Items filtered by date: Saturday, 11 November 2017

உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவது சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் சம்பந்தமான தகபவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கான திகதி ஒன்றை தீர்மானிப்பதற்கு குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடப்படுவது கட்டாயமாகும்

இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌயியிடப்பட்டதன் பின்னர் தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

லெபனான் பிரதமராக இருந்த சாத் ஹரிரி சவுதி தலைநகரான ரியாத்தில் தனது பதவி விலகலை அறிவித்து சில நாட்கள் கடந்த நிலையில், சவுதி அரேபியா லெபனான் நாட்டுக்கு எதிராகப் போரை அறிவித்துள்ளதாக லெபனானின் பலம் வாய்ந்த ஹெஸ்புல்லா ஷியா அமைப்பு தலைவர் ஹசன் நஸ்ரல்லா குற்றஞ்சாட்டியுள்ளார்.

சாத் ஹரிரியின் விருப்பத்திற்கு மாறாக சவுதி அவரை வைத்துள்ளதாக ஹசன் நஸ்ரல்லா கூறியுள்ளார். லெபனானுக்கு எதிராக இஸ்ரேலை சவுதி தூண்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரியாத்தில் இருந்து ஒளிபரப்பான தொலைக்காட்சி ஒன்றில் தோன்றிய லெபனான் பிரதமராக இருந்த சாத் ஹரிரி, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறினார்.

இந்நிலையில், சாத் ஹரிரி நாடு திரும்ப வேண்டும் என லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவுன் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சாத் ஹரிரி சவுதியில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், சவுதி விடுக்கும் உத்தரவைச் செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவுன், சாத் ஹரிரியின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை.
''லெபனானுக்கு எதிராகவும், ஹெஸ்புல்லா அமைப்புக்கு எதிராகவும் சவுதியும், சவுதி அதிகாரிகளும் போரை அறிவித்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது'' என ஹசன் நஸ்ரல்லா கூறியுள்ளார்.

லெபனானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையில் ஈடுபட, இஸ்ரேலுக்கு பில்லியன் கணக்கிலான பணத்தை கொடுக்க சவுதி தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் இளைஞராக இருந்தபோது ஒருவரை கத்தியால் குத்தி கொன்றதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே கூறியுள்ளார்.

"எனக்கு பதினாறு வயதிருக்குபோது யாரோ ஒருவரை கொன்றேன்," என்று வியட்நாமின் நகரமான டா நாங்கில் நடைபெற்ற ஒரு பிராந்திய மாநாட்டின்போது அவர் தெரிவித்தார்.

டுடெர்டே "வேடிக்கையாகவே" அவ்வாறு பேசியதாக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக, டாவோ மேயராக இருந்தபோது சந்தேகத்திற்குறிய குற்றவாளிகளை தானே கொன்றதாக டுடேர்டே தெரிவித்திருந்தார்.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே, மற்ற பிராந்திய தலைவர்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொள்ளும் ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.

டுடெர்டே பிலிப்பைன்ஸில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டவர்களை நீதிக்கு புறம்பாக கொல்லப்பட்டதை ஊக்குவித்தார்.

மேலும், அந்நாட்டில் போதைக்கு அடிமையான மூன்று மில்லியன் மக்களை "படுகொலை செய்தால் மகிழ்ச்சியடைவேன்" எனவும் குறிப்பிட்டிருந்தார்.

பிலிப்பைன்ஸ் மக்களுக்காக உரையாற்றிய டுடெர்டே, தனது இளமைக்காலத்தின்போது ஒருவரை கொன்றதாகவும், மேலும் அப்போது பல சண்டைகளில் ஈடுபட்டு "சிறைக்கு பலமுறை சென்று வந்ததாகவும்" தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் மனித உரிமை பதிவுகள் அடுத்தவாரம் மீளாய்வு செய்யப்படவுள்ளன.

மனித உரிமைகள் பேரவையில், பூகோள கால மீளாய்வு அமர்வு கடந்த 6ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் இலங்கையின் மனித உரிமைகள் பதிவுகள் குறித்த மீளாய்வு வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

மூன்றாவது தடவையாக, இடம்பெறவுள்ள இந்த மீளாய்வு நேரலையான இணையத்தில் ஒளிபரப்பப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மீளாய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தேசிய கொள்கைகள், பொரளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழு ஜெனிவா செல்லவுள்ளது.

