வாட்ஸ்அப்பில் புதிய செயலி

வாட்ஸ்அப்பில் புதிய செயலி

ஆப்பிள் ஐபேட் பயன்படுத்துவோருக்கென பிரத்யேக செயலி ஒன்றை வாட்ஸ்அப் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் சார்ந்த தகவல்களை வழங்கி வரும் WABetaInfo சமீபத்திய டுவிட்டர் பதிவில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

வாட்ஸ்அப் புதிய அம்சங்கள் சார்ந்த நம்பத்தகுந்த தகவல்களை வழங்கி வரும் WABetaInfo வெளியிட்டுள்ள தகவல்களில் வாட்ஸ்அப் புதிய செயலியை வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் பலமுறை இதுகுறித்த தகவல்கள் வெளியான நிலையில், வாட்ஸ்அப் டெஸ்க்டாப் 0.2.6968 பதிப்பில் புதிய அம்சங்கள சார்ந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதியும் சோதனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் UPI மூலம் வாட்ஸ்அப் செயலியிலேயே பணம் அனுப்ப வழி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்கும் வசதி வழங்கப்பட்டது. இதுமட்டுமின்றி லைவ் லொகேஷன், எமோடிகான் உள்ளிட்ட புதிய வசதிகள் வழங்கப்பட்டது.

வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களும் தாங்கள் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்க முடியும். இந்த அம்சம் அனுப்புவோரின் போன் மட்டுமின்றி அதனை பெறுபவரின் ஸ்மார்ட்போனிலும் அழிக்கப்பட்டு விடும். இந்த அம்சத்தை இயக்க குறிப்பிட்ட குறுந்தகவலை தேர்வு செய்து டிராஷ் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

கிளிக் செய்ததும் குறுந்தகவல் உங்களுக்கு மட்டும் அழிக்கப்பட வேண்டுமா அல்லது அனைவருக்கும் அழிக்கப்பட வேண்டுமா என்ற ஆப்ஷன் பாப் அப் மூலம் திரையில் தோன்றும். இதில் அனைவருக்கும் அழிக்கக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ததும் நீங்கள் அனுப்பியவருக்கும் குறுந்தகவல் அழிக்கப்பட்டு விட்டதை தகவல் மூலம் தெரிவிக்கப்படும்.

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top