அமெரிக்காவை பின்தள்ளிய சிங்கப்பூர்

அமெரிக்காவை பின்தள்ளிய சிங்கப்பூர்

ஐக்கிய நாடுகள் சபையின் தொலைத்தொடர்பு அமைப்பு வெளியிட்ட அதிகூடிய இணைய பாதுகாப்புகளைக்கொண்ட நாடுகளின் தரவரிசைப்பட்டியலில் சிங்கப்பூருக்கு முதலாம் இடம் வழங்கப்பட்டுள்ளது.

2 தொடக்கம் 5 ஆம் இடங்கள் அமெரிக்கா, மலேசியா, ஓமான் மற்றும் எஸ்டோனியா போன்ற நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

குறித்த பட்டியல் 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையிலேயே தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

165 நாடுகள் இடம்பிடித்துள்ள இப்பட்டியலில் இந்தியாவுக்கு 23ஆவது இடமும், இலங்கைக்கு 72ஆவது இடமும் கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top