Items filtered by date: Sunday, 19 November 2017
”அமரர் சௌமியமூர்த்தி தொண்ட   மானை நாங்கள் மதிக்கிறNhம். எனது அம்மா, அப்பா என எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் அவர். அதற்காக அவரின் பெயரில் மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு மன்னிப்பு வழங்க இடமளிக்க முடியாது. அவர்களுக்கு எதிராக எப்.சி.ஐ.டிக்கு விரைவில் செல்ல உள்ளோம்" 
 
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் ”சுடர்ஒளிக்கு” வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்தார்.
 
அவருடனான நேர்காணல் வருமாறு 
 
 
 
முற்போக்குக் கூட்டணியின் சாதனைகள் என்ன?
 
ப:- அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி, எனது தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணி ஆகியன புரிந்துணர்வுடன் தமிழ் முற்போக்குக் கூட்டணியை ஆரம்பித்தபொழுது, இது தேர்தலுக்கான கூட்டணியென பலரும் விமர்சித்தனர். ஆனால், இன்று விமர்சித்தவர்களே வியக்கும் வகையில் வட-கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட்டு வருகின்றன. கூட்டணிக்கான சிறந்த தலைமைத்துவத்தினை அமைச்சர் மனோகணேசன் வழங்க, நானும் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனும் அவரோடு இணைந்து ஒத்துழைப்பு வழங்கி வருகின்றNhம். எதையெல்லாம் செய்வதாகக் கூறி ஒவ்வொரு முறையும் தேர்தலில் வாக்கு கேட்டார்களே. இன்று. அதையெல்லாவற்றையுமே சாத்தியமாக்கியுள்ளோம். பல வருடகாலமாக பதுளை, கண்டி ஆகிய மாவட்டங்களில் இழந்திருந்த நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் இன்று மீண்டும் தமிழ் முற்போக்குக் கூட்டணியால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
 
தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, மொனராகலை, மாத்தறை, களுத்துறை,காலி, குருநாகல் போன்ற மாவட்டங்களில் வாழ்ந்து வரும் மலையக மக்களுக்கும் உரிமைகள் வென்றெடுக்கப்பட்டு வருகின்றன. 
 
கணியுரிமை, வீட்டுரிமையற்று வாழ்ந்த பெருந்தோட்ட மக்களுக்கும் இலங்கை நாட்டின் ஏனைய பிரஜைகளுக்கும் 7 பேர்ச் தூய உரித்துடனான காணியினைப் பெற்றுக் கொடுத்து வருகின்றNhம். இரண்டாக இருந்த அம்பகமுவை, நுவரெலியா ஆகிய பிரதேச சபைகள் ஆறாக அதிகரிக்கப்பட்டுள்ளன. பல வருடகாலமாக பெருந்தோட்ட மக்களுக்கு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க தடையாகவிருந்த பிரதேச சபை சட்டம் திருத்தப்பட்டிருக்கின்றது.
 
மலையகத்திற்கான அபிவிருத்தி அதிகாரசபை உருவாக்கப்பட்டு வருகின்றது. பிரதேச செயலகங்களும் வெகுவிரைவில் அதிகரிக்கப்படவிருக்கின்றன. இவையனைத்துமே இத்தனை வருடங்களாக பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டியவை. இவை தனியாக பிரிந்து நின்று செயற்பட்டிருந்தால் சாத்தியமாகியிருக்க வாய்ப்பில்லை கூட்டணியினாலேயே சாத்தியமாக்கப்பட்டுள்ளது.
 
 
 
சிறந்த செயலாற்றுகைக்கான விருது தங்களின் அமைச்சுக்கு கிடைத்திருக்கிறதே?
 
ப:-பெருந்தோட்ட மக்களுக்கு பணிகள் செய்ய அமையப்பெற்ற அமைச்சுக்களில் சிறந்த செயலாற்றுகைக்கான விருது மலையக வரலாற்றில் முதன்முறையாக எனது அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது.
 
ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பேன் என்று வாக்குறுதியளித்ததன் விளைவாகவே மக்கள் எனக்கான அதிகாரத்தினை வழங்கினர். மக்களுக்கு நான் வழங்கிய வாக்குறுதியினை சரிவர செய்தமைக்கான கிடைத்த விருதே இந்த விருது. எதிர்காலத்தில் இந்த அமைச்சிற்கு யார் வந்தாலும், நாங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த அமைச்சில் நாங்கள் எதனையும் கொள்ளையடிக்கவில்லை. கடந்த காலங்களில் இடம்பெற்றதுபோல் ஊழல் இல்லாமல் மக்களுக்கான பணத்தினை மக்களுக்கே சென்றடையச் செய்வதில் மகிழ்ச்சி.
 
 
 
புதிய அரசியலமைப்பு தொடர்பில் தங்களின் நிலைப்பாடு என்ன?
 
ப:-பிளவுபடாத இலங்கைக்குள் சகல இனங்களும் சமத்துவமாக வாழ்வதற்கான வழியேற்படுத்தும் வகையிலான புதிய அரசியலமைப்பு அமையவேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம். சிலர் தங்களுடைய அரசியல் முன்னெடுப்புக்காக புதிய அரசியலமைப்பினை இனவாத நோக்கோடு அணுகுகின்றனர். இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் இனக்கலவரம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளினால் ஒரு பகுதி மக்களுக்கு ஏற்பட்ட விரக்தி நிலையே காரணமாகும். அவ்வாறானதொரு சூழ்நிலை மீண்டும் நாட்டில் ஏற்படாத வகையில் அதற்கான வழியை புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
 
 
 
ஹட்டனில் முழுமையடையாமல் போடப்பட்டிருக்கும் காபட் பாதை பொது மக்களுக்காகவா? அல்லது மோடிக்காகவா?
 
ப:-ஹட்டனிலிருந்து பொகவந்தலாவை வரையிலான வீதியினை அபிவிருத்தி செய்வதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடமும் உரிய அமைச்சிடமும் கோரிக்கையினை நாம் முன்வைத்தமைக்கு அமைவாக, ஹட்டன், பொகவந்தலாவை பாதைகள் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றது. பாரத பிரதமர் மோடி வருகையின் நிமித்தம் வீதியின் ஒரு பகுதி சீர் செய்யப்பட்டுள்ளது. விரைவில் முழுமையாக சீர்செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.
 
 
 
மலையகத்தில் எத்தனையோ தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருக்க, தொண்டமான் பெயர் நீக்கம் இப்போது அவசியமா?
 
ப:- இந்தப் பெயர் நீக்கம் இப்போது எங்களுக்கு தேவையானது அல்ல. வருகின்ற உள்ராட்சி மன்றத் தேர்தலில், அவர்களுக்கு தேவையானது தேர்தல் நாடகத்தினை அரங்கேற்றவே பெயர்மாற்ற விவகாரத்தைப் பெரிதுபடுத்துகின்றனர். இந்த விவகாரம் தொடர்பில் மக்களுக்கு தெளிவடைவது அவசியம். அதேபோல மக்களிடம் தெளிவினை கொண்டு செல்வதும் ஊடகத்தின் பொறுப்பு.
தொண்டமானின் பெயர் நீக்கம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தங்களின் பிழைப்புவாத அரசியலை நடத்தி வருபவர்கள், இதனை வேறு விதமாக திசை திருப்பியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
 
அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானை நாங்கள் மதிக்கிறNhம். எனது அம்மா, அப்பா என நாங்கள் எல்லோரும் ஏற்றுக்கொண்ட தலைவர் அவர். அதற்காக அவரின் பெயரில் மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு மன்னிப்பு வழங்க இடமளிக்க முடியாது. அவர்களுக்கு எதிராக எப்.சி.ஐ.டிக்கு விரைவில் செல்ல உள்ளோம்.
இவர்களின் திறனற்ற நிர்வகிப்பினால் இன்று எனக்கெதிராக விமர்சனம் முன்வைக்கப்படும் ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையம், இறம்பொடை கலாசார நிலையம், நோர்வூட் விளையாட்டு மைதானம் மற்றும் பிரஜாசக்தி என்பன எமது மலையக சமூகத்திடமிருந்து கைநழுவி செல்லவிருந்ததை எனது அமைச்சுக்கு கீழாக கொண்டுவந்து ஆரம்ப காலங்களில் இயங்கிய பெயர்களிலேயே இன்று சரியாக நிர்வகித்து வருகின்றேன்.
 
