இரண்டாவது நாளில் இலங்கை ஸ்தீரமான நிலையில்

இரண்டாவது நாளில் இலங்கை ஸ்தீரமான நிலையில்

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸஸட் போட்டியின் இன்றைய இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி ஸ்தீரமான நிலையை அடைந்துள்ளது.

தமது இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவின்போது எட்டு விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதனடிப்படையில் இலங்கை அணி 2 விக்கெட் கைவசமிருக்க பங்களாதேஷ் அணியைவிட 312 ஓட்டங்களால் முன்னிலைப் பெற்றுள்ளது.

முன்னதாக இலங்கை அணி தமது முதல் இனிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களையும், பங்களாதேஷ் அணி தமது முதல் இனிங்சில் 110 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.

போட்டியின் முதல் நாளான நேற்றைய தினம் மாத்திரம் மொத்தமாக 14 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டதோடு, (இலங்கை – 10, பங்களாதேஷ் – 04) இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் டெஸ்ட் போட்டிகளில் தகது 100ஆவது விக்கெட்டினை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top