இந்தியா - தென் ஆபிரிக்கா! இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பமானது

இந்தியா - தென் ஆபிரிக்கா! இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பமானது

இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்சூரியன் மைதானத்தில் இன்று ஆரம்பமானது.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இந்நிலையில், இந்திய அணி தமது அணயில் இரு மாற்றங்களுடன் இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளது.

ஷிக்கர் தவானிற்கு பதிலாக லோகேஷ் ராஹூலையும், விக்கெட் காப்பாளர் சஹாவிற்கு பதிலாக பார்தீவ் பட்டேலையும் இணைத்துக்கொண்டுள்ளது.
தென்னாபிரிக்க அணியில் லுங்கி என்கிடி தனது முதலாவது டெஸ்ட் பொட்டியில் களமிறங்குகின்றார்.

முதலாவது போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்திய அணி இந்தப் பொட்டியில் வெற்றி பெறும் நோக்குடனும், தென்னாபிரிக்க அணியானது மீண்டும் வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றும் எண்ணத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top