”100 நாள்” வேலைத்திட்டத்தின்பொழுது கிராமிய அபிவிருத்தி மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சுக்கு கீழாக இந்த நிறுவனம் இருந்த காலகட்டத்தில் ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையம் திறன் அபிவிருத்தி அமைச்சுக்கும், றம்பொட கலாசார நிலையம் உயர் கல்வி அமைச்சுக்கும் நிர்வகிக்க வழங்கப்படவிருந்தது.
 
அவ்வாறானதொரு நிலையேற்பட்டிருந்தால் இன்று இரண்டு நிலையங்களுமே செயலிழந்திருக்கக்கூடும். சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் சட்டக்கோவையில் சரத்து 7 மன்றத்தின் குறிக்கோள்கள் உப பிரிவில், நான்கு நிறுவனங்களும் ஏதேனும் அரசியல் நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படுதலாகாது என குறிப்பிடப்பட்டிருந்தது. துரதிஷ்டவசமாக 2015ஆம் ஆண்டுக்கு முன்னரான நிர்வாகத்தில் முழுக்க முழுக்க அரசியல்மயப்பட்டதாக கட்சி காரியாலயமாக பிரஜாசக்தி நிலையங்கள் போன்றன இயங்கி வந்தமை நாம் அனைவரும் அறிந்ததே. பிரஜாசக்தியின் மனிதவளங்கள் இன்றும்கூட அரசியல் சார்ந்து செயற்படுவது குறிப்பிடத்தக்கது.
 
நோர்வூட் மைதானம் பாவனைக்குதவாமல் பூட்டி வைத்திருந்ததை மறக்க முடியாது. சௌமியமூர்த்தி தொண்டமான் எனும் பெருந்தலைவரின் மறைவுக்குப் பின்னர் அவர் பெயரில் மன்றம் ஆரம்பித்து அதனை முறையற்ற வகையில் நிர்வகித்து அரச நிதியை மோசடியில் செய்திருக்கிறார்கள். மலையக மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், மலையக சமூகத்தில் இருந்து கை நழுவி செல்லவிருந்த நிறுவனங்களை எனது அமைச்சுக்குக் கீழ் கொண்டு வந்து இன்று முறையாக நடத்தி வருகின்றேன்.
 
 
 
பிரஜாசக்தி ஊழியர்கள் பழிவாங்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே..?
 
ப:- பிரஜாசக்தி ஊழியர்கள் எவரும் பழிவாங்கப்படவில்லை. சிலரின் அரசியல் பகடைக்காய்களாக பிரஜாசக்தி ஊழியர்கள் மாறியிருக்கின்றார்கள். ஒருவேளை பிரஜாசக்தி என்னால் ஆரம்பிக்கப்பட்டு இன்று அவர்களின் கைக்கு சென்றிருந்தால் பழிவாங்கல் நடந்திருக்கும். ஆனால், இன்று அவர்கள் சுயாதீனமாக செயலாற்றுகின்றார்கள். பழிவாங்க வேண்டிய தேவை எனக்கேற்பட்டிருப்பின் ~100 நாள்| வேலைத்திட்டத்தில் பிரஜாசக்தி நிலையங்கள் நெனசல நிலையங்களாக மாற்றப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவருமே அதற்கு தலையசைத்தனர். நானும் அதற்கு தலையசைத்திருந்தால் இன்று பிரஜாசக்தி ஊழியர்களின் வாழ்வாதாரம் என்னவாயிருக்கும்? அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகியிருக்கும். 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்கு பிறகு எனது அமைச்சு கீழ் வந்ததன்பின் அவர்களை நேரடியாக எனது அமைச்சின் நிரந்தர அரச ஊழியர்களாக மாற்றி கட்டமைத்துள்ளேன்.
 
என் பொறுப்பில் இல்லாத 2015 செப்டெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இருந்த சம்பள நிலுவை தொகையினையும் வழங்கியிருந்தேன். ஆனால், முன்னைய காலப்பகுதியில் இவர்கள் நிரந்தர ஊழியர்களாக அல்லாமல் மன்றத்தின் ஊழியர்களாக நியமனம் வழங்கி அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டனர்.
பிரஜாசக்தி ஊழியர்கள் எவருமே எனக்கு அரசியல் செய்யத் தேவையில்லை. அவர்களின் பணியினை செய்தாலே போதும். அதைவிடுத்து உள்ளக வெளியக அரசியல் செய்தால் அவர்கள் ஆசனத்தில் நீக்கப்படுவதையும் தவிர்க்க முடியாது.
 
 
 
உள்ராட்சி மன்றத் தேர்தலை தமிழ் முற்போக்கு கூட்டணி எவ்வாறு கையாளப்போகிறது?
 
ப:-உள்ராட்சி தேர்தல் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சியுடன் தொடர் பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றது. பேச்சுகள் முடிந்த பின்னரே அது தொடர்பில் முழுமையாக  கூற முடியும். எங்களுக்கு சாதகமான முறையில் பேச்சுகள் முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில் மாத்திரமே, நாங்கள் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து போட்டியிடுவோம். இல்லாது போனால் தனித்தே களத்தில் இறங்குவோம்.
 
 
 
உள்ராட்சி மன்றத் தேர்தலில் 25 சதவீத பெண்களுக்கான இட ஒதுக்கீடு தோட்டத் தொழிலாளர்களை போய்ச்சேருமா?
 
ப:- பெண்களுக்கு 25 சதவீதம் மட்டுமல்ல, அதனை தாண்டியும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இன்று மலையகத்தை சேர்ந்த ஆளுமையுள்ள பெண்கள் சமூக சிந்தனையுடன் செயலாற்றி வருகின்றார்கள். அவர்களும் அரசியலில் பங்குதாரர்களாக வேண்டும். உள்ராட்சி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எமது தொழிற்சங்கத் தலைவிகள் பலரும் அவர்களுக்கான களத்தை தருமாறு கோரியுள்ளனர். அதுதொடர்பில் நிச்சயமாக கவனம் செலுத்துவோம். கண்டிப்பாக எதிர்வரும் உள்ராட்சி மன்றத் தேர்தலில் எனது கட்சியில் அதிகமான பெண் வேட்பாளர்கள் களமிறங்குவார்கள். 
 
 
 
வடக்கில் நிராகரிக்கப்பட்ட பொருத்து வீடுகள் மலையக வீட்டுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதாக பிரசாரம் செய்யப்படுகிறதே உண்மையா?
 
