பங்களாதேஷ் அசத்தலான பந்துவீச்சு: 222 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை

பங்களாதேஷ் அசத்தலான பந்துவீச்சு: 222 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 222 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது.

மின்பூர் மைதானத்தில் ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசால் மெண்டிஸ் 68 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார். மறுமுனையில் கருணாரத்ன 3 ஓட்டங்கள், தனஞ்சய டி சில்வா 19 ஓட்டங்கள், குணதிலக 13 ஓட்டங்கள் மற்றும் சந்திமால் ஓட்டங்கள் எதுவுமின்றி வரிசையாக ஆட்டமிந்தனர்.

எனினும் சற்று நிலைத்து அணியின் ஓட்ட இலக்கை சற்று உயர்த்திய ரொஷான் சில்வா 56 ஓட்டங்களையும், டில்ருவான் பெரேரா 31 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

பங்களாதேஷ் அணிசார்பில் 4 வருடங்களுக்கு பின்னர் அணிக்கு திரும்பிய அப்துல் ரஷாக் மற்றும் தாஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா 4 விக்கட்டுகளை வீழ்த்த, முஷ்தபிசூர் ரஹ்மான் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top