இலங்கை அணியை கண்டு வியந்த கோஹ்லி

இலங்கை அணியை கண்டு வியந்த கோஹ்லி

“இலங்கை அணி ஒரு இலக்கை நோக்கி சென்றமை மற்றும் அவர்களின் நம்பிக்கையை நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் அவதானிக்க முடிந்ததாக“ இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் பின், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“இந்த டெஸ்ட் தொடர் தனிப்பட்ட ரீதியில் எனக்கு  எனது அணி வீரர்களுக்கு சிறப்பானதாக அமைந்திருந்தது. தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் எவ்விதமான சவால்களையும் எதிர்க்கொள்ள முடியும். நான் அணியின் தலைமைப் பதவியை பெற்றிராத போது, அணியில் காணப்பட்ட சிரமங்கள், மற்றும் தலைவர் ஒருவர் முகங்கொடுக்க வேண்டிய சவால்களை அறிந்திருக்க வில்லை.

இலங்கை அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். இறுதி நாளில் இலங்கை அணி வீரர்கள் மிகவும் இக்கட்டான நிலையில் களமிறங்கிய போதும், எமது அணி வீரர்களுக்கு விக்கெட்டுக்களை கைப்பற்ற எவ்வித வாய்ப்புக்களையும் வழங்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top