ப:-நீங்கள் சொல்வது உண்மைதான். பிரசாரம் செய்யப்படுகிறதே தவிர, உண்மையில் கட்டப்படவில்லை. இன்று மலையகத்தில் 160,000 நிர்மாணிப்பதற்கான தேவையுள்ளது. எனவே, நாங்கள் புதிய நவீன உத்திகளையும் கையாளவேண்டிய தேவையுள்ளது. அதற்காக மக்கள் ஏற்காத திட்டங்களை முன்வைக்க மாட்டோம். மக்கள் மத்தியில் எதை சொல்லி அரசியல் பிழைப்பு நடத்துவதென தலைகால் புரியாத சிலர், இன்று எம்மால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை விமர்சிப்பதற்காகவே மக்கள் மத்தியில் முகம் காட்டுகின்றார்கள். பொருத்துவீடுகள் என்கின்றார்கள். வழங்கப்படும் காணி உரித்து முறையானதல்ல என்கின்றார்கள். இன்று மலையகத்தில் கட்டப்படுகின்ற வீடுகள் இதுவரை காலமும் புழக்கத்தில் இருந்துவந்த முறைமையே. வழங்கப்படுகின்ற காணி உரித்தும் முறையாக காணி அமைச்சினால் வழங்கப்படுகின்ற (சின்னக்கர ஒப்பு) உரித்து. இன்று பரவலாக எல்லா மாவட்டங்களிலும் எல்லாப் பிரதேசங்களிலும் கட்டப்பட்டு வருகின்றன. கட்டப்படவில்லை என்று காட்டுகின்ற ஒரு தனியார் நிறுவன ஊடகம் கட்டிய வீடுகளை ஒருநாளும் மக்களிடம் காட்டியதில்லை.
 
 
 
2 ஆயிரம் மில்லியனில் 25 ஆயிரம் வீடுகள் சாத்தியமா?
 
ப:-எங்களது இலக்கு 25 ஆயிரம் வீடுகள் அல்ல.ஒரு இலட்சத்து 60 ஆயிரம்  வீடுகளே. இந்திய அரசு இதுவரை 14 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க எமக்கு உதவி செய்திருக்கிறது. எமது அமைச்சினாலும் வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு இலட்சத்து 60 ஆயிரம் வீடுகளை ஒரே வருடத்தில் அடைய முடியாது. இத்தனை வருடகாலமாக இருந்த கனவை நனவாக்கியுள்ளோம்.
 இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதை நான் அவதானித்து வருகின்றேன். எமது மக்களுக்கு அவர்களை மீறி எவரும் எதுவும் செய்து விடக்கூடாது என்ற எண்ணமே இங்கு பலருக்கும் இருக்கிறது.
 
 
 
பொகவந்தலாவில் மேற்கொள்ளப்படும் மாணிக்கக்கல் அகழ்வினால் சுற்றுச்சுழல் பாதிப்புக்கள் ஏற்படுகிறதே... 
 
ப:-பொகவந்தலாவையில் இடம்பெற்றுவரும் மாணிக்கக்கல் அகழ்வு குறித்த பெருந்தோட்ட கம்பனி மாணிக்கக்கல் அதிகார சபை ஆகியன இணைந்து அனுமதியளித்து இடம்பெறுவதாகும்.
இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற மாணிக்கக்கல் அகழ்வு மக்களை பாதிக்காதவகையிலும், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையிலும் இடம்பெற வேண்டுமென்பதை நாம் தொடர்ச்சியாகவே வலியுறுத்தி வருகின்றNhம்.
 
 
 
அடிக்கல் அதிகமாகவும் திறப்பு விழாக்கள் குறைவாகவும் இருக்கிறதே..?
 
ப:-அடிக்கல் அதிகமாகவும் திறப்புவிழாக்கள் குறைவாகவும் இருப்பதற்கு காரணம் அடிக்கல் நடப்படுவது ஒரே காலப்பகுதியாகவும் மக்களுக்கு கையளிப்பது வெவ்வேறு காலப்பகுதியாகவும் காணப்படுகின்றது. அதேபோல அடிக்கல் நடுவதை மக்கள் மத்தியில் அதிக முக்கியத்துவம் கொடுத்து செல்லும் ஒருசில ஊடகங்கள் மக்களுக்கு கையளிக்கப்படும் நிகழ்வுகளை காட்ட முனைவதில்லை. இந்த வீடமைப்புத் திட்டம் மாத்திரமல்ல. எல்லா அபிவிருத்தித் திட்டங்களுமே அவ்வாறான நிலையில்தான் உள்ளன. இன்று தங்களுடைய அலைவரிசையின் வீச்சிக்காக மக்களின் இல்லாமைகளை, எதிர் விமர்சனங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே அதிகமாகவிருக்கின்றது. ஆனால், அடிக்கல் நடப்படுகின்ற அதேநேரம் அடிக்கல் நடப்படாமலும் வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
 
இவ்வருடத்தில் மாத்திரம் 2550வீடுகள் தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவ்வருட இறுதியில் அதில் அநேகமானவை மக்களுக்கு கையளிக்கப்படும்.
 
 
 
பா.நிரோஸ்
 
இலங்கையில் 50 இற்கும் அதிகமான தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளானதாகவும், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள், அந்தச் செய்திகள் தொடர்பிலான சர்வதேச நாடுகளின் கரிசனைகள், அரசாங்கத்திற்கு அழுத்தங்களை அதிகரிக்கச் செய்துள்ளன. இலங்கையில் யுத்தம் நிறைவுக்கு வந்து எட்டு வருடங்களுக்குப் பின்னரும் தமிழர்கள் மீதான சித்திரவதை தொடர்வதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்ததோடு, சித்திரவதைக்குள்ளானதாகக் கூறப்படும் சில புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.
 
ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரியுள்ள 50 இற்கும் அதிகமான இலங்கைத் தமிழ் ஆண்கள், தாம் தற்போதைய ரணில் - மைத்திரி தலைமையிலான அரசாங்கத்தின் காலத்தில் கடத்தப்பட்டு                 சித்திரவதைக்கு உள்ளானமை தொடர்பில் சர்வதேச ஊடகமொன்றுக்கு தகவல்களை வழங்கியுள்ளனர். 32 வைத்திய மற்றும் உளவியல் மதிப்பீடுகளை ஆய்வு செய்ததுடன், 20 பேரை நேர்காணல் செய்ததில் அவர்களின் மார்பு, இடுப்பு, கால்களில் வடுக்கள் காணப்பட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. (அதற்கான ஆதாரங்களாக புகைப்படங்களும் வெளியாகியிருந்தன) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சிப்பதாகத் தம்மீது குற்றஞ்சாட்டப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியிருப்பதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  
இலங்கை அரசாங்கம் கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தில் இணக்கம் தெரிவித்த விடயங்களில் பொறுப்புக்கூறத் தவறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உலகப் பருவகால மீளாய்வுக் கூட்டத்தில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் அரசாங்கம் தொடர்பில் அழுத்தங்களையும், விமர்சனங்களையும் தோற்றுவித்துள்ளன.
 
 
 
இது முதல் முறையல்ல
 
இலங்கை மீது சித்திரவதைக் குற்றச்  சாட்டுகள் சுமத்தப்படுவது இது முதல்முறையல்ல, யுத்தத்திற்கு முன்னரும் சரி, அதன் பின்னரும் சரி இலங்கையின் பாதுகாப்புப் படையினராலும், பொலிஸாராலும் தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. உலக நாடுகளில் மிகவும் மோசமான சித்திரவதைகளும் துன்புறுத்தல்களும் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக இந்த வருட நடுப்பகுதியில் சித்திரவதைகளிலிருந்து விடுவித்துக்கொள்ளும் சர்வதேச அமைப்பு (ஊணூஞ{ஞ{ஞீணிட்  ஞ_ணூணிட் கூணிணூதணூஞ{) வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கைக்கமைய இலங்கை 06ஆவது ஆண்டாகவும் இந்தப் பட்டியலில் முன்னணியில் திகழ்கின்றது. தேசிய அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறி இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும், இன்னமும் இலங்கையில் மிகவும் கொடூரமான சித்திரவதைகள் இடம்பெறுவதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் அந்த அமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
 
அந்த அமைப்பு 76 நாடுகளில் சித்திரவதைகளுக்கு உள்ளானவர்களுக்கு உதவிவரும் நிலையிலேயே,       சித்திரவதைகள் தொடர்பான பட்டியலை வெளியிட்டிருக்கின்றது. இலங்கையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சித்திரவதைகளுக்கு உள்ளான 230 பேருக்கு தாங்கள் உதவி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ள குறித்த சர்வதேச அமைப்பு, இதற்கமைய உலக நாடுகளில் அதிகளவிலானோர் சித்திரவதைக்கு உள்ளான நாடுகளின் பட்டியலை வெளியிட்டிருந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை அரச படையினரால் கைதுசெய்யப்பட்டும் கடத்தப்பட்டும் கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், உயிர்தப்பியவர்கள் வழங்கிய தகவல்களுக்கமையவே மோசமான சித்திரவதைகள் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக அமைப்பு தெரிவிக்கின்றது. 
 
