Items filtered by date: Wednesday, 15 November 2017

இன்புளூவன்சா நோய்தொற்று தற்போது நாடளாவிய ரீதியில் பரவிவருவதால் அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுகமக்களை சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

நவம்பர், டிசெம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இன்புளூவன்ஸா நோய் தொற்று அதிகரிப்பதாக, தொற்று நோய் பிரிவின் விசேட மருத்துவ அதிகாரி சமித கனிகே தெரிவித்துள்ளார்.

தற்போது இன்புளூவன்ஸா பி வகை வைரஸ் பரவுவதுடன், கடந்த மாதத்தில் இன்புளூயன்ஸா பி வகை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 300 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்த நோயளர்களின் சளி மாதிரிகள், கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், 40 பேர் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இருமல், தடிமல், காய்ச்சல், உடல் வலி, பசியின்மை ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் என்றும்,குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயோதிபர்கள் இந்த நோயினால் அதிகளவு  பாதிக்கப்படுவதாகஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Published in உள்நாடு

“மலையக மக்களான நீங்கள் யாரை நம்பி வாக்களித்தீர்களோ அவர்கள் உங்கள் விரல்களை வைத்தே உங்கள் கண்களை குத்துகிறார்கள்” என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

கிறெட்வெஸ்டன், ஹொலிரூட் மற்றும் ரட்ணகிரிய பகுதிகளில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,

“பெருந்தோட்ட மக்கள் அனைவரும் மிக கவனமாக இருங்கள் இல்லாவிட்டால் பெருந்தோட்டங்கள் வீணாகி விடும் என, முத்துசிவலிங்கம் மக்களிடம் பேசும்போது அடிக்கடி சொல்லுவார். அப்போது அவரின் பேச்சை சிலர் கேலி செய்தார்கள். இன்று அவர் கூறியது உண்மையாயிற்று.

இன்று தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்டு வருகின்றன. 1992ஆம் ஆண்டு பெருந்தோட்டங்கள் எல்லாம் கம்பனி காரர்களிடம் கையளிக்கும்போது இந்த எண்ணிக்கை இன்று பாதியாக குறைந்துள்ளது.

1000 ஏக்கர் தேயிலை நிலம் காடாக காணப்படுகின்றது. 80 ஆயிரம் கிடைக்க வேண்டிய நிலுவைப் பணத்தை விடுத்து 2500 ரூபா பணத்திற்கு உங்களுக்கு ஆசைகாட்டியவர்கள் யார்? நீங்கள் யாரை நம்பி வாக்களித்தீர்களோ அவர்கள் உங்கள் விரல்களை வைத்தே உங்கள் கண்களை குத்துகிறார்கள்.

மூன்று வாரங்கள் தேயிலை மலைக்கு பூச்சி நாசினிகள் தெளிக்காமல் விடுத்தால் புற்கள் வளர தொடங்கி மூன்று மாதங்களில் அத்தேயிலை மலைகள் பெருங்காடாகி அங்கு பாம்பு, குளவி போன்ற விஷ சந்துக்கள் உருவாகிவிடும்.

இதனால், ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் தொழிலாளர்கள் இத்தேயிலை மலைகளில் வேலை செய்வதை நிறுத்தி விடுவார்கள்.

இதனால், இத்தேயிலை மலைகள் காடாக்கப்பட்டு நிர்வாகத்தினால் மூடப்படும்.

அதன் பின்னர் அரசாங்கத்தினால் பெரும்பான்மை கிராமங்களாக உருவாக்கபட்டு 100 குடும்பங்களை கொண்டு வந்து குடியேற்றி விடுவார்கள். இது வெகுவிரைவில் நடைபெறப்போகின்றது. அதன் பின்னர் அவர்கள் சிறுதோட்ட முதலாளிமார்களாக மாறிவிடுவார்கள்.

இதனை தடுக்க மக்களாகிய நீங்கள் தகுந்த நடவடிக்கையெடுக்க வேண்டும். இல்லாவிடின் இருப்பதையும் இழந்து விடுவீர்கள். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடந்ததையும் நடக்கின்றதையும் நடக்கபோவதையும் சொல்லும்” என்றார்.