இலங்கை குறித்த மீளாய்வின் போது, சிறிலங்கா அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட தேசிய அறிக்கை, சுதந்திரமான மனித உரிமை நிபுணர்கள், குழுக்கள், சிறப்பு அறிக்கையாளர்கள், மனித உரிமை அமைப்புகள், ஏனைய ஐ.நா அமைப்புகளின் தகவல்களை உள்ளடக்கிய அறிக்கைகள், தேசிய மனித உரிமைகள் நிறுவகங்கள் பிராந்திய அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புர்களை உள்ளடக்கிய ஏனைய பங்காளிர்களின் அறிக்கைகள் என்பனவற்றின் அடிப்படையில் இந்த மீளாய்வு இடம்பெறும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள், பாதிக்கப்பட்டவர்கள், உறவினர்களுக்கான இழப்பீடு, குற்றமிழைத்தவர்களை நீதியின் முன் கொண்டு வருதல், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள், பயங்கரவாத தடைச்சட்டம், காணாமல் போனோர் பணியகத்தை நடைமுறைப்படுத்தல், உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்குதல், எல்லா சமூகத்தினருக்கும் சமமான நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தலை உள்ளடக்கியதாக இந்த மீளாய்வு இம்பெறவுள்ளது.

படையினர் மற்றும் பொலிஸாரின் கண்மூடித்தனமான கைதுகள், சித்திரவதைகள், வன்முறையைத் தூண்டும் வெறுப்புணர்வு பரப்புரைகளுக்கு நடவடிக்கை எடுத்தல்,சிறுபான்மை இன, மதத்தவர்களின் பாதுகாப்பு, பாலியல் வன்முறைகள், சிறுவர் தொழிலாளர் முறையை அகற்றுதல், வாழ்க்கைத் தர உயர்வு, உள்ளிட்ட விடயங்களும் உள்ளடக்கியதாக இந்த பூகோள கால மீளாய்வு இடம்பெறவுள்ளது.

Published in உள்நாடு

 

அமெரிக்க கடற்படையின் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான பணிப்பாளர் கெப்டன் பிராங்க் லிங்கோயஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, பாதுகாப்புத் தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்ற கெப்டன் பிராங்க் லிங்கோயஸ் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார்.

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகள் பலமடைந்துள்ள சூழலில், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே அமெரிக்க கடற்படையின் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான பணிப்பாளர் கப்டன் பிராங்க் இலங்கை வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published in உள்நாடு

கடும் மழை பெய்யுமாயின், நூற்றாண்டு பழைமை வாய்ந்த அம்பத்தளை நீர்த்தேக்கம் உடைந்து, கொழும்பு நகரமும், இலங்கை பாராளுமன்றமும் வெள்ளத்தில் மூழ்குமென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.

2018ஆம் ஆண்டுக்காக வரவுசெலவுத் திட்ட இரண்டாம் விவாதத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

“அம்பத்தளை, நாகலகம் வீதி அணைக்கட்டுகள் ஆபத்தில் இருக்கின்றன. கொழும்பு மற்றும் களனி பகுதிகளை இந்த இரண்டு அணைக்கட்டுகளும் தான் பாதுகாக்கின்றன. இவை பிரித்தானியர்களால் 100 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டவை.

இந்த இரண்டு அணைக்கட்டுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். இவை பாதுகாப்பான நிலையில் இல்லை. இன்னொரு கடுமையான மழையை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டால், தப்பிக்க முடியாது.

பாராளுமன்றம் ஆபத்தை எதிர்நோக்கி இருக்கிறது என்பதை சபாநாயகருக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். மிக கடுமையான மழை எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையேல், கொழும்பு நகரமும், நாடாளுமன்றமும் மூழ்கிப் போய்விடும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Published in உள்நாடு

தமிழில் உருவாகவுள்ள 'அர்ஜுன் ரெட்டி' படத்துக்கு 'வர்மா' என்ற பெயரில் உருவாகவுள்ளதாக பாலா இயக்கவுள்ளார்.

'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலா இயக்கவுள்ள இப்படத்துக்கு 'வர்மா' என பெயரிட்டுள்ளார்கள் இத்தலைப்பை விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

தற்போது 'நாச்சியார்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக இருக்கும் பாலா, அதனைத் தொடர்ந்து 'அர்ஜுன் ரெட்டி' ரீமேக்கில் கவனம் செலுத்தவுள்ளார்.

சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியான தெலுங்குப் படம் 'அர்ஜுன் ரெட்டி'. குறைந்த திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதால் திரையரங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் தேடல் இணையதள நிறுவனமான “ஜஸ்ட் டயல்“ நிறுவனத்தை கூகுள் நிறுவனம் கையகப்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை உறுதி செய்யப்பட்டால் கூகுள் நிறுவனம் இந்தியாவில் மேற்கொள்ளும் மிகப் பெரிய கையகப்படுத்தலாக இது இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கையில் “இது தொடர்பாக முக்கிய முதலீட்டு நிறுவனம் பேச்சு வார்த்தையை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக ஜஸ்ட் டயல் நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் முன்னரே பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. இரண்டு நிறுவன அதிகாரிகளும் இரண்டு மாதங்களுக்கு முன்னரே தனிப்பட்ட முறையில் பேச்சு வார்த்தையை தொடங்கிவிட்டனர். இந்த கையகப்படுத்தல் முடிவுக்கு வர சில நாட்கள் ஆகலாம் என்றும் அறிக்கை கூறுகிறது.