அதேவேளை, கடந்த 2016 தொடக்கம் இந்த ஆண்டின் முதல் காலாண்டு வரையான காலப்பகுதியிலும் வெள்ளைவான் கடத்தல்கள், சட்டவிரோத தடுப்புகள், சித்திரவதைகள் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரான்  சிஸ் ஹரிசன் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார். இலங்கை பாதுகாப்புப் படையினரில் ஒரு பகுதியினர் ஆட்கடத்தலில் ஈடுபடுவதாகவும் ஒரு பகுதியினர் சித்திரவதைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். தமிழர்கள் இதற்கென சிறப்பாக அமைக்கப்படும் முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும் 2016ஆம் ஆண்டு சித்திரவதைகளை எதிர்நோக்கிய 24 பேரிடம் இது தொடர்பில் தகவல்களைப் பெற்றுள்ளதோடு, 2015இல் சித்திரவதைகளை எதிர்நோக்கிய 33 பேரிடமிருந்தும் தகவல்கள் பெறப்பட்டதாகவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
 
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சித்திரவதைகள் மற்றும் ஏனைய கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவுபடுத்தும் நடவடிக்கைகள்   தண்டனைகள் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரான, ஜுவான் மென்டஸ் இலங்கையில் தொடர்ந்தும் சித்திரவதைகள் தொடர்வதாக குற்றஞ்சாட்டியிருந்தார். அவர் இலங்கை விஜயத்தின் பின்னர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினரால் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். 
 
இதேவேளை, கடந்த ஜூலை மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் தனது விஜயத்தின் இறுதியில் இலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள் இடம்பெறுவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். நாட்டில் நடைமுறையிலுள்ள மிகவும் மோசமான சட்டமாகக் கருதப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு பொலிஸாரும் இராணுவம் உட்பட முப்படையினரும் இந்த சித்திரவதைகளில் ஈடுபட்டுவருவதுடன், அதனை அவர்கள் நியாயப்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
 
இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் சித்திரவதைக்கு எதிரான ஆணைக்குழுவின்  மாநாட்டின்போது  இலங்கையின் பாதுகாப்புத் துறையில் உள்ளவர்களால் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதற்கான வலுவான ஆதாரங்கள் காணப்படுவதாக அறிக்கையில் கவலை வெளியிடப்பட்டிருந்தது.
 
இதேவேளை, இலங்கையின் பாதுகாப்புப்படையினர் தமிழர்களைக் கடத்துவதும், சித்திரவதை செய்வதும் புதிய அரசாங்கம் பதவியேற்று 30 மாதங்கள் கடந்தும் இதுதொடர்வதாக குற்றச்         சாட்டுகள் எழுந்துள்ளன. நாட்டில் கடந்த 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தம் நிறைவுக்கு வந்தும், தொடரும் தமிழர்களுக்கு எதிரான இவ்வாறான செயற்பாடுகளைத் தடுப்பதற்கு புதிய அரசாங்கமும்  தவறியுள்ளதாக உண்மை மற்றும்             நீதிக்கான சர்வதேச செயற்றிட்டம் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் அமைந்துள்ள இராணுவ முகாம்களில் உள்ள சித்திரவதைக் கூடங்களில் குடிவரவு மோசடிகள், மனிதக்கடத்தல்கள், அரசு சார்ந்த அமைப்புகள் அச்சுறுத்தி பணம் பறித்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்வதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 
 
 
 
குற்றச்சாட்டை மறுக்கும் இலங்கை
 
இலங்கையில் சித்திரவதைகள் இடம்பெற்றமைக்கான வலுவான ஆதாரங்களுடன் தொடர்ச்சியாக இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், இலங்கை அரசாங்கமும் இதனை முற்றாக மறுத்து வருகின்றது. 52 தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளானதாக வெளியாகியிருக்கும்                   குற்றச்சாட்டை மறுத்திருந்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் எந்தவொரு சித்திரவதைகளையும் அரசாங்கம் வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அதேவேளை, தமிழர்கள் மீது சித்திரவதைகள் மற்றும் பாலியல் வல்லுறவுகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன, இது ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருவதற்காகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு எனவும் தெரிவித்துள்ளார். இந்தக்  குற்றச் சாட்டுகள் அடிப்படையற்றவை ஆதாரமற்றவை. பாலியல் மீறல்கள் மற்றும்   சித்திரவதைகள் விடயத்தில் இலங்கை அரசாங்கம்   சகிப்புத்தன்மையற்ற கொள்கையைக் கடைப்பிடிக்கிறது எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார். 
 
சித்திரவதைகள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, அவ்வாறான செயற்பாடுகளுடன் இராணுவம் தொடர்புப்படவில்லை எனவும் வலியுறுத்தியிருந்தார். மேலும், கடந்த காலத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா.                     சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன், சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களைச் சந்திக்க அனுமதித்த விவகாரமும் பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்தன. பென் எமர்சன் இலங்கை விஜயத்தின் பின்னர் வெளியிட்ட அறிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு தலையிடியாக மாறியதோடு, பென் எமர்சனுக்கு சிறைச்சாலைக்குள்      சென்று கைதிகளை சந்திப்பதற்கான அனுமதியை யார் வழங்கியது எனவும் ஜனாதிபதி அமைச்சரவை கூட்டத்தின்போது கடுமையாக சாடியிருந்தார். இந்நிலையில், முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவும் கடந்த காலங்களில் இலங்கையில் சித்திரவதைகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்   சாட்டுகளை நிராகரித்திருந்தார். 
 
 
 
சர்வதேசத்தின் கரிசனை 
 
கடந்த  வாரம் அசோஸியேட்டட் பிரெஸ் வெளியிட்டிருந்த சித்திரவதைகள் தொடர்பிலான  புதிய குற்றச் சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என உளவியல் நிபுணர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, அமெரிக்க செனட் சபையின் ஜனநாயகக் கட்சி உறுப்பினரும், வெளிநாடுகளுக்கான அமெரிக்க உதவிகள் குறித்த உபகுழு உறுப்பினருமான பற்றிக் லெஹி, கைதிகள்  தடுப்புகள் அனைத்துலக தர நியமங்களுக்கேற்பவே இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். சித்திரவதைகள் கொடூரமானவை என்பதுடன், நல்லிணக்கம் மற்றும்  நீதிக்கான அரசாங்கத்தின் வாக்குறுதிகளுக்கு முரணானவை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். 
 
இலங்கை பாதுகாப்புப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள சித்திரவதை மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கரிசனை கொண்டுள்ளதாகவும், இத்தகைய மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். இலங்கை பாதுகாப்புச் சேவைகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுகள் தொடர்பாக அமெரிக்கா கரிசனைக் கொண்டுள்ளது. சித்திரவதைகள், வல்லுறவுகள், பாலியல் வன்முறைகள் உலகில் எங்கு நடந்தாலும், அதனை அமெரிக்கா கண்டிக்கிறது எனவும், அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அதேவேளை, இந்த சித்திரவதைகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென மனித உரிமைகள் ஆணையாளர் செயத் ராஅத் அல் ஹ{சைனிடமும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.  அதேவேளை,  அமெரிக்காவின் நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுவில் இடம்பெற்றுள்ள ஜனநாயகக் கட்சி உறுப்பினர் எலியட் ஏஞ்சல்,  இந்த சித்திரவதை அறிக்கைகளை உதாசீனப்படுத்த முடியாது என வலியுறுத்தியிருந்தார். 
 