Published in உள்நாடு

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரிட்வில் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இழக்காகிய 11பேர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களே இன்று மதியம்  குளவிகொட்டுக்கு இழக்காகியுள்ளனர். 

17  பெண்களும் 2 ஆண்களும் இவ்வாறு பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

Published in உள்நாடு

சிம்பாப்வே இராணுவம் சிம்பாப்வே அதிபரை சிம்பாப்வேயின் தலைநகரான ஹராரேயில் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

சிம்பாப்வே இராணுவர்கள் அரசகட்டமைப்பை மதிப்பவர்கள். அதனால் நிலமை தற்போது உள்ளதை தாண்டிச் செல்லாது என சிம்பாப்வே அதிபர் குறிப்பிட்டதாக,

தொலைபேசி வாயிலாக சிம்பாப்வே அதிபருடன் உறையாடிய தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜகோப் சுமோ தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

40 வயதாகும் சயீத் அஜ்மல் 2008-ம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடரின்போது பாகிஸ்தான் அணியில் அறிமுகமானார். 2011-ம் ஆண்டில் இருந்து அவர் பாக்கிஸ்தான் அணியின் முக்கியமான பந்து வீச்சாளராக திகழ்ந்தார்.

35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 178 விக்கெட்டுக்களையும், 113 ஒருநாள் போட்டியில் 184 விக்கெட்டுக்களையும் மற்றும் 64 இருபதுக்கு இருபது போட்டிகளில் 85 விக்கெட்டுக்களையும் ம் வீழ்த்தியுள்ளார்.

மியான்மரின் நடைமுறை தலைவராகக் கருதப்படும் ஆங் சான் சூகி ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்டாஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பிலிப்பைன்சின் நாட்டின் மணிலாவில் நடைபெற்றுவரும் ஆசியான் உச்சி மாநாட்டுக்கு இடையில் ஆங் சான் சூகியை அன்ரனியோ குட்டாரஸ் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந் சந்திப்பின் போது மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் ரொஹிஞ்சா முஸ்லிம்மக்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரக்கைன் மாநிலத்தில் ரொஹிஞ்சா முஸ்லிம்மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றதனையடுத்து அவர்களுக்கெதிராக ராணுவம் தாக்குதலகளினை மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேசுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஆகையால் ரக்கைன் மாநில மக்களுக்கு மனிதநேய அடிப்படையிலான உதவிகள் செல்வதனை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் ரோஹிங்கியா மக்கள் பாதுகாப்பாகவும், கண்ணியத்துடனும் வாழ்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆங் சான் சூகியிடம் அன்ரனியோ குட்டாரஸ் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பாப்வேவின் அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ளது. 1980 முதல் அந்நாட்டு அதிபராக இருந்த ராபர்ட் முகாபே பாதுகாப்பாக உள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.

'' சமூக மற்றும் பொருளாதார துன்பங்களை'' உருவாக்கிய முகாபேவுக்கு நெருக்கமானவர்களை தாங்கள் இலக்கு வைத்துள்ளதாக அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய பிறகு ராணுவ செய்தி தொடர்பாளர் அறிவித்தார். தொலைக்காட்சியில் தோன்றி அறிக்கை ஒன்றினை வாசித்த மேஜர் ஜெனரல், இது ஆட்சிக்கவிழ்ப்பு இல்லை என கூறினார்.

மேலும், முகாபே பாதுகாப்பாக இருப்பதாகக் கூறினார். இச்சம்பவம் ஜிம்பாப்வேவின் தலைநகரான ஹராரேவில் நடந்துள்ளது.

நகரின் வடக்கு புறநகர் பகுதியில், பயங்கர துப்பாக்கிச்சூடு மற்றும் பீரங்கிகளின் சத்தங்களும் கேட்டுள்ளன. 

இது குறித்து 93 வயதான அந்நாட்டு அதிபர் ராபர்ட் முகாபேவிடம் இருந்து இதுவரை எந்த வார்த்தையும் வரவில்லை.

