டெஸ்ட் அணிக்கு புதிய உபதலைவரானார் சுரங்க லக்மமால்

டெஸ்ட் அணிக்கு புதிய உபதலைவரானார் சுரங்க லக்மமால்

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கை அணியின் உப தலைவராக சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 31 ஆம் திகதி சிட்டாகோங் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை டக்காவில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணிக்கு புதிய உபதலைவராக சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் புதிய பயிற்றுவிபாளராக சந்திக ஹதுரசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்பு இலங்கை அணி விளையாட்டு பயிற்சிகளையும் உள நலப் பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தது.

தொடர்ந்து கடந்த 8 ஆம் திகதி ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளின் தலைவராக தலைவர் பதவியிலிருந்து விலகிய மெத்யுஸ் மீண்டும் அணித்தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top