கூகுள் நிறுவனம் ஜஸ்ட் டயல் நிறுவனத்தை வாங்க உள்ளது குறித்து இந்த அறிக்கை வெளிவந்த பின்னர் ஜஸ்ட் டயல் பங்குகள் 20 சதவீதம்வரை ஏற்றம் கண்டுள்ளது.

செப்டம்பர் மாத நிலவரப்படி ஜஸ்ட் டயல் நிறுவனத்தில் 10,892 ஊழியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் நிறுவனம் இதுவரை இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பெங்களுருவைச் சேர்ந்த ஹல்லி லேப் என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை கையகப்படுத்தியது. 2014ஆம் ஆண்டில் இணையதள பாதுகாப்பு சார்ந்த இம்பீரியம் நிறுவனத்தை கையகப்படுத்தியது.

ஜஸ்ட் டயல் நிறுவனத்தில் இந்தியாவைச் சேர்ந்த 2 கோடி நிறுவனங்களின் தகவல் திரட்டு உள்ளது. கூகுள் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்திய கூகுள் எர்கோ செயலிக்கு இந்த தகவல் திரட்டு பயனுள்ளதாக இருக்கும்.“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“விவேகம்“ வசனத்தைக் குறிப்பிட்டு 'முதுகில் குத்தியவர்களை' சாடியிருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்

சிம்புவை நாயகனாக வைத்து 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளியான இப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து தனது புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ஆதிக்

இதனிடையே தொடர்ச்சியாக தன்னைப் பற்றி தவறாகப் பேசிவந்தர்களை சாடியிருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டனு உன் முன்னாடி நின்னு அலறினாலும், நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும் எங்கயும் எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது. நெவர் எவர் க்வ் அப். முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி. மீண்டும் எழுவேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தன் மகன் சரியாக பேசாத நிலையில் பக்கத்து வீட்டு சிறுமி நன்றாகப் பேசியதால் பொறாமையில் அந்த சிறுமியை கொலை செய்ததாக பெண் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக சென்றை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வில்லிவாக்கம் - பாரதியார் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் காவ்யா (4 வயது) கடந்த 7ஆம் திகதி மாலை மாயமான காவ்யா, 8ஆம் திகதி குப்பை கொட்டப்படும் இடத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய வில்லிவாக்கம் பொலிஸார், சிறுமியின் அயல் வீட்டில் வசிக்கும் தேவி என்பவர் சந்தேகத்தின் பேரில் கைதாகி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிறுமி காவ்யாவை கொலை செய்தமைக்கான காரணத்தை தேவி கூறியுள்ளார், “எனக்கும் வெங்கடேசனின் குடும்பத்திற்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்தது. அவரது மகள் காவ்யா எப்போதும் துறுதுறுவென இருப்பார். சரளமாக பேசுவார். ஆனால், எனது 3 வயது மகனுக்கு சரியாக பேச வரவில்லை. இதைப்பற்றி பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். இதனால், எனக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது.

காவ்யா மீது எனக்கு பொறாமை ஏற்பட்டது. சம்பவத்தன்று காவ்யாவை வீட்டின் உள்ளே வைத்து விட்டு வெளியே தாழ்பாள் போட்டு விட்டு அவரது தாய் ஜெயந்தி சென்றுவிட்டார். இதை கவனித்த நான், கதவை திறந்து காவ்யாவை எனது வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். காவ்யா என்னிடம் நன்றாக பழகுவார் என்பதால் சத்தம் போடவில்லை. வீட்டுக்கு வந்ததும் நான் காவ்யாவின் கழுத்தை நெரித்து வாளியில் இருந்த தண்ணீரில் மூழ்கடித்தேன். பின்னர் காவ்யாவின் உடலை போர்வை யால் சுற்றி வீட்டில் வைத்திருந்தேன்.

அதிகாலையில் காவ்யாவின் உடலை, அருகில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் வந்து விட்டேன். பொலிஸார் என்னை அடையாளம் கண்டு கொள்ளமாட்டார்கள் என நினைத்தேன்.“ என தேவி குறிப்பிட்டுள்ளார்.

Page 1 of 2

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top