அரசு தொலைக்காட்சி நிறுவனமான இசட்.பி.சியின் தலைமை அலுவலகத்தைக் ராணுவத்தினர் முதலில் கைப்பற்றியுள்ளனர். ராணுவத் தலையீட்டுக்கான சாத்தியங்கள் இருப்பதாக அந்நாட்டு ராணுவ தலைவர் எச்சரிக்கை விடுத்தபிறகு, ஜிம்பாப்வேவின் ஆளுங்கட்சி ராணுவ தலைவர் மீது 'துரோக' குற்றச்சாட்டுகளைச் சுமத்திய பிறகு இங்கு நிலைமை மோசமானது.


நாட்டின் துணை அதிபரை அதிபர் ராபர்ட் முகாபே நீக்கியபிறகு, ராணுவத் தலைவர் சிவென்கா, அதிபருக்குச் சவால் விடுத்தார். அதிபர் ராபர்ட் முகாபேவின் 'ஜானு பிஃப்' கட்சியில் இருப்பவர்கள் களையெடுக்கப்படுவதை தடுத்து நிறுத்த ராணுவம் செயல்பட தயாராக உள்ளது என சிவென்கா கூறியிருந்தார். செவ்வாய்க்கிழமையன்று ஆயுதம் தாங்கிய வாகனங்கள் ஹராரேவின் புறநகர் சாலைகளில் நிலைகொண்டதால், பதற்றங்கள் மேலும் அதிகரித்தது.

செவ்வாய்க்கிழமை மாலை ஹராரேவில் உள்ள இசட்.பி.சி அலுவலகத்தை ராணுவ வீரர்கள் கைப்பற்றியபோது, சில ஊழியர்கள் ராணுவ வீரர்களால் இழுத்துத் தள்ளப்பட்டனர் என தகவல்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளது.

ஊழியர்கள் '' கவலைப்பட வேண்டாம்'' என்றும், அலுவலகத்தைப் பாதுகாக்கவே தாங்கள் வந்துள்ளதாகவும் ராணுவ வீரர்கள் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையில் அமெரிக்கா தனது தூதரகத்தை மூடி உள்ளது. இதுகுறித்து ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் இயங்கும் அமெரிக்க தூதரகம் ட்விட்டரில், "ஜிம்பாப்வேவில் நிச்சயமற்றதன்மை நிலவுகிறது. இதன் காரணமாக, ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு நவம்பர் 15-ம் தேதி மூடுகிறது. அமெரிக்க தூதரக அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பார்கள்" என்று குறிப்பிட்டுள்ளது.

'நாட்டில் 30 வருடங்களாக போர்செய்து விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அடைய முடியாமல்போன ஈழத்தை பேனாமூலம் வழங்குவதற்கு நல்லாட்சி அரசு முயற்சித்துவருகின்றது. இதற்கு மக்கள் ஒருபோதும் இடமளிக்காது, இவ்வரசுக்கு உகந்த பாடத்தைப் புகட்டவேண்டும். எனவே, அரசே! வெகுவிரைவில் கோவணத்துடன் ஓடுவதற்கு தயாராகிக் கொள்!!"

- இவ்வாறு கூட்டரசை தாறுமாறாக தாக்கிப்பேசி பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்துள்ளார் பெருந்தலைவர் ஒருவர்.

யார் இந்தப் பெருந்தலைவர்? இவரைப் பற்றி கூற வேண்டுமெனில், பேச்சு பீரங்கி, பிரசார வெடிகுண்டு, சிந்தனைச் சிற்பி, சயனைட் குப்பி என வர்ணித்துக்கொண்டே போகலாம்.

நாட்டில் இவரால் மேற்கொள்ளப்படாத அபிவிருத்திகளும், ஆசையாசையாக தூக்கப்படாத குழந்தைகளும் இல்லையென்பதுவே உண்மையாகும். இப்படியான தன்னிகரில்லா புகழுக்குச் சொந்தக்காரர், அட அவர்தானே. நீங்கள் மைன்ட் வாய்ஸில் முணுமுணுப்பதும் எமக்குக் கேட்கிறது. ஆம். அவரேதான்.

