தோனியின் புதிய மைல்கல்

தோனியின் புதிய மைல்கல்

தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரா இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய விக்கட் காப்பாளர் மகேந்திரசிங் தோனி மற்றுமொரு மைல்கல்லை எட்டினார்.

இதுவரை தோனி ஒருநாள் அரங்கில் 294 பிடியெடுப்புக்கள், 105 ஸ்டெம்பிங் என மொத்தமாக 399 ஆட்டமிழப்புக்களை மேற்கொண்டிருந்தார்..

இந்நிலையில் நேற்றைய போட்டியின் பொது தென் ஆப்ரிக்க அணித்தலைவர் மார்க்ராமை ஸ்டெம்பிங் செய்த தோனி, ஒருநாள் அரங்கில் தனது 400 வது ஆட்டமிழப்புக்களை மேற்கொண்ட வீரர் என பதிவாகியுள்ளார்.

இதன் மூலம் ஒருநாள் அரங்கில் 400 விக்கட் வீழ்ச்சிக்கு காரணமான நான்காவது விக்கட் காப்பாளர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.

இது தவிர, இம்மைல்கல்லை எட்டிய முதல் இந்திய விக்கட் காப்பாளர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.

இப்பட்டியலில் இலங்கையின் சங்ககரா (482 விக்கட்), அவுஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (472 விக்கட்), தென் ஆப்ரிக்காவின் மார்க் பவுச்சர் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top