இலங்கையில் சித்திரவதைகள் இடம்பெறுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். தமிழர்களுக்கான அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் போல் ஸ்குலி இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளரிடம் இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு அவர் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். 
 
 
 
தொடர்கதை
 
ஆட்களைக் கடத்துவதும், விடுவிப்பதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் சாதாரணமாக நடைபெற்ற விடயமெனவும், பாதிக்கப்பட்டவர் தப்பிச்சென்றதன் பின்னர் அவர்களின் குடும்பத்தினர் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாகவும் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்றிட்டம் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டியிருந்தது. இலங்கையில் சித்திரவதைகள் சிகரெட்டால் எரித்தல், கிரிக்கெட் விக்கெட், பொல்லுகளால் தாக்குதல், நெருப்பில் காய்ச்சிய கம்பிகளால் சூடு வைத்தல், மூச்சுத்திணறச் செய்தல், தலைகீழாகத் தொங்கவிடுதல் உள்ளிட்ட செயற்பாடுகள் மூலம் மேற்கொள்ளப்படுவதாகவும் அதற்கான ஆதாரங்கள் காணப்படுவதாகவும் அந்த அமைப்பின் பணிப்பாளர் யஸ்மின் சூகா தெரிவித்திருந்தார். எவ்வாறெனினும், கடந்தகாலங்களில் சித்திரவதைகள் நாட்டில் நடைபெற்றதாகவோ தற்போது நடைபெறுவதாகவோ இலங்கை அரசாங்கம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 
 
திருகோணமலை, வவுனியா ஆகிய இடங்களில் சித்திரவதைகள் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், அதனைத் தொடர்ச்சியாக அரசாங்கம் நிராகரித்து வருகின்றது. இலங்கையில் புதிய ஆட்சியின் கீழும், 600 இற்கும் மேற்பட்டவர்கள் மோசமான    சித்திரவதைகளுக்கு ஆளாகியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவிற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கை உண்மைக்குப் புறம்பானது என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
 
புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகள் சில திட்டமிட்டு, பணத்தை விரயம் செய்து இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான பிரசாரங்களை மேற்கொள்வதாக அமைச்சரவைப்  பேச்சாளரான அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குற்றஞ்   சாட்டியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் உள்ள 400 இற்கும் மேற்பட்ட சித்திரவதை தொடர்பான முறைப்பாடுகள் குறித்து ஆராய முடியுமெனவும், ஆனால், அந்தத் தரவுகளை அவர்கள் வெளியிட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இதே கருத்தையே தற்போதைய தேசிய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர் ஒருவரும் முன்வைத்துள்ளார். ஒருசில பொலிஸ் அதிகாரிகள் தவறிழைத்துள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அது தொடர்பில் விசாரிப்பதற்கு தயார் எனவும் ஏற்றுக்கொண்டுள்ள அவர், சித்திரவதைகள் நடைபெற்றதாகக் கூறப்படும்  கருத்தை முற்றாக நிராகரிக்கின்றார்.
 
 
 
நியாயம் எப்போது?
 
தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் தொடர்கின்றமைக்கான சாட்சிகள் காணப்படுகின்ற நிலையில், அதனை இலங்கை அரசாங்கமும், பாதுகாப்புத் தரப்பும் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றன. என்றாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டுமென்பது அனைவரதும் எதிர்பார்ப்பாகும். இவ்வாறான சூழ்நிலையில், பாதுகாப்புப் படையை மறுசீரமைப்பதனூடாக இவ்வாறான கொடூரங்கள் நடைபெறுவதை தடுப்பதோடு,  அதற்கு காரணமானவர்களை   குற்றவியல் ரீதியில் பொறுப்புக்கூற வைக்கமுடியுமென்பது சர்வதேசத்தின் கருத்து. எவ்வாறெனினும், அதற்கு அரசாங்கம் தயாரில்லை. யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் சித்திரவதைகள் தொடர்கின்றமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன.
 
அவற்றை முன்னிலைப்படுத்தி விசாரணைகள் முன்னெடுக்கப்படுமாயின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பிருக்கின்றது. எனினும், அதனையும் அரசாங்கம் செய்யப்போவதில்லை. காரணம், சித்திரவதைகள் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் குறித்த அரசாங்கத்தின் நிராகரிப்புகள் இதனைப் பறைசாற்றி நிற்கின்றன. எவ்வாறெனினும், 30 வருட யுத்தத்தில் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற அளவிற்கு அனைத்தையும் தொலைத்துவிட்ட தமிழ் மக்களுக்கு நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமை. அது மாத்திரமன்றி, யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் இழைக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு நியாயத்தை வழங்கி பொறுப்புக்கூறலை நிறைவேற்ற வேண்டிய கடமையும் அரசாங்கத்திற்கு எஞ்சியிருக்கின்றது. இந்தக் கடமைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதே அனைவரதும் எதிர்பார்ப்பு!
 
 
 
ச. பார்தீபன்

நாட்டில் என்னென்னவோ பிரச்சினைகள் இருக்கும்போது பியருக்கெல்லாம் பிரச்சினையாப்பா என்று ஒரு கும்பலும், ஏற்கனவே நாடு குடிபோதையால் சீரழிஞ்சிக்கிட்டிருக்கு இதுல பியருக்கும் விலைய குறைச்சா என்ன ஆகப்போகுதோ எனக் கேட்கும் இன்னொரு கும்பலும் தற்போது முட்டிமோதிக்கொண்டிருக்கின்றன.


தேர்தலுக்காக போட்டி போட்டுக்கொண்டிருந்தவர்கள் இன்று பியரின் விலையைக் குறைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போகின்றார்களாம். இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட 2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் முழுமையான மேற்குலகு சாயல் காணப்படுகின்றது எனக் கூறுகின்றனர். இலங்கையில் எந்தவொரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதனை எதிர்ப்பதற்கும் குறை கூறுவதற்குமென்றே ஒரு கூட்டம் நிச்சயம் இருக்கும்.

அதற்காக பியருக்கு வரி குறைப்பு செய்யப்பட்டமை நியாயமானது எனக் கூறவில்லை. மதுபாவனையில் முன்னணி வகிக்கும் இரு மாவட்டங்களுமே தமிழ் மக்கள் செறிந்துவாழும் மாவட்டங்களாகும். யாழ்ப்பாணம், நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் போதைப்பொருளைக் கட்டுப்படுத்த எத்தனையோ திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டும் அவை எவையும் நடைமுறைக்கு சாத்தியப்படவில்லை.
அப்படியிருக்கும்போது தற்போது பியரின் விலையைக் குறைக்க அரசு திட்டமிட்டிருப்பது, சாராயம் போன்ற செரிமானமிக்க மதுபானங்களைத் தடைசெய்ய வேண்டும் என்பதற்காகத்தான். அல்லது செரிமானமிக்க மதுபானங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க எடுத்த மாற்றுத்திட்டமாகவே பியர் விலைக் குறைப்பை அரசு பார்க்கின்றது.

