Items filtered by date: Saturday, 18 November 2017

இராமேஸ்வரம் மீனவர்கள் மீதான தாக்குதலை இந்திய கடலோர காவல்படையே ஒப்புக்கொண்ட நிலையில் "துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்டது கடலோர காவற்படை பயன்பாட்டில் உள்ள தோட்டாக்கள் அல்ல" என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

“கடலோரக் காவற்படை தலைவரைக் கேட்டேன், எங்களிடம் அப்படிப்பட்ட தோட்டாவே இல்லை. பிறகு எப்படி நாங்கள் மீனவர்கள் மீது பிரயோகித்திருக்க முடியும் என்று கேட்கிறார். அப்படிப்பட்ட தோட்டாக்களை நீங்கள் சப்ளை செய்கிறீர்களா? என்று பாதுகாப்புத்துறையை பார்த்து அவர் கேட்டார்.

ஆகவே, இதில் நான் இவர்களை நம்புகிறேன் அவர்களை நம்புகிறேன் எனும் விஷயத்திற்குள் போக விரும்பவில்லை. மீனவர்கள் படும் கஷ்டம் எனக்குப் புரிகிறது. அதனால் இந்தத் தோட்டாக்களை யார் பயன்படுத்தினார்கள் என நான் விசாரிக்கிறேன். நீங்கள் தான் செய்தீர்கள் என்று யாரும் சொல்லாதீர்கள். இது போன்ற தோட்டாவே எங்களிடம் இல்லை. அநதத் தோட்டா எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியாது.

அதனால் மீனவர்கள் சொல்வது தப்பா, தப்பில்லை அவர்கள் சொல்வதும் நிஜம், ஆனால் தீர விசாரித்து பேசுவது நம்ம எல்லோருக்கும் நல்லது” என்று தெரிவித்தார்.

இராமேஸ்வரம் மீனவர்கள் மீதான தாக்குதலை இந்தியக் கடலோரக் காவல்படையே ஒப்புக்கொண்ட நிலையில், "துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்டது கடலோரக் காவற்படைப் பயன்பாட்டில் உள்ள தோட்டாக்கள் அல்ல" என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ள விடயம் விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளது.

ஜப்பான் நாட்டில் ரயில் ஒன்று வழக்கமாக புறப்பட வேண்டிய நேரத்தில் இருந்து 20 விநாடிகளுக்கு முன்னதாகவே புறப்பட்டுச் சென்றதைத் தொடர்ந்து அந்த ரயிலை இயக்கும் ரயில்வே நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.

ஜப்பான் நாடு நேரம் தவறாமைக்கும், அந்நாட்டு மக்கள் பணிவுக்கும் பெயர் பெற்றவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், குறிப்பிட்ட நேரத்திலிருந்து வெறும் 20 வினாடிகளுக்கு முன்னதாகவே ஒரு ரயில் புறப்பட்டுச் சென்றதற்காக அந்த ரயில்வே நிர்வாகம் மன்னிப்பு கோரியிருப்பது பரவலாக பேசப்பட்டுவருகிறது. இது பல்வேறு ஊடகங்களிலும் செய்தியாகியுள்ளது.

சுகுபா எக்ஸ்பிரஸ் ரயில். இது அன்றாடம் தலைநகர் டோக்கியோ - மினாமி நிலையங்களுக்கு இடையே பயணிக்கிறது. வழக்கமாக காலை 9.44 மணி 40 வினாடிகளுக்குப் புறப்பட வேண்டிய இந்த ரயில் அன்றைய தினம் 9.44 மணி 20 வினாடிகளுக்கே புறப்பட்டுச் சென்றது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட சுகுபா எக்ஸ்பிரஸ் ரயில் நிறுவனம், இதற்காக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

"எங்களது வாடிக்கையாளர்களுக்கு இடையூறை ஏற்படுத்திய அந்த சம்பவத்துக்காக நாங்கள் வருந்துகிறோம். இதுதொடர்பாக எந்த ஒரு வாடிக்கையாளரும் புகார் அளிக்கவில்லை. வெறும் 20 விநாடிகள் வித்தியாசம் என்பதால் எந்த ஒரு பயணியும் ரயிலை தவறவிடவில்லை. இருப்பினும் நாங்கள் எங்கள் மன்னிப்பை பதிவு செய்கிறோம்" எனத் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் புல்லட் ரயில்கள் வேகத்துக்கு மட்டுமல்ல நேரம் தவறாமைக்கும் பெயர் பெற்றவை. அதன் காரணமாகவே 20 வினாடி முன்னதாக ரயில் புறப்பட்டதற்குக்கூட சம்பந்தப்பட்ட ரயில் நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.

