்கும் அறிக்கையில் பல்வேறு மோசடிகள் வெளிப்பட்டுள்ளன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி கட்டட செலவுகளுக்காக மன்றத்தின் ஊடாக அரசாங்க நிதி கையாளப்பட்டுள்ளது. அதேபோல 90 ஊழியர்கள் பிரஜா சக்தி திட்டத்தின் ஊடாக நியமிக்கப்பட்டு சம்பளம் வழங்கப்பட்டிருப்பதுடன் அவர்களுக்கு எவ்வித நியமன கடிதங்களும் வழங்கப்படவில்லை. இதுபோல பல முறைகேடான நிதி கையாளுகை கணக்காய்வாளர் அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே இது பற்றி விசாரிக்க போரும் பொறுப்பு அந்த மன்றத்தின் பணிப்பாளர் என்ற வகையில் எதிர்கட்சி தலைவரான சம்பந்தன் ஐயாவுக்கு உண்டு. இந்த பாராளுமன்றத்திற்கும் உண்டு. கோப் குழுவுக்கு உண்டு. இவர்களின் தேவைக்காக இந்த அனைத்து ஆவணங்களையும் நான் பாராளுமன்ற சபைக்கு சமர்ப்பிக்கின்றேன். ஊழல் தொடர்பாக பேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கோப் குழுவில் அங்கம் வகிக்கின்றீர்கள் . அந்த குழுவின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கோப் போன்ற பாராளுமன்ற குழுக்கள் பொது முயற்சிகள் முறையான செயற்பாட்டையும் நிதி கையாளுகை கணக்கு வழக்கு முறைமையை ஆய்வு செய்கின்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசியல் கட்சியின் அமைப்புக்கு அரசாங்க நிதி பயன்படுத்தப்பட்டுள்ளமையை கண்க்காய்வு அறிக்கைக்கு கோப்பா குழுவே சுட்டிக்காட்டியுள்ளது.” எனக் குறிப்பிட்டார்.

Published in உள்நாடு

உடல்நலக் குறைவுகாரணமாக என்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்தார்.

பிறையாளன் என்று அழைக்கப்படும் மாமடு, சேவைப்பிலவு, நெடுங்கேணியைச் சேர்ந்த இரத்தினசிங்கம் ஆனந்தராசா (வயது 42) என்பவரே உயிரிழந்தார்.

இவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவில் பொறுப்பாளர் பதவியில் இருந்தவர். போரின் பின்னர் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.

கடந்த முதலாம் திகதி இவர் காய்ச்சல் என மாஞ்சோலை வைத்தியசாலை சென்றார். வைத்தியர்களின் ஆலோசனைப்படி விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றிரவு உயிரிழந்தார்.

"காய்ச்சல் என மருந்தெடுக்கச் சென்றார். என்ன வருத்தம் என்று வைத்தியர்கள் கூறவில்லை. வாட்டில் (விடுதி) நிற்கச் சொன்னார்கள். நேற்றுவரை வரை என்னுடன் தொலைபேசியில் பேசினார். வீட்டுக்கு வந்து விடுவேன் என்று சொன்னவர். ஆனால், திடீரென உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்" என ஆனந்தராசாவின் தந்தை இரத்தினசிங்கம் தெரிவித்துள்ளார்.

"நேற்றிரவு ஆனந்தராசாவுக்கு வலிப்பு ஏற்பட்டது. அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. அது பயனளிக்காது அவர் உயிரிழந்தார். என்ன நோய் என்பது கண்டறியப்படவில்லை. குருதி மாதிரி கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளது" என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Published in உள்நாடு
நாட்டிற்கு வருகை்தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த நவம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
 
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுற்றுலா பயணிகளின் வருகை 0.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில் சுமார் 1.8 மில்லியன் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
 
மெரிக்காவில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 9.9 சதவீதத்தாலும், சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை,3.5 சதவீதத்தாலும்,தெற்காசிய நாடுகளின் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2.7 சதவீதத்தாலும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
மத்திய வங்கியின் அறிக்கையின்படி, சுற்றுலா துறை வருவாயானது 2.9 சதவீதமாக அதிகரித்திருக்கின்ற அதேவேளை வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் சுற்றுலா துறையின் வருவாய் 2.66 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
எனினும் இந்த வருடத்தில் சுமார் 2.5 மில்லியன் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published in வணிகம்

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top