உள்ராட்சி சபைத் தேர்தலை இலக்குவைத்து அநுராதபுரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பொதுஜன பெரமுன சார்பில் மேடையேறியபோதே முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு அரசை வெளுத்து வாங்கினார்.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம், உள்ராட்சி சபைத் தேர்தலில் ஏற்பட்டுள்ள காலதாமதம் மற்றும் புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை என ஒன்றைக்கூட அவர் மறக்கவே இல்லை. விளாசித்தள்ளிவிட்டார் என்றே கூறவேண்டும்.

உள்ராட்சி சபைத் தேர்தலானது ஜனவரி 29ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. வரவு-செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு முடிந்தவுடன் இத்தேர்தலுக்கான நாட்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றமையால் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பெரிய கட்சிகள் தற்போதே பேரம் பேச்சுகளையும், மறைமுக பிரசார நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ள நிலையில்தான் மஹிந்த, அவ்விரு கட்சிகளின் தலைமையிலான அரசை இவ்வாறு கடுமையாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதிலும் குறிப்பாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை இவர் விமர்சித்துள்ளமையானது, திருடர்களை வெகுவிரைவிலேயே பிடிப்போம் என்ற அரசின் எப்போதும்போல ஒரு சாதாரண வார்த்தையாகக் காணப்பட்டாலும், கொழும்பு அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள சில அதிரடிகளானது இதனை வேறnhரு கண்ணோட்டத்துடனேயே எம்மை பார்க்கத் தூண்டுகிறது. இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைக்கால கருத்துகள் மற்றும் செயற்பாடுகளும் உரமூட்டும் வகையில் காணப்படுகின்றன.

அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஆட்டிப்படைத்த பெற்றNhல் தட்டுப்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி, நாட்டில் இடம்பெறும் எல்லாத் தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் தானே பொறுப்பு எனும் வகையில் வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகளுக்குக் கடுந்தொனியில் எதிர்ப்புத்தெ ரிவித்திருந்ததோடுயுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்த இராணுவத்துக்கு எதிராக தமது அரசால் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் இடித்துரைத்திருந்தார்.

அதுமட்டுமன்றி, மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்தும் கடந்த சில நாட்களாகவே அரச தரப்பினருடன் அதிருப்தியான கருத்துகளை வெளியிட்டுக்கொண்டிருக்கும் ஜனாதிபதி, இதுதொடர்பில் தான் குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பினருக்கு சார்பாக எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கப்போவதில்லை எனவும், இதற்கான விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு சுயாதீனமாக இயங்குவதற்கு எவரும் இடையூறாக இருந்துவிடக்கூடாது எனவும் ~கட் அன் ரைட்|டாகக் குறிப்பிட்டுள்ளார்.

இப்படியான ஜனாதிபதியின் இந்தத் திடீர் கருத்துகள் ஒருபுறமிருக்க, ஐக்கிய தேசியக் கட்சியினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரையும், சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், பிரதமர் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினரையும் மாறிமாறி நாடாளுமன்றம் என்ற ஓர் இடத்தைத் தவிர, ஏனைய பொது மேடைகளில் போட்டுத்தாக்கி வருவதையுமே தொடர்ச்சியாகக் காணக்கூடியதாக இருக்கிறது.

அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை, உள்ராட்சி சபைத் தேர்தல் தாமதமாகிய விவகாரம், பெற்றோல்தட்டுப்பாடு என சமகாலத்தை ஆட்டிப்படைக்கும் எல்லா சர்ச்சைகளுக்கும் 'நீதான் காரணம். இல்ல இல்ல..., நீதான் காரணம்" என மக்களை முட்டாளாக நினைத்துக்கொண்டு இவர்கள் ஒருவருக்கொருவர் மீது செய்துகொள்ளும் சேறுபூசும் நடவடிக்கையானது நல்லாட்சி அரசுக்கு என்னடா நடந்திச்சி? என்றே கேட்கத்தூண்டுகிறது.


