இங்கிலாந்திடம் இருந்த ஆஷஸ் கிண்ணத்தை கைப்பற்றியது அவுஸ்திரேலியா

இங்கிலாந்திடம் இருந்த ஆஷஸ் கிண்ணத்தை கைப்பற்றியது அவுஸ்திரேலியா

2017-2018 இங்கிலாந்துக்கு எதிரான ஆஸஷ் டெஸ்ட் கிரிக்கட் தொடரை அவுஸ்திரேலியா அணி 4 க்கு 0 என கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற 5வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்தபோட்டியில் அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி 7 விக்கட்டுக்களை இழந்து 649 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 346 ஓட்டங்களையும் 2வது இன்னிங்ஸில் 180 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

இதற்கமைய முன்னதாக இடம்பெற்ற 4 போட்டிகளில் ஒரு போட்டி சமநிலையில் நிறைவடைந்த நிலையில், ஏனைய 3 போட்டிகளிலும் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றிருந்தது.
இந்தநிலையில், இங்கிலாந்திடம் இருந்த ஆஷஸ் கிண்ணத்தை அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top