கோஹ்லியின் ஆட்டமிழப்பால் ரசிகர் தீக்குளித்து தற்கொலை

கோஹ்லியின் ஆட்டமிழப்பால் ரசிகர் தீக்குளித்து தற்கொலை

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், கேப்டன் விராட் கோஹ்லி  5 ஓட்டங்களால் ஆட்டமிழந்ததால் அவரின்  63 வயது ரசிகர் தீக்குளித்து தற்கொலைசெய்துகொண்டார்.  

மத்தியப்பிரதேச மாநிலம் ரத்லம் அம்பேத்கர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் பாபுலால் பாரியா, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர், விராட் கோலியின் தீவிர ரசிகராக இருந்துள்ளார்.

தற்போது,  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில், விராட் கோலி  5 ஓட்டங்களில்  ஆட்டமிழந்தார். இப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. போட்டி நிறைவடைந்ததிலிருந்து சோகமாக இருந்த பாபுலால் பாரியா, நேற்று தீக்குளித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

 

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top