இந்த சம்பவத்தைப் பொருத்தவரை, 20 விநாடிகள் முன்னதாகவே புறப்பட்டது என்பது பிரச்சினையல்ல. பாதுகாப்பு அம்சங்கள் சரியாக பின்பற்றப்படவில்லை என்பதே எங்களின் வருத்தத்துக்கு காரணம்.

அதாவது ஒரு ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக மணி ஓசை எழுப்பப்படும். அதன்பின்னர் அறிவிப்பு வெளியாகும். இது ரயிலில் ஏறும்போதும் இறங்கும்போதும் பயணிகள் கதவுகள் திறப்பது மூடுவது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் அறிவிப்பு.

மெத்தனமான நிர்வாகம் ரயில் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதாலேயே அந்த மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டோம்" எனக் கூறப்பட்டுள்ளது.

“எட்டாவது முறையாக அஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் தான் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இத்தகைய இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் எனவும்“ இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த வேதனை அனுபவம் குறித்து அவர் ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார். "சிட்னி விமான நிலையத்துல் என்னை அதிகாரிகள் சோதனைக்காக தடுத்து நிறுத்தினர். இதுபோன்று நோக்கம் ஏதுமின்றி என்னை சிட்னி விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்துவது இது எட்டாவது முறையாகும்.

ஏதோ ரசாயன வஸ்து பயன்பாடு குறித்து சோதனைக்கு உட்படுத்துவதாகக் கூறினர். அதிகாரிகள் என்னிடம் மிகவும் கெடுபிடியாக நடந்து கொண்டனர். எனது அறிவுபூர்வமான விளக்கங்களைக் கேட்டு ஏளனம் செய்தனர். இதுபோன்ற இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Published in உள்நாடு

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பை தமது கட்சி விரும்பவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும் எனத் தெரிவித்து வெளியாகிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை தொடர்பில் தமது கட்சி எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர், இந்த விடயத்தைக் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென்பதே தமது கட்சியின் நிலைப்பாடு எனவும் அமைச்சர் இந்த ஊடக சந்திப்பில் வலியுறுத்தினார்.

Published in உள்நாடு
தமிழர்கள் என்றால்  வீரம்தான். தமிழர்களுக்கும் வீரத்துக்கும் அத்தனை ஒற்றுமை உண்டு என்பதே தமிழர் வரலாறுகள் கூறும் உண்மையாகும். அன்றுபோல் இன்றும் தமிழர்கள் வீரத்துக்கும் விடாப்பிடியான திமிருக்கும் சொந்தக்காரர்கள்தான். 
 
ஆனால், தமிழர்களுக்குத் தனியான ஒரு நாடு உலகில் இல்லை என்பது வேதனைக்குரிய விடயம்தான் உண்மையும் அதுதான். வரலாற்றுக் காலந்தொட்டு தமிழ் மன்னர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழர்களின் பண்பாட்டு அம்சங்கள் இன்றளவில் தென்னிந்தியாவிலும் இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகத்திலும் மேம்பட்டுக் காணப்படுகின்றன. அதேவேளை, 13இற்கும் மேற்பட்ட உலக நாடுகளில் தமிழர்கள் பரந்தும் வாழ்கின்றனர்.
 
இவ்வாறு பரந்துவாழும் தமிழர்களில் அதிகமானோர் இலங்கைத் தமிழர்கள்தான். இதற்குக் காரணம், இலங்கையில் யுத்தமென்ற போர்வையில் தமிழ் மக்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட சில அடாவடி செயற்பாடுகளாகும்.  இலங்கை விவகாரம் இன்று சர்வதேச அரங்கில் பேசப்படும் அளவுக்குப் பூதாகரமாகியுள்ள காரணத்தால் அதுகுறித்து ஆழமாக விபரிக்கவில்லை.
 
