ஏலத்தில் விலை போகாத கெய்ல்

ஏலத்தில் விலை போகாத கெய்ல்

பாகிஸ்தான் சூப்பர் லீக் 2018 சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட்டின் 3-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. 

இதற்கான வீரர்கள் ஏலம் நேற்று நடைபெற்றது. 308 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 501 பேர் இடம்பிடித்திருந்தனர். இதில் கிறிஸ் கெய்லும் ஒருவர். ஆனால்இ எந்த அணி உரிமையாளர்களும் கிறிஸ் கெய்லை ஏலம் எடுக்கவில்லை.

சமீப காலமாக கெய்ல் தேர்ச்சியின்றி தவிக்கிறார். அதுமட்டுமல்லாது 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலககிண்ண போட்டியின் தகுதி சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாட உள்ளதால் அவ் உலககிண்ண தகுதிச் சுற்றில் கிறிஸ் கெய்லும் விளையாட வாய்ப்புள்ளது. இதனால் கிறிஸ் கெய்லை அணியில் எடுத்தாலும் அவரால் முழுத்தொடர் முழுவதும் விளையாட முடியாது.

இதனால்தான் அவரை உரிமையாளர்கள் ஏலத்தில் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top