தென்னாபிரிக்க மண்ணில் இந்திய அணியின் ஆதிக்கம்

தென்னாபிரிக்க மண்ணில் இந்திய அணியின் ஆதிக்கம்

தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்று வருகின்ற ஒருநாள் தொடரினை இந்தியா 4-1 என்ற நிலையில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற 5 ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 73 ஓட்டங்களால் வெற்றிப்பெற்று தொடரை 4க்கு ஒன்று என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பொடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 274 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ரோஹித் சர்மா 115 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பதிலளித்த தென்னாபிரிக்க அணி 42.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 201 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்க மண்ணில் இந்திய அணி முதல் முறையாக ஒருநாள் போட்டித் தொடர் ஒன்றை வெற்றிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top