இந்தப் பரபரப்பை மேலும் சூடுபிடிக்கவைக்கும்வகையில் இவ்வாண்டு இறுதிக்குள் அதாவது டிசம்பருக்குள் தேசிய அரசில் அதிரடியான சில அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெறும் என்றும் அரசின் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து அரசல்புரசலாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

பிணைமுறி விவகாரத்தில் அரசின் மதிப்பு மக்களிடத்தில் குறைவடைந்துள்ளமையால், அடுத்த உள்ராட்சி சபைத் தேர்தலை இலக்கு வைத்து சில அதிரடியான மாற்றங்களை செய்தால் மட்டுமே எதிர்பார்த்த பெறுபேற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நெருக்கமான தரப்பிலிருந்து இரகசியமாகக் கூறப்பட்ட கருத்துகளை முன்னிறுத்தியே ஜனாதிபதி இந்த மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளார் என்றும் அவ்வட்டாரத்திலிருந்து தெரியவராமல் இல்லை.

ஆனால், கெரம் விளையாட்டில் இறுதிக் காயை குழிக்குள் போட்டால் மட்டுமே வெற்றி என்பதைப்போல, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியிலிருந்து வெளியேற்றினால் மட்டுமே அரசை உறுதியாக நிலைக்கச்செய்ய முடியும் என்ற முனைப்புடன் ஜனாதிபதி மைத்திரி தற்போது காய் நகர்த்துவதே சமகால அரசியலின் ~ஹொட் நியுஸாக| காணப்படுகின்றது.

இக்காரணம் மற்றும் இதர சில காரணங்களையும் முன்னிறுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவிலேயே கொழும்பில் வைத்து விசேட கலந்துரையாடலொன்றில் ஈடுபடுவார் என்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உள்ளுராட்சி சபைத்தேர்தலுக்காக பலப்படுத்தும் நோக்கிலும் அமையப்பெறவுள்ள இச்சந்திப்பில், மஹிந்தவுடன் சில முக்கிய உறுப்பினர்கள் மட்டுமே ஜனாதிபதியைக் காண, கலந்து கொள்வார்கள் என்றும் அறியக்கிடைத்துள்ளது.

இவ்வாறு மஹிந்த - மைத்திரி இணைப்புப் பாலம் சற்று வலுவடைந்துவரும் காரணத்தால்தான் நாம் மஹிந்தவின் அநுராதபுர மேடைப் பேச்சை வேறnhரு கண்ணோட்டத்தில் பார்க்கத் தூண்டுகிறது என்று ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தோம்.

எனினும், மஹிந்தவின் அநுராதபுரக் கூட்டமும் அங்கு அவரால் வெளியிடப்பட்ட கருத்துகளும் உங்களுக்குப் பாரிய பாதிப்பாக அமையுமா என்று கேட்டால், சும்மா ஓரமா போய் அவங்கள விளையாடச் சொல்லுங்க தம்பி என்பதுதான் ஐக்கிய தேசியக் கட்சியினரின் பதிலாக இருக்கிறது.

ஏனெனில், பொதுஜன பெரமுன என்ற ஒரு மாற்றுக் கட்சி உள்ராட்சி சபைத் தேர்தலில் பலத்த கூட்டணியுடன் களமிறங்குமானால், அது சுதந்திரக் கட்சியின் வாக்குவங்கியை இரண்டாக்கும் ஓர் இயந்திரமாக இருக்குமேயொழிய, ஐக்கிய தேசியக் கட்சி எனும் யானையின் ஒரு முடியைக் கூட அதனால் கழற்றியெடுக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.

இந்த அச்சத்தால்தான் இதுவரை மஹிந்த தரப்பினர் தமது கட்சிக்கு எதிராக செயற்பட்ட எந்தவொரு செயற்பாட்டுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கைகளையோ அல்லது இதர நடவடிக்கைகளையோ மேற்கொள்ளாது, மஹிந்த தரப்பினர் எம்முடன் இணைந்தால் எப்போது வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறNhம் என்று சுதந்திரக் கட்சி தரப்பினர் கூறிக்கொண்டு வருகிறார்கள்.

