நாசகாரிகளுக்கு நாமமிடல்

நாசகாரிகளுக்கு நாமமிடல்

மனித உயிர்கள் இயற்கை அனர்த்தங்களால் காவுகொள்ளப்படுவது இயற்கையானது. உலக சமனிலையைப் பேணுவதற்கு இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் உதவுவதாக பலரும் கூறிவந்தாலும் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை சிலரிடம் இருக்கத்தான் செய்கின்றது.

உலகம் முழுவதும் வருடத்திற்கு 80 முதல் 100 சதவீதமான சூறாவளிகள் உருவாகுவதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. வடஇந்து சமுத்திர பிராந்தியத்தில் வருடாந்தம் 4 முதல் 6 சதவீதமான சூறாவளிகள் உருவாகின்றன. அதேவேளை, வருடாந்தம் உலகம் முழுவதும் உருவாகும் சூறாவளிகளில் 5 சதவீதமானவை வங்காள விரிகுடா பிராந்தியத்திலும், ஒரு சதவீதமானவை அரேபியக் கடல் பிராந்தியத்திலும் உருவாகின்றன.

வங்காள விரிகுடா மற்றும் அரேபியக் கடற்பகுதியில் உருவாகும் சூறாவளிகள் இலங்கையில் தாக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்திவருகின்றதை காணமுடிகின்றது.

இவ்வாறு இலங்கைத் தீவைச் சூழவுள்ள பிராந்தியங்களில் உருவாகும் சூறாவளிகள் அநேகமாக மேற்கு அல்லது வடமேற்கு திசைகளில் காணப்படுவதனால் அரேபியக் கடல் பிராந்தியங்களில் தோன்றும் சூறாவளியால் இலங்கைக்கு நேரடியாக பாதிப்புகள் இல்லை.

வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தாலேயே புயல்கள் உருவாகின்றன. எப்பொழுதெல்லாம் காற்று சூடாகிறதோ, அது விரிந்து இலேசாகிறது. இலேசான காற்று மேலே செல்கிறது. அது ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்ப கனமான குளிர்ந்த காற்று ஓடோடிச் செல்கிறது. இந்தக் காற்று செல்லும் வேகம் காரணமாகவே புயல்கள் உருவாகுகின்றன.

 

 

 

image.jpg

 

புயலின் வகைகள்

புயலின் வேகம் மற்றும் அதனால் ஏற்படும் தாக்கத்தை அளப்பதற்கு 'ஓர் அளவுகோல் தேவை என்பது தொடர்பில் 19ஆம் நூற்றாண்டில் ஆராயப்பட்டது. குறித்த காலப்பகுதியில் பிரித்தானிய இராணுவ அட்மிரலாக இருந்த சார் பிரான்சிஸ் பீபோர்ட் என்பவர் புயலை வகைப்படுத்த ஓர் அளவு கோலை உருவாக்கியிருந்தார்.

உருவாக்கப்பட்ட அளவுகோலின்படி பூஜ்ஜியம் என்றால் எதுவுமே அசையாது. 5 என்றால் மிதமான தென்றல் காற்று. 8 என்றால் ஓரளவு புயல் காற்று (எச்டூஞு), மரக்கிளை களுக்கு பாதிப்பு ஏற்படாலாம், 10 என்றால் புயல் காற்று (குtணூணிட்).

11 தொடங்கி 17 வரையிலான வேகத்தில் வீசும் காற்றுகள் வெப்பமண்டலப் புயல்களாகவும் இவை அனைத்துமே மணிக்கு 74 கிலோமீட்டர்  வேகத்துக்கு அதிகமாக காற்று வீசுபவையாகவும் கணிக்கப்படுகின்றன.

அதேநேரம் புயல் என்பது உலக நாடுகளில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது. அமெரிக்காவில் Tornado (சுழன்றடிக்கும் சூறாவளி), ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிகளில்  Willy Willy என்றும், மேற்கிந்திய தீவுகளில் ததணூணூடிஞிச்ணஞு (சூறாவளி) என்றும், அதேவேளை, சீனக் கடற்பிராந்தியங்களில் கூதூணீணிணிண  (சூறாவளிப் புயல்), இந்தியப் பெருங்கடல் பகுதியில் Cyclone (புயல்) எனப்படுகிறது. இவை அனைத்தும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும் அதன் பொருள் ஒன்றுதான்.

சூறாவளிக்கு பெயர் சூட்டுதல்

வானிலை ஆய்வாளர்களும், கடற்றொழிலாளர்களும், பொதுமக்களும் வானிலை முன்னறிவிப்புகளைத் தெளிவாக புரிந்துகொண்டு செயற்படுவதற்கும் நினைவில் வைத்துக்கொள்வதற்கும் வசதியாகவே  சூறாவளிகளுக்கு பெயர் வைக்கப்படுகின்றது. இவ்வாறு பெயர் வைப்பதால், புயலால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து ஓரளவேனும் தப்பிக்க வாய்ப்புகள் உள்ளன.

ஒரே கடற்பிராந்தியத்தில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம். அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே  மற்றொரு புதிய புயல் உருவாகலாம். ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் நகர்கின்றது என்பதை உடனடியாக அறிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவே இவ்வாறு புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம் வந்துள்ளது.