ஆனால், உலகளவில் தமிழ் மக்களுக்கு இலங்கையில் என்ன பிரச்சினை என்று கேட்டால், 30 வருட சிவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பார்கள். அல்லது தேயிலைத் தோட்டங்களில் கடுமையாக உழைத்துக் கொடுத்து நாட்டின் முன்னேற்றத்திற்கும் வழி செய்துகொடுத்துவிட்டு குறை வருமானம் பெறுகின்றவர்கள் என்று கூறுவர்.
 
இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் குறித்து மற்றவர்கள் அறிந்தவை இவைதான். அண்மையில் அமைச்சரவை சந்திப்பிலும் சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் தமிழர்களுக்கு இலங்கையில் என்னதான் பிரச்சினை உள்ளது எனக் கேள்வி எழுப்பியிருந்த விவகாரம் சூடு பிடித்தது. இருப்பினும், இலங்கை ஊடகத்துவத்தின் தவறா? அல்லது தமிழர் பிரச்சினை பெரும்பான்மைச் சமூகத்தினர் மத்தியில் இன்னும் செல்லவில்லையா, அல்லது தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளை சிங்கள மக்களுக்குத் தெளிவுபடக் கூறவில்லையா? என்ற பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 
 
எது எவ்வாறிருப்பினும், இன்று வடக்கு, கிழக்கு வாழ் தமிழ்ச் சமூகம் சிவில் யுத்தத்தால் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து மீண்டுவந்து தமக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்து தருமாறு அறவழியில் போராடிவருகின்றார்கள். ஆனால், அதற்கும் சிங்கள ஆதிபத்தியம் பலவித முட்டுக்கட்டைகளைப் போட்டுகொண்டிருக்கின்றது. 
 
யுத்தத்தால் தமது உடைமைகளையும் உறவுகளையும் இழந்து தவிக்கும் இந்தச் சமூகம் தமது உறவுகளை மீண்டும் மீட்கமுடியாது என்பதை அறிந்திருந்தால் தமது பௌதீக வளங்களைப் பெற்றுத்தருமாறே அரசிடம் கோருகின்றது.  பௌதீக வளங்களை மீட்டுத்தந்தால் தாம் அனுபவித்த துன்பங்களை எதிர்கால சந்ததியாவது அனுபவிக்காமல் இருக்கட்டும் என்ற நல்லெண்ணத்தின் கோரிக்கையாகவே அது அமைகிறது.
 
பௌதீக வளங்கள் என்கின்றபோது தமக்கான இருப்பிடங்களையும் யுத்தகாலத்தில் தம்மால் கைவிட்டுச் செல்லப்பட்ட பூர்வீக நிலத்தையுமே கோருகின்றார்கள். முன்னொரு அரசு தரவே மாட்டோம் என்று மக்களின் நிலத்தைத் தழுவிக்கொண்டிருந்தது. தற்போதைய அரசு சிறிதளவேனும் விடுவிப்பது வரவேற்புக்குரியதேயாகும்.
 
அதனையே மறுபக்கத்தில் பார்க்கின்றபோது வடக்கு, கிழக்கிற்கு வெளியே தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியாக மலையகமே காணப்படுகின்றது. இங்கு வாழும் தமிழ் மக்கள் நாட்டின் அபிவிருத்திக்கு இன்றும் இரண்டாம் நிலை பங்குதாரர்களாவர். அந்த மக்களின் வாழ்வியலை மேம்படுத்தவேண்டும் என்று பல அரசுகளும் கூறிய வாக்குறுதிகள் சொற்களுக்கு மட்டுப்பட்டதாக மாத்திரமே மறைந்துபோய்விட்டன.
 
சிறிதளவு கரிசனை காட்டி வந்தாலும், மலையக தமிழ் மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு யார்  முழுமையாகத் தீர்வு தருவார்கள் என்பது கேள்விக்குறியாகவே இன்றும் உள்ளது. இதேபோலதான் வடக்கு, கிழக்கிலும் வீட்டுப்பிரச்சினை என்பது நிரந்தர பிரச்சினையாக நீடிக்கின்றது.  தமிழர்களுக்கு சொந்த நாடுதான் இல்லை என்ற நிலைமாறி இன்று வீடும் இல்லை என்றாகிவிட்டது.  இன்றளவில் நாட்டில் அதிகம் சொந்த வீடில்லாமல் அல்லல்படுகின்றவர்கள் தமிழ் மக்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. 
 
