2018 களத்தில் “சென்னை சூப்பர் கிங்ஸ்”

2018 களத்தில் “சென்னை சூப்பர் கிங்ஸ்”

2018ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி மீண்டும் களமிறங்க உள்ளார்.

சூதாட்ட புகாரால் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாட 2015 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

2 ஆண்டுகள் தடைக்காலம் முடிந்ததால், வரும் ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் பங்கேற்க உள்ளன.

டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, இரு அணிகளிலும் ஏற்கனவே இருந்த 5 வீரர்களை மீண்டும் தக்க வைத்துக்கொள்ள

உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மற்ற வீரர்களை குஜராத், புனே அணிகளில் இருந்து ஏலம் மூலம் தேர்வு செய்யவும் கூறியுள்ளது.

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top