உண்மைதானே.. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்தி உறுப்பினர்களின் ஒத்துழைப்புடனும் பங்குபற்றலுடனும், சிங்கள தேசியவாதத்தை முன்னிறுத்தி, அரசின் தற்போதைய அதிருப்திகளையும் எடுத்துக்காட்டி, பெரும்பான்மையான மக்கள் வாழும் பகுதிகளை இலக்குவைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் ஒரு மாற்று சக்தி உருவாகுமாக இருந்தால், அதனால் ஏற்படவுள்ள பாரிய விளைவுகள் எவ்வளவு பெரிய தைரியமான ஆளாக இருந்தாலும் சுதந்திரக் கட்சியினரின் கண்முன்னால் வந்துசெல்லும் இல்லையா?

அதேநேரம், பொதுஜன பெரமுன கட்சி உருவாகினால் சுதந்திரக் கட்சிக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமோ அதைவிட, பல மடங்கு அக்கட்சி உருவாகாமல் இருந்தால் நல்லாட்சி அரசுக்கு அமைந்துவிடும் என்பதுதான் அரசியல் விமர்சகர்களின் எச்சரிக்கையாக இருக்கிறது. ஆம், புதிய கட்சி அமையவுள்ளமையும் அதில் மஹிந்த உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் அதிருப்தி உறுப்பினர்கள் ஆதரவளிக்கவுள்ளமையும் தற்போது 90 வீதம் உறுதியாகிவிட்டாலும், இதற்கு எப்படியாவது முட்டுக்கட்டையிட வேண்டும் என்றுதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசிலுள்ள சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தற்போது மும்முரம் காட்டிவருகிறார்கள்.

இதற்காக கொழும்பில் வெகுவிரைவில் நடைபெறவுள்ள பேச்சில் இணக்கப்பாடொன்று ஏற்படுமாக இருந்தால், மஹிந்த தரப்பினர் முதலாவதாக ஜனாதிபதிக்கு வைக்கும் செக், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி எம்முடன் இணைந்து ஆட்சியமைக்க நீங்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்பதாகத்தான் இருக்கும். இதனை அண்மையில் ஜனாதிபதிக்கு, அவர்கள் அனுப்பிவைத்த கடிதத்திலும் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.

அப்படியானால் தமது கட்சியைப் பிளவடையச் செய்யக்கூடாது என்றோ ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஏற்பட்டுள்ள அதிருப்தியினாலோ மஹிந்தவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பச்சைக்கொடி காட்டிவிட்டால் என்ன நடக்கும்? இதை நினைத்தால்தான் லைட்டாக நல்லாட்சி பிரியர்களுக்கு வயிற்றைக் கலக்குகிறது. ஏனெனில், இந்தத் தேசிய அரசில் மட்டுமே நாட்டிலுள்ள பெரும்பான்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணமுடியும்.

வடக்கு, கிழக்கு வாழ் தமிழர்களின் பிரச்சினையாகட்டும், புதிய அரசமைப்பை ஸ்தாபிக்கும் பணிகளாகட்டும், யுத்தக்குற்றச்சாட்டு தொடர்பிலான சர்வதேசத்தின் அழுத்தங்களாகட்டும் - இவை அனைத்துக்கும் ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டு அரசில்தான் அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கும் மற்றும் எத்தரப்புக்கும் பாதிப்பேற்படுத்தாத தீர்வை முன்வைக்க முடியும் என்பதுவே அனைவரதும் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.

மேலும், இவ்வாறு ~வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைத்த| கவலைக் கதையாய் டிசம்பர் மாதத்துக்குள் அரசுக்குள் இடம்பெறும் என்று தெரியவந்துள்ள அதிரடி மாற்றமும் மஹிந்தவுடனான ஜனாதிபதியின் சமரசப் பேச்சுகளும் இருந்துவிடக்கூடாது என்பதுவே பெரும்பான்மையானோரின் மன்றாட்டாகக் காணப்படுகின்றது.

