தென்னாபிரிக்காவுடனான முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி

தென்னாபிரிக்காவுடனான முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி

இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிக்களுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 72 ஓட்டங்காளால் வெற்றிப்பெற்றது.

போட்டியில் தென்னாபிரிக்க அணி தமது முதலாவது இனிங்சில் 286 ஓட்டங்களையும் இரண்டாவது இனிங்சில் 130 ஓட்டங்களையும் பெற்றது. இந்திய அணி தமது முதல் இனிங்சில் 209 ஓட்டங்களையும் இரண்டாவது இனிங்சிற்காக 135 ஓட்டங்களையும் பெற்றது.

பந்து வீச்சில் இரு அணிகளின் வீரர்களும் சிறப்பாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தோல்வி குறித்து இந்திய அணித்தலைவர் நமது பந்துவீச்சாளர்கள் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர் எனினும் துடுப்பெடுத்தாட்ட வரிசையிலேயே நாம் தவறிழைத்துவிட்டோம். 70 ஓட்டங்களை பெற்றுத்தர நான் உட்பட எந்த வீரருக்கும் முடியாமல் போனது. அதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது எனினும் எதிர்வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பொம் என தெரிவித்திருந்தார்.

இதன்படி 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்க அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது.

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top