6 மாத ஆராய்ச்சிக்காக விண்வெளிக்கு பறந்தது சொயுஸ் எம்எஸ்-07 (காணொளி)

6 மாத ஆராய்ச்சிக்காக விண்வெளிக்கு பறந்தது சொயுஸ் எம்எஸ்-07 (காணொளி)

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 6 மாதகால பயணமாக 3 பேர் அடங்கிய விண்வெளி குழுவினர் நேற்று புறப்பட்டு சென்றுள்ளனர்.

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஸ்கொட் டிங்கில், ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் அன்டன் ஷ்கபிலரோவ், ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் நோரிஷிகே கனாய் ஆகிய மூவரடங்கிய குழு விண்வெளி பயணத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் ரஷ்யா தயாரித்துள்ள சொயுஸ் எம்எஸ்-07 (SOYUZ MS-07)விண்கலத்தில் புறப்பட்டனர்.

கசகஸ்தானிலுள்ள பைக்கானூர் விண்வெளி தளத்திலிருந்து நேற்று பிற்பகல் இவர்களது விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணமானது. இந்தக் குழு விண்வெளி நிலையத்தில் 6 மாதம் தங்கி பல்வேறு ஆராய்ச்சிகளில் தீவிரமாக ஈடுபடவுள்ளது.

இதுதொடர்பாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்கலமானது, வரும் செவ்வாய்க்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று பேரில் டிங்கிள், கனாய் ஆகியோர் முதன்முறையாக விண்வெளிக்குச் சென்றுள்ளனர். அதேவேளை பிளைட் கமாண்டர் ஷகபிலரோவ், 2 முறை விண்வெளிக்குச் சென்று வந்த அனுபவமுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Calendar

« January 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
Go to top