காரணம், சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் மத்தியில் குழுமுறையில் கடன்பெறும் செயற்றிட்டங்களும்  பகிந்தளிக்கப்படுகின்றன. குறிப்பாக, தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் கிராம கட்டமைப்புகள் குறைவாகக் காணப்படுவதால் தமிழ் மக்களுக்கு இவ்வாறான சந்தர்ப்பங்கள் வாய்ப்பதில்லை. 
 
இதனிடையே வெளிநாடுகள் சிலவும் தமிழ் மக்களுக்கு வீடுகளைப் பெற்றுத்தருகின்றோம் என்று கையுயர்த்தினாலும் அவர்களும் அதில் அரசியல், பொருளாதார இலாபத்தை ஈட்டிக்கொள்வதையே நோக்காகக் கொண்டுள்ளனர் என்பது வேதனைக்குரியது. அதேநேரம், இவ்வாறு வெளிநாடுகளால் வாக்குறுதி வழங்கப்படுகின்ற எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன என்பதும் கேள்விக்குறிதான். வீட்டுத்திட்டத்திற்கு  அடித்தளம் இட்ட தமிழன் இன்றளவில் இலங்கையில் சொந்த வீடுகளின்றி பெரிதும் அல்லல்படுகின்றவர்கள் தமிழர்கள்தான். இருப்பினும், அவ்வாறிருக்கின்றபோது இலங்கையில் இன்று அரசால் வழங்கப்படும் வீட்டுத்திட்டத்திற்கு முதலில் அடித்தளமிட்டவரே ஒரு தமிழர்தானாம். இந்த உண்மையை முன்னாள் அமைச்சரொருவர் "சுடர் ஒளி'க்கு கூறினார்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவிடம்  செவ்வியொன்றை பெற்றுகொள்ளச் சென்றிருந்தபோதே அவர் தமிழ் மக்கள் தொடர்பில் தான் கொண்டுள்ள அபிப்பிராயங்களை வெளிப்படையாகக் கூறினார்.
 
தமிழ் மக்கள் என்றால் எனது நம்பிக்கைக்குரியவர்கள் என்றுதான் கூறுவேன். காரணம், இன்றும் எனது வியாபாரச் செயற்பாடுகள் அனைத்தையும் தமிழர்களுடன் மாத்திரமே நம்பிக்கையாக முன்னெடுக்க முடிகின்றது. தமிழ் அரசியல்வாதிகளை வைத்து தமிழ் மக்களை எடைபோடக்கூடாது. தமிழ் அரசியல்வாதிகள் போன்றோர் தமிழ் மக்கள் அல்லர் என்பதே எனது நிலைப்பாடாகும்.
 
தமிழ் அரசியல்வாதிகளின்  அலுவலகங்களுக்கு நான் சென்று பார்த்துள்ளேன். அவர்கள் யாவர் என்பதை பெயர் குறிப்பிட்டுக் கூற விரும்பவில்லை. ஆனால், அவர்களது அலுவலகத்திற்கு வருகின்ற தமிழ் மக்களை அவர்கள் நடத்துகின்ற விதம் மிகவும் மோசமாகவே உள்ளது. அவர்களைவிட மோசமாக சிங்களத் தலைமைகள் உள்ளனர் என்பதையும் நான் மறுக்கவில்லை.
இவ்வாறான அரசியல் தலைமைகள் மத்தியில் தமிழ் மக்களின் தேவைகளை உணர்ந்து செயற்பட்ட சிறந்த அரசியல் தலைமைகளும் உள்ளனர். இவர்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒருவர் முருகையா திருச்செல்வம்.  டட்லி சேனநாயக்கா ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒருவர். 
 
1960  அரசியலுக்குப் பிரவேசித்த இவர், இலங்கைத் தமிழரசுக் கட்சி நிறுவுநர் தந்தை செல்வாவிற்கு அரசியல் ஆலோசகராகப் பணியாற்றினார்.  1965ஆம் ஆண்டில் டட்லி  செல்வா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, தமிழரசுக் கட்சியினர் டட்லி சேனநாயக்கா தலைமையிலான அரசில் இணைந்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆரம்பிப்பதற்கான ஆரம்பக்கட்ட ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 
 
1968ஆம் ஆண்டில் திருகோணமலையில் அமைந்துள்ள திருகோணமலை கோட்டைப் பகுதியை புனித இடமாக அறிவிக்க திருச்செல்வம் மேற்கொண்ட நடவடிக்கையை பிரதமர் டட்லி சேனாநாயக்க தடுத்துநிறுத்தியதையடுத்து அவர் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். 
 