அந்த மாற்றுத்திட்டம் எந்தளவுதூரம் நடைமுறைச் சாத்தியம் என்பதே தற்போது எமக்குள்ள மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சி முதலாளித்துவத்தைத் தழுவிய கட்சி என்ற கணிப்பீடு உள்ள நிலையில், இம்முறை நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் முன்வைக்கப்பட்ட வரவு-செலவுத்திட்டமும் அதன் சாயலையே பிரதிபலித்துள்ளதென்பது அநேகரின் அபிப்பிராயம். காரணம், இதற்கு முன்னர் உள்ள அரசுகள் வழங்கிய வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்குப் புறம்பாக வரி அறவீடு, இயற்கைப் பாதுகாப்பு போன்ற துறைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

இதன்காரணமாகவோ என்னவோ பியர் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நேரடியான எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். ஆனாலும், பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சமரசம் செய்ததன் விளைவாகவோ என்னவோ தற்போது பிரச்சினை சுமுகமாகியுள்ளதாகத் தெரிகிறது. தற்போது கட்சிப் பிரச்சினையைப் பேசுவதை விடுத்து பியர் விடயத்துக்கு வருவோம்.

வரவு-செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி பியர் வரி குறைப்புத் தொடர்பில் கேள்வியொன்றை எழுப்பியிருந்தார். மென்பானங்களில் சீனியின் விலை 20 சதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், பியருக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் பியர் தயாரிப்பின்போது ஒரு நாளைக்கு 300 பொதி சீனி பயன்படுத்தப்படுகின்றது என்று ஹந்துன்நெத்தி எம்.பி. குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் மங்கள சமரவீர, 'வெளிநாடுகளில் பொதுவாக அதியுச்ச காரம் கொண்ட மதுபானங்களுக்குப் பதிலாக குறைந்த காரம் கொண்ட பியரையே அருந்துகின்றனர். பியர் அருந்தும் வீதம் வெளிநாடுகளில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகத்தான் அதிகூடிய காரம் கொண்ட மதுபானங்கங்களின் விலையை அதிகரித்துள்ளதுடன், பியரின் விலையைக் குறைத்துள்ளோம். எனினும், மென்பானங்களைப் பொறுத்தவரை மாணவர்கள் அருந்தும் 40 மில்லிலீற்றர் மென்பானத்தில் 100 வீதம் சீனி சேர்க்கப்படுகின்றது. இது பாரதூரமான விடயம். மென்பானங்கள் அருந்துவதை விடவும் பியர் அருந்துவது சிறந்தது" - என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.

மதுபாவனையின் காரத்தின் அளவுக்கேற்ப வரி அறவிடும் சர்வதேச முறைமையை இலங்கையிலும் நடைமுறைப்படுத்திக் காட்டவேண்டும் என்பதே இந்தத் திட்டம் அறிமுகப்படுத்த பிரதான காரணமாக இருக்கின்றது.

 

 

மதுபானங்களின் வரி அறவீடும் ஆதிக்கம் செலுத்தும் கம்பனிகளும்

டிஸ்டிலரீஸ் தனியார் கம்பனி, அஅஅ கம்பனி, லயன் பிரேவரி கம்பனி ஆகியனவே பியர் உற்பத்திக்கான பிரதான நிறுவனங்களாக உள்ளன. இம்மாதம் 9ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத்திட்டத்தில் பியர் உள்ளிட்ட மென்போதை பானங்களுக்கு வரி 33 சதவீதத்தில் குறைக்கப்பட்டது. செரிமானம் கூடிய ஒவ்வொரு மதுபானத்துக்கும் 2 சதவீதத்திலிருந்து வரி அதிகரிப்பு விதிக்கப்பட்டதோடு, தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியும் 2 சதவீதம் விதிக்கப்பட்டிருந்தது.

மொத்த மதுபானத்தின் நுகர்வைப் பொறுத்தவரை பியரின் சந்தைப் பங்கு, 2017 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் 24 தொடக்கம் 25 வீதம் வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது பியருக்கான வரி குறைக்கப்பட்டுள்ளமை மேலும் பியரின் கொள்வனவை அதிகரிக்கும். காரம் கூடிய மதுபானங்களின் கொள்வனவுக்கான பங்குகள்தான் இதுவரையில் அதிகமாக காணப்பட்டன. இந்நிலை இனிமேல் மாற்றமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் பியர் விற்பனையில் லயன் கம்பனியே அதிகளவு உரிமை கோருகின்றது.இந்நிறுவனம் 80 சதவீதமான பங்குகளைக் கொண்டுள்ளது. பியர் வரி குறைப்பால் பியர் கம்பனிகள் நட்டமடையாத வண்ணம் வரி குறைப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே மதுபானத்தின் போதை செரிமானத்தின் அளவுக்கேற்ப வரி அறவிடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

 

 

செரிமானம் கூடிய மதுபானத்துக்கு மாற்றீடாக பியரைப் பயன்படுத்தினால் என்ன நடக்கும்?

மது ஒழிப்பு, மதுவால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மதுபானத்தைப் பயன்படுத்துவோரின் தெரிவு முறைமைகளை மாற்றியமைத்தால் பாதிப்புகளைக் குறைக்கலாம் என்பதுவே இந்த வரி அறவீட்டு முறைமையின் நோக்கமாக உள்ள நிலையில், ஒரு போத்தல் மதுபானத்தைக் குடிக்கும் அளவுக்கு 4 அல்லது 5 போத்தல் பியரை குடிக்க ஒருவர் பழகிக்கொண்டால் இந்த வரி அறவீட்டு முறைமையில் துளியளவும் பயனில்லாமல் போய்விடும்.

மதுபானம் அருந்தும் பழக்கம் கொண்டவரை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கச்செய்து மதுவை ஒழிக்கச் செய்வோம் என்ற விவாதத்துக்கப்பால் ஒட்டுமொத்த மதுபானங்களின் விலையையும் வரியையும் அதிகரித்து மதுபான கொள்வனவைக் குறைக்கலாம் என வாதிடுபர்களும் அதிகமாக இருக்கத்தான் செய்கின்றார்கள்.


இந்த வாதத்துக்கு நாம் ஒரு சிறந்த ஆதாரத்தை எடுத்துக்கொள்ளலாம். நல்லாட்சி அரசின் மதுஒழிப்புத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றியாகக்காட்டிக்கொள்ளும் சிகரெட்டுக்கு 90 சதவீத வரி அதிகரிப்பு முறைமைக்கு பின்னர் சிகரெட் பாவனையாளர்களின் வீதம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டாலும், தொடர்ந்தும் சிகரெட் பாவனையாளர்களின் தொகை அதிகரித்தவாறே காணப்படுகின்றது மாற்றம் பெரிதளவில் இல்லை. இப்படியிருக்கும்போது பியரின் விலைக்குறைப்பு சமூகத்தில் சாதகமான பெறுபேற்றைத்தான் தரும் என்பதில் எவ்வித உத்தரவாதமும் இல்லை.

 

உள்ளுர் சந்தையில் பியருக்கான மவுசு குறைவு 

காரம் கூடிய மதுபானங்களின் விலையேற்றத்தால் கள்ளு, கசிப்பு, கள்ளச்சாராயம் போன்றவற்றின் உற்பத்தி அதிகரிக்கும் எனத் தெரிகிறது. தமிழ் மக்களிடத்தில் பொதுவாகவே விலையுயர்ந்த மதுபானங்களை நாடிச்செல்வதிலும் பார்க்க, உள்ர் மதுபானங்களுக்கே அதிக மவுசு. அப்படியிருக்கும்போது, பியர் விலைக்குறைப்பு, தமிழ் மக்கள் செறிந்துவாழும் பிரதேசங்களுக்கு மதுபாவனையிலிருந்து விடுபடுவதற்கான எந்தவொரு முனைப்பையும் வழங்காது என்பதே உண்மை.

