Items filtered by date: Sunday, 12 November 2017
வென்னப்புவ பகுதியில் மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
 
குடி போதையில் மனைவியை தாக்க முயற்சித்த நபர்  மனைவியின் பதில் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இந்த சம்பவம் இன்று அதிகாலை 3.45 அளவில் நடந்துள்ளது. வென்னப்புவ பாத்திமா மாவத்தை வசித்து வந்த 49 வயதான மாசேவ்வகே சுஜி சமிந்த துஷார என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
 
கொலை சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் 48 வயதான மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர். தினமும் குடி போதையில் வரும் கணவன் தன்னை அடிப்பதாகவும் சம்பவம் நடந்த நேரத்தில் கணவன் தன்னை தடியொன்றினால் தாக்க முயற்சித்ததாகவும் அப்போது அந்த தடியை  பறித்து தான் கணவன் மீது பதில் தாக்குதல் நடத்தியமையினா‍லேயே அவர் உயிரிழந்துள்ளார் என்றும் உயரிழந்தவரின் மனைவி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
இந்நிலையில் குறித்த பெண் மாராவில நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில் சம்பவம்  தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.
Published in உள்நாடு
 
(க.கமல்)
கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில்  உயர்தர மாணவர் பலி; 9 பேர் படுகாயம்
 
கொழும்பு ராஜகிரிய சில்வா குறுக்குவீதியில் கெப் ரக வாகம் ஒன்று மதில் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
 
 இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் சிக்கிய காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள  நால்வரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
கெப் ரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  அத்துடன் தொடர்ந்து பயணித்த பிறிதொரு வாகனமும் குறித்த மதிலில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் அதில் பாரிய சேதங்கள் எவையும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Published in உள்நாடு
 
(க.கமல்)
எவர் விட்டுச் சென்றாலும் கவலையில்லை  
 
சுதந்திர கட்சியிலிருந்து யார்  விலகிச் சென்றாலும்  உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வெற்றியை தடுக்க ஒருவராலும் முடியாதென  சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
 
கொழும்பு இரத்மலானையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், 
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந் எவர் வேண்டுமானாலும் செல்ல முடியும். ஆனால் சுதந்திர கட்சியை வீழ்த்திவிட முடியாது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சுதந்திர கட்சியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்வதற்கான சகல முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.
 
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சுதந்திர கட்சி தேர்தலுக்கு முகம்கொடுக்க அச்சப்படுவதாக கூறியுள்ளார். யார் என்ன கூறினாலும் நாங்கள் தேர்தலில் வெற்றிக்கொள்ள போது உறுதி என்றார்.
Published in உள்நாடு
நடிகர் சிம்பு பாடிய பணமதிப்பு நீக்கம் குறித்த பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பும் என அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது பற்றி பேசியுள்ள சிம்பு தான் எதற்கும் பயப்பட்டதில்லை என கூறியுள்ளார்.
 
"ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்றால் அதைச் சொல்வதற்கு எந்ததொரு நேரத்திலுமே பயந்தது கிடையாது. சர்ச்சைகளில் சிக்க வேண்டும் என பாடவில்லை. ஏற்கனவே பல பிரச்சினைகள் வரும். ஆகையால், நானாக எந்தொரு விஷயத்தையும் செய்வதில்லை" என கூறியுள்ளார்.
 
வவுனியா ஈச்சங்குளம் கூட்டுறவு சங்க கிளையை உடைத்து கொள்ளையடித்த நால்வரை ஈச்சங்குளம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
குறித்த நபர்கள் நால்வரும் நேற்று வவுனியா ஈச்சங்குளம் கூட்டுறவு சங்க கிளையின் பூட்டுக்களை உடைத்து கொள்ளையடித்து சுமார் 1 லட்சம் ரூபா பெருமதியான பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.
 
பொருட்களுடன் முச்சக்கரவண்டியில் செல்லும் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட மேற்கொள்ளப்பட்ட சோததனையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Published in உள்நாடு
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல பிரசாரக்கூட்டும் இன்று மாலை 3 மணிக்கும் அனுராதபுரம் சல்காது மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
 
கூட்டு எதிரணியின் தேர்தல் பிரசார மேடைகளில் அரச தரப்பிலிருந்தோ அல்லது வேறு கட்சியகளிலிருந்தோ ஒருவர் வீதம் மேடையேறி வருகின்ற நிலையில் இன்றைய கூட்டத்தில் அரச தரப்பிலிருந்து எவரும் கலந்துகொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு மேலீட்டுள்ளது.
 
இந்நிலையில் இன்று அனுராதபுரம் நகரம் முழுவதும் தாமரை மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட குளம் போன்று காட்சியளிக்கின்றது. கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

 

 
Published in உள்நாடு
 
இந்தியா-ஆசியான் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு செல்கிறார்.
 
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 31வது இந்தியா-ஆசியான் மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாடு இன்று தொடங்கி 14ம் தேதி வரை நடக்கிறது. 
 
இதில் பங்கேற்கவே பிரதமர் மோடி இன்று டெல்லியிலிருந்து மணிலா செல்கிறார். பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு செல்வது இதுவே முதல் முறை.
 
இந்த பயணத்தில், ஆசியான் அமைப்பின் 50ம் ஆண்டு விழா சிறப்பு நிகழ்ச்சியிலும் பிரதமர் பங்கேற்கிறார். பின்னர், தரமிக்க நெல் விதைகளை மேம்படுத்தும் ஆராய்ச்சிகளை செய்து வரும் மணிலாவில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி மையத்திற்கும் அவர் செல்கிறார்.
 
சீனாவின் சிசுயான் மாகாணத்தில் உள்ள அதுலீர் கிராம மாணவர்கள் 2,500 அடி உயர மலை ஏறி பள்ளிக்கு சென்று கல்விகற்கின்றனர்.
 
குறிப்பிட்ட சில இடங்களில் மலை ஏற ஆபத்தான மூங்கில் ஏணிகளை கடந்து சென்று வந்தனர். 
 
வழக்கமாக ஒருமுறை பள்ளிக்கு சென்றால் அங்கேயே 15 நாட்கள் தங்கி படித்துவிட்டு வீடு திரும்புவார்கள்.
 
இவ்வாறு மாணவர்கள் ஆபத்தான முறையில் பிரயாணம் செய்வது புகைப்படமாக வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் பிறகு அரசு நடவடிக்கை எடுத்து, இரும்பு ஏணியை அமைத்திருக்கிறது. உலகிலேயே மிக ஆபத்தான பள்ளி இதுவே.
 
போகஹவத்தை தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள கால்வாயிலிருந்து சிறுவன் ஒருவனின் உடலொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது திம்புல போகஹவத்தை பிரதேசத்தில் நேற்று காணாமல் போன சிறுவனின் உடல் என திம்புல்லை பொலிஸார் தெரிவித்தனர்.
Published in உள்நாடு
Page 1 of 2

Latest News

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top