இந்த விடயங்கள் யாவரும் அறிந்தவைதான். இவர் பற்றி பலரும் அறியாத விடயமொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்னிடத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார்.  ஆர்.பிரேமதாஸ என்பது இந்த நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த பெயர். அதனிலும் இவர் இலங்கையில் முதலில் சகலருக்கும் தனி வீடுகள் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் என்றும் அறிவோம். அந்தத் திட்டத்தை அவர் தயாரிக்கவில்லை என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. 
 
காரணம், இந்நாட்டிலுள்ள சகலருக்கும் தனி வீடுகள் கிடைக்கவேண்டும் என்ற திட்டத்தை உருவாக்கியவர் மு.திருச்செல்வம். அவர்தான் டட்லி சேனநாயக்க அரசில் இலங்கையின் வீடமைப்புத்திட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றார். பிரதி அமைச்சராக ஆர்.பிரேமதாஸ பதவியேற்றார். இவர் அப்போதைய பிரதமர் டட்லி சேனநாயக்கவுடனான முரண்பாட்டின் காரணமாக பதவியை இராஜிநாமா செய்தவுடன், அவரின் வெற்றிடத்திற்கு பிரதி அமைச்சராக இருந்த பிரேமதாஸ அமர்த்தப்பட்டார்.
 
அதனையடுத்து அவருக்கு முன்னர் அமைச்சராக இருந்த மு.திருச்செல்வத்தின் திட்டத்தை பிரேமதாஸ நடைமுறைப்படுத்த ஆரம்பித்த காரணத்தினாலேயே அவருக்கு மக்கள் ஆதரவு கிட்டியது. எனவே, மு.திருச்செல்வத்தை தமிழர்கள் மறந்துவிட முடியாது  என்றார்.
 
அமிர்தலிங்கமே பிரிவினைக்கு வித்திட்டார் மு.திருச்செல்வத்தின் வீடமைப்புத்திட்டம் குறித்து முன்பு கூறினேன். அவர் கூறிய ஓர் எதிர்வுகூறல் இன்று நினைவாகிக்கொண்டிருக்கின்றது. அது தொடர்பிலும் இங்கு நினைவுபடுத்த வேண்டும். இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அ.அமிர்தலிங்கம் தலைவராக்கப்படக்கூடாது. அவர் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டால் இலங்கையில் நிலையான ஒரு பிரிவினைவாதம் விதைக்கப்படும் என்று அவர் அன்றே சொன்னார். அவரின் வாக்கை இன்று நான் சிந்தித்துப் பார்க்கின்றேன் எனவும் முன்னாள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ கூறியிருந்தார்.
 
இந்த விடயம் ஒரு விடயத்தை நினைவுபடுத்துகின்றது.  இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்து தமிழர்கள் இலங்கைக்கு எண்ணற்ற அர்ப்பணிப்புகளைச் செய்துள்ளார்கள். ஆனால், அந்த அர்ப்பணிப்புகளுக்கு பதில் உபகாரம் கிடைத்துள்ளதா என்பது இன்றுவரையில் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. அதனால், இதற்கு பதில் உபாகாரமாகவேனும் தமிழ் மக்களை தனி வீட்டுக்கு உரிமையாளர்களாக மாற்றுங்கள். உங்களால் பதில் உபகாரம் செய்யமுடியாவிட்டாலும், தமிழர்களின் பதில் உபகாரம் என்றும் உங்களால் மறக்கமுடியாத அளவு பெறுமதிமிக்கதாகவே அமையும்

கல்முனை மாநகர சபையை நான்கு உள்ளூராட்சி சபைகளாக பிரிப்பதற்காக அதற்கான எல்லைப் பிரதேசங்களை ஆராய்வதற்கென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையை நான்கு உள்ளூராட்சி சபைகளாக பிரிக்கப்படுமானால் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட நகர சபையொன்று உருவாக்கப்படுவதிலும் கிழக்கின் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களைச் சேர்ந்த சகல மக்களதும் அபிலாஷைகள் உள்வாங்கப்பட்டு எந்தவொரு மக்களுக்கும் பாதிப்பு ஏற்டாத வகையில் இவ்விடயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதிலும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சில் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற்றது.அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல் பிரதிநிதிகள் மற்றும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

