இனி 2020 வரை டெல்லியில் போட்டிகள் நடைபெறாது

இனி 2020 வரை டெல்லியில் போட்டிகள் நடைபெறாது

டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டினால் தங்களால் இயல்பாக ஆட முடியவில்லை, சுவாச பிரச்சினை ஏற்படுகிறது என்று இலங்கை வீரர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.

இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், அடுத்த 2 ஆண்டுக்கு டெல்லியில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தப்படாது என்பது தெரியவந்துள்ளது.

அதற்கு காரணம், காற்று மாசு கிடையாது என்னும். இந்திய கிரிக்கெட் சபையானது சுழற்சி முறைப்படி தான் ஒவ்வொரு மாநிலத்துக்கும் கிரிக்கெட் போட்டிகளை ஒதுக்குகிறது.

அந்த வகையில் இனி 2020 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை டெல்லியில் சர்வதேச போட்டிக்கு வாய்ப்பில்லை.

கிரிக்கெட் வாரியத்தின் வருங்கால கிரிக்கெட் தொடர் அட்டவணைப்படி 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மார்ச் மாதத்தில் தான் இனி டெல்லிக்கு சர்வதேச போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய கிரிக்கெட் சபையைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top