இந்தியாவுடனான டெஸ்ட் பொட்டியில் டிவிலியர்ஸ், ஸ்டெயின்

இந்தியாவுடனான டெஸ்ட் பொட்டியில் டிவிலியர்ஸ், ஸ்டெயின்

தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஏபி டி வில்லியர்ஸ். காயம் காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.

ஒருநாள் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். ஒருநாள் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார்.

சமீபத்தில் தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்து சென்று விளையாடியது. இந்த தொடருக்குப்பின் எதிர்காலம் குறித்து முடிவு செய்வதாக கூறினார்.

இந்தியா அடுத்த வருடம் முதல் வாரத்தில் தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடவிருக்கின்றது.

இந்த தொடரில் டி வில்லியர்ஸ் விளையாட வேண்டும் என்று தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் சபை கூறியுள்ள நிலையல், ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்து விட்டு டெஸ்ட் போட்டியிலும் விளையாட டி வில்லியர்ஸ் முடிவு செய்துள்ளார்.

அதேபோல் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக விளையாடாமல் இருக்கும் ஸ்டெயினும் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் குழாமில் இடம்பிடித்துள்ளார்.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top