புயலுக்கு இலக்கங்கள் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை  இதன்மூலம் தவிர்த்துக்கொள்ளமுடியும். எனினும், இவ்வாறு பெயர்கள் வழங்கப்படும்போது அப்பெயர்கள் சுருக்கமாக இருக்கவேண்டும் என்பதே அடிப்படையான விதி.

ஆஸ்திரிலேயாவின் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகளுக்கு அதிக நகைச்சுவை உணர்வு இருந்திருக்க வேண்டும். அதனால்தான் ஆரம்பத்தில் இவ்வாறு தோன்றும் புயல்களுக்கு மக்களிடத்தில் பிரபல்யம் இல்லாத அல்லது தோற்றுப்போன அரசியல்வாதிகளின் பெயர்களை சூட்டி மகிழ்ந்தனர்.

இரண்டாம் உலகப் போர்க் காலத்தில்   குறிப்பாக, 1939 ஆண்டு தொடக்கம் 1945 ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கம் வானிலை ஆய்வாளர்களிடம் காணப்பட்டது.

பின்னர் இந்த வழக்கத்தை அமெரிக்காவும் கடைப்பிடிக்க ஆரம்பித்தது. குறிப்பாக, 1953ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெரும் அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்கு பெண்களின் பெயர்களை வைப்பது ஆணாதிக்கத்தைக் காட்டுவதாகச் சுட்டிக்காட்டிய பெண்ணியவாதிகளால் புயல்களுக்குப் பெண்களின் பெயர்கள் வைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இது நீண்ட விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு பின்னர் 1978ஆம்  ஆண்டுமுதல் ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர்வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. புதுடில்லியிலுள்ள உலக வானிலை அமைப்பின் வானிலை ஆய்வு மையம் 2004ஆம் ஆண்டு செப்டெம்பரிலிருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.

50 ஆண்டுகளுக்குப் பின்னர் 2004ஆம் ஆண்டு இலங்கையும் புயல்களுக்குப் பெயர் சூட்டும் நடைமுறையை உள்வாங்கிக்கொண்டது. அதே ஆண்டில் வங்காள விரிகுடா மற்றும் அரேபிய கடற்பிராந்தியங்களில் உருவாகும் புயல்களுக்கும் பெயர் வைக்க ஆரம்பித்தனர்.

காலப்போக்கில் புயல்களுக்குப் பெயர் வைப்பதற்காக வடஇந்திய சமுத்திரத்தில் அமைந்துள்ள இலங்கை, இந்தியா, மாலைதீவு, ஓமான், பாகிஸ்தான், பங்களாதேஷ், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் இணைந்து ஒரு கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டன.

குறித்த 8 நாடுகளும் இணைந்து தாங்கள் விரும்பும் பெயர்களைப் பரிந்துரைத்து ஒரு பட்டியல் உருவாக்கப்படும். இதில் ஒவ்வொரு புயலுக்கும் ஒவ்வொரு பெயர் அடுத்தடுத்து சுழற்ச்சி முறையில் சூட்டப்படுகிறது.

குறித்த நாடுகள் கொடுத்துள்ள 64 பெயர்களில் 24 பெயர்கள் இதுவரை உருவான புயல்களுக்கு சூட்டப்பட்டுள்ளன. 1990 ஆண்டுக்குப் பிறகு வடஇந்திய பெருங்கடலில் உருவாகிய முதல் சூறாவளிக்கு பாகிஸ்தான் "லைலா' எனவும், அதே ஆண்டு நவம்பர் மாதம் உருவாகியிருந்த சூறாவளிக்கு "ஜல்' என இந்தியாவால் பெயர் சூட்டப்பட்டிருந்தது.  குறித்த சூறாவளியால் இலங்கையில் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை என்றபோதிலும், இந்தியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறிருக்க, தற்போது இலங்கை, இந்திய நாடுகளை மிரட்டிவிட்டுச் சென்ற புயலுக்கு  "ஓகி' என்று பங்களாதேஷ் பெயர் சூட்டியிருந்தது. இதற்கு தாய்லாந்து மொழியில் கடல் நட்சத்திரம் என்பது பொருள். ஒவ்வொரு நாடுகளும் புயலுக்குப் பெயர் சூட்டும் மரபின்படி அண்மையில் ஏற்பட்டிருந்த புயலுக்கு பங்களாதேஷûம் "ஓகி' என்று பெயர் வைத்திருந்தது.

வங்காள விரிகுடாவில் சமீபத்தில் உருவான புயல்களுக்கு  பைலின், ஹெலன், லெஹர்.என பெயரிடப்பட்டன. அடுத்து வரவிருப்பது "மடி' புயல். இந்தப் பெயர்களுக்குப் பின்னால் பல்வேறு அர்த்தங்கள் காணப்படுகின்றன.

பைலின் என்றால் நீலக்கல், ஹெலன் என்றால் பிரகாச ஒளி, லெஹர் என்றால் அலை இப்படி எல்லா நாசகாரி புயல்களுக்குப் பின்னாலும் ஒவ்வொரு   நாமங்கள் இடப்பட்டுள்ளன.

பா.நிரோஸ்

Latest News

Calendar

« February 2018 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28        
Go to top