சகல கட்சிகளினதும் உடன்பாடுகள் பெறப்பட்டு இதற்கு ஒரு சுமூகமான தீர்வை காணும் நோக்கில் எதிர்வரும் 22ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், கோடீஸ்வரன் மற்றும் ஹென்ரி மகேந்திரன் ஆகியோர் தமிழ்த் தரப்பில் கலந்துகொண்டனர். பிரதியமைச்சர் ஹரீஸ், முன்னாள் அமைச்சர் அதாவுல்லா எம்.பி, அஸாத் சாலி உள்ளிட்டோர் முஸ்லிம் தரப்பில் கலந்துகொண்டனர்.

Published in உள்நாடு

உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களுக்காக மேற்கொள்ளப்பட்ட எல்லை மீள்நிர்ணம் அரசியல் நோக்கம் கொண்டதாக அமைந்தமை காரணமாக சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவம் அதிகளவில் குறைக்கப்படடுள்ளது. தற்போது மாகாணசபை தொகுதிகளுக்கான எல்லை மீள்நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பாரபட்சம் ஏற்படாத வகையில் அனைத்து சமூகங்களின் பிரதிநிதித்துவமும் உள்வாங்க கூடியதான நியமங்களை எல்லை மீள்நிர்ணய குழு கடைபிடிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் செயலகம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

“எல்லை மீள்நிர்ணய குழு கடந்த காலங்களில் அரசியல் சார்ந்து செயற்பட்டமையை நாம் அனைவரும் சுட்டிக்காட்டியுள்ளோம். உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் நோக்கத்துக்காக எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட்டபோது அவை உரிய நியமங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஒரு கட்சி தான் அதிகளவான ஆசனங்களை கைப்பற்றக்கூடியவாறு எல்லை மீள்நிர்ணயத்தை செய்துள்ளது.

நான் பிரதிநிதித்துவம் செய்யும் நுவரெலியா மாவட்டத்தில் ஒரு கிராம சேவகர் பிரிவை நான்கு ஐந்து துண்டுகளாக பிரித்து வெவ்வேறு வட்டாரங்களில் இணைத்துள்ளமை காரணமாக அங்கிருந்து தெரிவாகக்கூடிய பிரதிநிதித்துவம் துண்டாடப்பட்டுள்ளது. இதனால் சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநித்துவம் பாதிப்படைந்துள்ளது.

தற்போது மாகாண சபைகளுக்கான எல்லை மீள் நிர்ணய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இரண்டு வாரங்களில் அதற்கான முன்மொழிவுகளைச் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. பிரதேச செயலகங்களின் அடிப்படையிலேயே மாகாண சபைத் தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்படுவதாக அறிகிறோம். நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஒரு பிரதேச செயலகப்பிரிவின் கீழ் இரண்டு இலட்சத்துக்கு அதிகமான சனத்தொகையும் இன்றுமொரு பிரதேச செயலகப்பிரிவின் கீழ் எண்பதினாயிரம் சனத்தொகையும் வாழுகின்ற நிலைமை காணப்படுகின்றது.

ஒரு மாவட்டத்துக்குள்ளேயே காணப்படும் இந்த சமமற்ற நிலைமை காரணமாக மாகாண சபைகளுக்கானத் தேர்தல் தொகுதிகளை உருவாக்குவதில் பல்வேறு சிக்கல்களை நாம் எதிர்கொண்டுள்ளோம்.

மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின்போது எல்லை மீள்நிர்ணயத்தால் சிறுபான்மைச் சமூகங்கள் பாதிப்புறாத வகையில் சிறுதொகுதிகளை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். நாட்டில் மேற்கொள்ளப்படும் கிராம சேவகர் பிரிவுகள், வட்டாரங்கள், மாகாணசபைத் தேர்தல் தொகுதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொகுதிகளின் எல்லலைகளை தீர்மானிக்கின்றபோது தேசிய ரீதியில் முறையானதும் நியாயமானதுமான நியமங்களைக் கடைபிடிக்கவேண்டிய பொறுப்பு எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவுக்கு உண்டு. அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டில் வாழும் சகல இன மக்களினதும் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடியும்“ என்றார்.

Published in உள்நாடு
Page 1 of 3

Latest News

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top