Items filtered by date: Saturday, 09 December 2017

வவுனியா - ஓமந்தை, அலகல்லுபோட்டகுளம் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஓமந்தை மத்திய கல்லூரியில் இருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி, ஓமந்தை பொலிஸ் நிலையம் வரை சென்றது.

இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவி வயிற்றுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் கர்ப்பம் தரித்துள்ளமை தெரிய வந்ததையடுத்து, பொலிஸார் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல அப்பேகமவில் நேற்று இடம்பெற்ற தேசிய பாடசாலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“பாடசாலை கல்வியை மேம்படுத்தும்நோக்கில் அனைத்து கல்வி வலயங்களிலும் மேலதிக ஆசிர்களுக்கான அமைப்பொன்று வழங்கப்படும். இதேபோன்று கல்வி அமைச்சின் கீழ் உள்ள அனைத்து வெற்றிடங்களும் வருடந்தோறும் வர்த்தமானியில் அறிவிக்கப்படும். கல்வித்துறையில் எந்தவொரு நியமனமும் அரசியல் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை“ என அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

Published in உள்நாடு

ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டபணிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து சைனா மேர்ச்சன் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டிய முதலீட்டுப் பெறுமதியில் 30 சதவீத நிதியை வழங்கும் நிகழ்வு இன்று பாராளுமன்ற கட்டத் தொகுதியில் இடம்பெற்றது.

300 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான காசோலை இதன்போது வழங்கப்பட்டது. இலங்கை அரசாங்கததுடன் ஒன்றிணைந்து இலங்கை துறைமுக அதிகாரசசபையும், சைனா மேர்ச்ன் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் கடந்த ஜூலை 29 ஆம் திகதி கைச்சாத்திட்ட ஹம்பாந்தோட்டை நிவாரண உடன்படிக்கை இன்று முதல் உத்தியோகபூர்வமான நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அரசாங்கமும், தனியார் துறையினரதும் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் இந்த உடன்படிக்கைக்கு அமைவாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் அதன் செயற்பாட்டு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “றுஹூணு பிரதேசத்தில் கைத்தொழில் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் என்றார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் பொதுமக்களுக்கு சுமையற்ற வகையில் அபிவிருத்தி செய்யப்படும். இது தொடர்பாக மக்களுக்கு வழங்கிய உறுதிமொழி நிறைவேற்றப்பட்டதாகவும் கூறினார்.

இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டையுடனான இலங்கை, இந்து மகா சமுத்திர பிராந்தியத்தில் இலங்கை கேந்திர நிலையமாக அபிவிருத்தி அடையும் என்றார். இதற்கு அமைவாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பொருளாதார வலயங்கள் பல ஏற்படுத்தப்படும்“ எனக் குறிப்பிட்டார்.

Published in உள்நாடு

“தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (இலங்கைத் தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (டெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்), ஆகியோர் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகளோடு எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் கலந்துரையாடியதற்கு அமைய எதிர்வரும் தேர்தல் தொடர்பிலான அனைத்து பிரச்சினைகளுக்கும் சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் “தேர்தலுக்கான விண்ணப்பங்கள் இலங்கை தமிழரசு கட்சியின் பெயரிலும் சின்னத்திலும் (வீடு) கையளிக்கப்படும்.

வடக்கு கிழக்கிலுள்ள வாக்காளர்களிடம் இலங்கை தமிழரசுக் கட்சியின் கீழ் அதன் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பூரண ஆதரவு நல்குமாறு ஆர்வமுடன் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Published in உள்நாடு

அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரதும் இடமாற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து பொலிஸ் மா அதிபரால் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், தலைமையக பொலிஸ் பரிசோதகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று முதல் பெப்ரவரி 15ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Published in உள்நாடு

“சுய நலம் மேலோங்கும் போது இவ்வாறான பிளவுகள் ஏற்படுவது வழக்கம். அதே சுயநலமே அந்தப் பிளவுகளைச் சரி செய்யவும் உதவும்.“ என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையில் உருவாகியிருக்கும் பிளவுநிலை தொடர்பாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“1949இல் கொள்கை நிமித்தம் தந்தை செல்வா தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்தார். யுத்தம் முடிவடையும் தறுவாயில் சுயநலம் காரணமாக பிரபாகரனை விட்டு சிலர் வெளியேறினர். ஆகவே, பிளவுகள் கொள்கை நிமித்தமும் ஏற்படக் கூடும், சுயநல காரணங்களுக்காகவும் ஏற்படலாம்.

இன்றைய பிளவு நிலை எவ்வாறு ஏற்பட்டதென்பதை நீங்களே ஆய்தறிந்து கொள்ளுங்கள். அது அரசியல் அவதானியரின் வேலை.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது கொள்கைகளை எமது மக்களின் நெடுங்கால பாதுகாப்பிற்கும் அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் ஏற்றவாறு மாற்றி, யாவரையும் உள்ளடக்கி ஒற்றுமையுடன் ஒரு பலமான அரசியல் கட்சியாகப் பரிணமிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு”என தெரிவித்துள்ளார்.

Published in உள்நாடு

2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின்  மூன்றாவது வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 155 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதோடு, எதிராக 56 வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளன.

Published in உள்நாடு

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top