பியர் கொள்வனவாளர்களில் அதிகமானோர் இளைஞர்களாவர். அவர்களும் செரிமானம் கூடிய மதுபானங்கள் வாங்கக்கூடிய வசதியில்லாதபோதுதான் பியரை நாடுகின்றனர். பொதுவாக மதுபானங்களின் செரிமானம் 20 தொடக்கம் 45 சதவீதம் வரையில் காணப்படுகின்றது. ஆனால், பியரின் செரிமானம் 8 தொடக்கம் 15 சதவீதத்துக்குள்தான் இருக்கிறது. எனவே, 4 பியர் போத்தல்கள் வாங்குவது ஒரு சாராயப் 
போத்தல் வாங்குவதற்குச் சமம் என்ற மனோநிலையை கொள்வனவாளர்கள் பெறுவார்களாயின் மதுபாவனையைக் குறைப்பது என்பது முடியாத காரியமாகிவிடும்.

மதுபானங்களின் காரத்தன்மையைக் கொண்டு வரி அறவிடும் முறைமை சர்வதேச நாடுகள் பலவற்றிலும் உள்ள பொதுவான நடைமுறை என்றிருந்தாலும், அந்நாடுகளில் பியர் கொள்வனவு அதிகரித்து காரமான மதுபானங்களின் கொள்வனவு குறைவாக உள்ளது. இலங்கையில் உள்ர் சந்தையிலுள்ள மதுபானங்களின் பாவனையே அதிகமாக உள்ளது. இது மதுபாவனைக்கான மாற்றீட்டுத் திட்டமாக இருக்க முடியாது.
மது பாவிப்பவர்கள் பியருக்கு தன்னை பழக்கிக்கொண்டு மதுபாவனையைக் காவப்போக்கில் குறைத்து கைவிட ஆரம்பிப்பார்களாயின் அது நல்ல விடயமே. ஆனால், எப்படியும் அது நடக்கப்போவதில்லை. தற்போது பியருக்கான வரி குறைப்பு மதுபாவனைக்கான தூண்டுதலாக அமைந்துவிடக்கூடாது.

பியருக்கான வரிக்குறைப்பு தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் தோற்றம் பெற்றுள்ளன. இதனையொரு சமூகத்தை அழிப்பதற்கான பிரதான காரணியாக காட்டுகின்றனர். இந்தக் கருத்துக்கு மாற்றுக் கருத்தையும் நாம் கூறிவிடமுடியாது. மதுபாவனையற்ற சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஆனால், இந்த பியர் வரிக்குறைப்பு மட்டும் சமூகத்தை சீர்திருத்தும் காரணியாக அரசு அடையாளப்படுத்திவிடக்கூடாது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாளித்துவ மேம்பாட்டை பியர் வரி குறைப்பதிலும் மேற்கத்திய உடைகளை அணிவதிலும் வெளிக்காட்டாதிருப்பது நல்லது. நாம் முதலாளித்துவக் கொள்கைகளில் எவ்வளவோ நல்ல விடயங்களை தழுவவேண்டியிருக்கின்ற நிலையில் தற்போது பியருக்காக போராடுவதும் முட்டாள்தனம் என்றே கூற வேண்டும்.

இலங்கைளில் யுத்தத்திற்கு பின்னர் சமூக மாற்றம் மேம்பாடுடையதாக இருக்க வேண்டும். மலையக மக்கள் பியர் வரிக்குறைப்பை வெற்றியென நினைத்துவிடக்கூடாது. மதுபாவனையற்ற சமூகத்தை உருவாக்கும் முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு' என்பது வள்ளுவன் வாய்மொழிந்த வாக்காகும். 

நீர் இல்லாவிட்டால் எந்த உயிரும் வாழாது. உலக ஒழுங்கு கெட்டு உலக வாழ்வே முடிந்துவிடுமென்பது அதன் பொருளாகும். 

உலகில் நீரற்றுப் போனால் மழையை வேண்டி எத்தனை கொடுமைகளுடன் தவமிருக்க வேண்டும் என சீறாப்புராணத்தின் மேகதூது காவியத்தில் 
உமறுப்புலவர் எடுத்துக்காட்டுகள் மூலம் விவரித்துள்ளார். 

மனிதனால் உணவின்றி ஒரு மாத காலம் வரை வாழ முடியும். ஆனால், தண்ணீர் இன்றி ஒரு சில நாட்கள் கூட உயிர் வாழ முடியாது என்பது, அன்று முதல் இன்றுவரை அனுபவ வாயிலாகவே உணரப்பட்ட உண்மையாகும்.

இலங்கையை பொறுத்தவரையில் நீர் பற்றாக்குறை என்பது மற்றைய உலக நாடுகளை விட, சற்றுக் குறைவாகவே காணப்படுகின்றது. இயற்கையின் கொடையால் பல நதிகளும் நதிகளை ஊற்றெடுக்கச் செய்யும் மலைகளுமாக இலங்கை இயற்கைத் தாயின் சிறு குழந்தையாக திகழ்வதன் பயனே அதுவாகும். அதனால் தான் என்னவோ, அதன் அருமை இலங்கை மக்கள் யாருக்கும் தெரிவதில்லை.
எமது நாட்டில் பல நதிகள் மாசடைவதற்கு பிரதான காரணம் மானிட செயற்பாடுகளாகும். அவ்வாறு மாசடைந்து வரும் நதிகளின் வரிசையில் மகாஓயவும் சேர்ந்துள்ளது.

இந்த நதியை சிலர் மாஓயா என்றும் அழைப்பதுண்டு. கண்டியிலிருந்து ஊற்றெடுக்கும் இரு கிளை நதிகளும் இதனில் கலப்பதால் இந்த நதிக்கு மகாஓயா என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்.
இந்த ஆறு கேகாலையில் ஊற்றெடுத்து ஓடுகின்ற நிலையில் இதன் கிளை ஆறுகளில் இருந்து வருகின்ற நீரின் அளவு காரணமாக நீரேந்தும் பிரதேசங்கள் விசாலமான பரப்பினை கொண்டுள்ளதுடன், இலங்கை நீர்வளத்தின் ஒரு பெரும் சொத்து என்று கருதப்படுகின்றது.

காரணம் இந்த நதியினால் 2 இலட்சம் மக்கள் மாத்திரமே பயனடைகின்றனர் என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தகவல்கள் கூறினாலும் இந்த நதியினால் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தமது அன்றாட குடிநீர்த் தேவை உள்ளிட்ட நீர் சார்ந்த தேவைகளை பூர்த்திசெய்து கொள்கின்றார்கள். இவ்வாறிருக்கின்ற போது இந்த நதி மாசுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டியது அனைவரதும் கடமையாகின்றது.

ரம்புக்கன்ஓய,குடாஓய, ஹிங்குல ஓய, கடிகமுவஓய, தலகல்லஓய ஆகியன இவ்வாற்றில் கலக்கும் கிளை நதிகள் ஆகின்றது. இவ்வாறு கலக்கும் கிளைநதிகளின் பாதிப்பினாலேயே தற்போது மகாஓயா பெரிதும் மாசுபட்டு வருகின்றதாக கூறப்படுகின்றது. குறிப்பாக கடுகன்னாவை வழியாக வரும் ஹிங்குல ஓய உள்ளிட்ட கிளை ஆறுகள் ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

அதற்கான சான்றாக இன்றும் கடுகன்னõவைப் பகுதியில் சிறிய நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று காணப்படுகின்றது. இது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதாக தகவல். இன்று அதனைக் கொண்டு வாகனங்களைக் கழுவுதல் உள்ளிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் ஹிங்குலு ஓயவின் கடுகன்னாவையை ஊடறுத்துச் செல்லும் பகுதி பெரிதும் மாசடைந்தே மகாஓயா ஆற்றில் கலக்கின்றது.