இவை தொடர்பில் அரசின் தலைமை நன்கு அவதானம் செலுத்த வேண்டும். பிரச்சினைகள், மாற்றுக் கருத்துகள், தவறுகள், குறைகள் என்பன அரசுக்குள் - அதுவும் இரு வேறு கொள்கைகள் உடைய பிரதான கட்சிகளின் தலைமையிலான அரசுக்குள் வருவது சகஜமான ஒன்று என்பதால், இவற்றை உள்வீட்டுப் பிரச்சினையாகக் கருதி சமரசம் செய்துவைக்கவும் அடுத்த நகர்வை கவனமாகவும் கடந்த காலத் தவறுகள் மீண்டும் இடம்பெறாத வகையிலும் நகர்த்தவேண்டும் என்பதுதான் எமது கருத்தாக இருக்கிறது.

அதைவிடுத்து எடுத்தோம் கவுத்தோம் என காரியங்களை மேற்கொண்டால் அது கூட்டரசுக்குப் பாதிப்பாக அமைந்துவிடுவதோடு, 2015இல் இத்தரப்பினரை நம்பி வாக்களித்த அப்பாவி மக்களுக்கும் சொல்லொணா துயரங்களையும் தந்துவிடும்.

எனவே, அரசே! அரச தலைவர்களே! எந்த முடிவுகளாக இருந்தாலும் பார்த்து கொஞ்சம் பக்குவமா செய்யுங்கப்பா - என்றுதான் எம்மால் இறுதியாகக் கூறிக்கொள்ள முடியும்.

 

அருண் பிரசந்த்

சில நாட்களுக்கு முன் 'இந்து தீவிரவாதிகள் இனி இல்லை என்று சொல்ல முடியாது' என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு எதிர்பாராத விதமமாக எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால் அவர் கூறிய கருத்து உண்மைதானோ? என்று சந்தேகப்படும் அளவிற்கு நேற்று ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியானது.

குறித்த அந்த காணொளியில் ஒரு சிறுவன் கமல்ஹாசனின் புகைப்படமொன்றை கத்தியால் குத்தி கிழிப்பதாக உள்ளது. பின்னணியில் ஒரு குரல் 'இவன் இந்து தீவிரவாதி, இவனை விடாதே' என்று ஒலித்தது.

இந்த வீடியோ குறித்து கமல் தனது டுவிட்டரில் கூறுகையில்,

'என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல்.' 'என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ் இனம் சகியாது. இயற்கை எனைக் கொன்றே மகிழும். அதன்முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்' என்று பதிவு செய்துள்ளார்.
கமலின் டுவிட்டர் பதிவுகளை யாராளும் எளிதாக புறிந்துக்கொள்ள முடியாது.

அந்த டுவிட்டர் பதிவில் அவர் கூறியதாவது,

“அங்கு வளர்ந்த மீனவ சகோதரர்கள் தமிழ் பேசியதற்காக சாகிறார்கள்..ஒரு குழந்தை குத்தி நான் சாவது மேல்தான்..ஒரு நாள் இயற்கையாக நான் சாகத்தான் போகிறேன்..அதற்குமுன் இந்த வாழ்க்கையை வாழ்ந்து மகிழ்வேன்..முடிந்தால் கொன்று பார்..நான் வென்றே தீர்வேன்”

ஒரே டுவிட்டில் மத தீவிரவாதம் குறித்தும், மீனவர்கள் தமிழ் பேசியதால் தாக்கப்பட்டது குறித்தும் சுட்டிக்காட்ட கமல்ஹாசனால் மட்டுமே முடியும் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டித் தொடரில் இலங்கைக்கான வெற்றிவாய்ப்பு குறைந்தளவிலேயே காணப்படுகின்றது என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இநதியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை கொல்கத்தா ஈடன் கானார்டன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், இந்தியாவுடனான இந்த சுற்றுப்போட்டி தொடர்பில் கருந்து தெரிவித்துள்ள முத்தையா முரளிதரன் ,

இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டித் தொடரில் இலங்கை அணி வெற்றிப்பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

மேலம், தற்போது டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ள இந்தியா அணியை வீழ்த்துவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல என முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் , இலங்கை அணி வீரர்களின் திறமைகளை இந்தியா சுற்றின்போது இனங்காண முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Page 1 of 3

Latest News

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top