இந்த மகாஓயா ஆறு 130 கி.மீ நீளமானது. இந்த நதியினால் 1538 கி.மீ பிரதேசம் பயனுள்ளதாக காணப்படுகின்றது. இதனை அண்டி வசிக்கும் மக்களே இந்த ஆற்றினால் பெரிதும் பயனடைகின்றார்கள். இந் நதியில் வருடாந்தம் 1485 மீற்றர் அளவிலான நீர் ஓடிச்செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போது அந்த நதியின் நீர்சுத்தம் கேள்விக்குறியாகியுள்ளது. காரணம் இந்த நதியில் இணையும் கெரண்டி ஓய உள்ளிட்ட சிறு கிளை ஆறுகளில் வந்து சேருகின்ற கழிவுகளுடான நீரும் மகா ஓயாவின் நீர் சுத்தத்தினைக் கேள்விக்குறியாக்கிக்கொண்டுள்ளது. இவ்வாறு கழிவுடன் மகா ஓயாவில் கலக்கும் கெரண்டி ஓய ஆற்றுக் குப்பைக் கழிவுகள் கலப்பதன் பின்னாலும் அரசியல் காரணிகளே இருக்கின்றமை வேதனைக்குரியதும் கண்டனத்துக்குரியதுமாகும்.


யடிநுவர கிரிமெடிய பகுதியில் கொட்டப்படுகின்ற கழிவுகளை மீள்சுழற்சி செய்து அவற்றை காபன் உரமாக மாற்றும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்ற யடிநுவர பிரதேச சபைக்கு கெரண்டி ஓய ஆற்றில் கழிவுகளை கலக்கச் செய்யும் செயற்பாடுகளில் பெரும் பங்குள்ளது. 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி இங்கு கழிவு முகாமைத்துவப்பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், அது சில தினங்களுக்கு பின்னர் தலைகீழான நிலைமைக்கு மாறிவிட்டதாலும் கிரிமெடிய மற்றும் கொட மெதுர உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் பெரிதும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.


இதுகுறித்து பிரதேச மக்களின் அங்கலாய்ப்புக்களைக் கேட்டபின்னர் அப்பகுதிக்கு நேரடியாக சென்று பார்த்தபோது குப்பைகளை முறையற்ற விதத்தில் மீள்சுழற்சி செய்கின்றமையை அங்கு காணமுடிந்தது. உர உற்பத்தி எவ்வாறு இருந்தாலும் தவறான முறையில் குப்பை நீருடன் கலப்பதையே அப்பகுதியில் காண முடிந்தது. கிரிமெடிய பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் மழைகாலத்தில் நீருடன் அடித்துச் சென்று கெரண்டி ஓயவில் கலக்கின்றது. இதனால் இப்பகுதியை அண்மித்த கிரிமெடிய பகுதியில் வாழும் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்
கொடுத்துள்ளனர்.


அம்மக்கள் பலத்த சுகாதாரப்பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். அதனிலும் கிரிமெடிய பகுதியில் சிறு குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். என அப்பகுதிவாழ் மக்களிடத்தில் உரையாடிய போது தெரியவந்தது.

 

அச்சுறுத்துகிறது "ஈ'

மகா ஓயா ஆற்றில் கிளையாறாக கலக்கும் பகுதியின் மேல்கிராமமே கிரிமெடிய என அழைக்கப்படுகின்றது. இக்கிராமத்தில் 25இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்கள் தேயிலைத் தோட்டங்களில் கடமையாற்றி தமது அன்றாட வாழ்வாதாரங்களை தேடிக்கொள்ளகின்றனர். இம்மக்களுக்கு கடந்த அரசாங்கத்தினால் காணி உரிமங்கள் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு எவ்வித முன்னறிவித்தல்களும் இன்றியே கிரிமெடிய கிராமத்திற்கு செல்லும் வீதியை அண்டிய பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.

இது தொடர்பில் அப்பகுதியில் வசிக்கும் புஸ்பகுமாரி தமயந்தி என்பவர் தெரிவிக்கையில்."நாங்க தேயிலைத் தோட்டத்திற்கு போய்வந்தா காசு கிடைக்கிது. அதுனால நாங்கள் எந்தநாளும் வேலைக்கி போய்த்தான் ஆகனும். நாங்கள் வேலைக்கு போய் வார இடத்துல குப்பையைக் கொட்டி வக்கிறாங்க.


கொஞ்ச நாளா இங்க சரியா வேல நடந்துச்சி. ஆனா, இப்போ ஒரு நாளக்கி 6 குப்ப லொறி இங்க குப்ப கொட்ட வருது. ஆனா குப்ப ஒதுக்குற வேலையையும் ஓழுங்கா செய்றது இல்ல. அதனால எங்கட வீட்டுல இருக்க 10 மாச குழந்தைக்கு எந்த நாளும் நோயா இருக்கு' என்றவாறு தனது கவலையை வெளிப்படுத்தினார்.யடிநுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவருடன் இந்த குப்பை விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக அவர் தமது கிராமத்திற்கு வரும் பாதையைப் பூட்டி விட்டதாகவும், பின்னர் அந்த வீதியை திறக்க நீதிமன்றத்தின் உதவியை நாடவேண்டிய நிலைமை வந்ததாகவும் அவர் 
"சுடர்ஒளி'க்குத் தெரிவித்தார்.


எவ்வாறாயினும் தற்போதும் இப்பிரதேசத்தில் குப்பைக் கொட்டப்பட்டு வருகின்றது. ஆனால், முறையான முகாமைத்துவச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாமையின் காரணமாக ஈக்களின் தொல்லை பெரிதும் அதிகரித்துள்ளது. ஈக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதேசபையினால் தெளிக்கப்பட்ட மருந்துவகையொன்றினால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் ஈக்கள் பெருமளவில் இறக்கின்றன. சாப்பாட்டிலும் தண்ணீரிலும் இவ்வாறு இந்த ஈக்கள் விழுகின்றமையினால் இப்பகுதி மக்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதாகவும் தெரியவருகின்றது.

கொடமெதுர தமிழ் மக்களின் அவல நிலைமைமேற்குறிப்பிட்ட கிரிமெடிய கிராமத்தை அண்மித்ததாகவும் யடிநுவர பிரதேச சபைக்கு உட்பட்டதாகவும் அமைந்துள்ள கொடமெதுர கிராமத்தில் 10 தமிழ்க் குடும்பங்கள் வசிக்கின்றன. மேல் கிராமத்தில் வசிக்கும் மக்கள் நீதிமன்றத்திற்காவது செல்ல முடியும் என்ற நிலைமை இருக்கின்றபோது, கொடமெதுர தமிழ் மக்கள் எங்கு சென்று யாரிடத்தில் தமது பிரச்சினைகளை கூறுவது என அறியாமல் உள்ளனர்.

இம்மக்களின் வாழ்விடங்களும் சுகாதாரமான வாழ்க்கை வாழ்வதற்கு பொருத்தமானதாக இல்லை என்பதும் வேதனைக்குரியதாகும். இக்கிராமத்தில் வசிக்கின்ற கே.சுபாசினி  "சுடர்ஒளி'க்கு தனது கவலைகளை கீழ்வருமாறு வெளிப்படுத்தினார்.

"எங்க வீட்டுல சின்ன பிள்ளைங்களும் இருக்காங்க. மேல் பக்கத்துல குப்பை போட்ட ஒவ்வொருநாளும் நாலு அஞ்சுனு குப்பை லொறி வந்து போது. யடிநுவர, பேராதெனிய, கண்டி,கடுகன்னாவ, பிலிமதலாவனு எல்லா பக்கத்துல இருந்தும் இங்க குப்ப கொட்டுராங்கள். அதனால், ஈ தொல்ல கூடிருக்குச் சின்னவங்களும் நோய்ப்பட்டு கெடக்குறாங்க நாங்க என்ன செய்றது? யார்க்கிட்ட சொல்றதுனே தெரியல. பீ.எச்.ஐ னு யாரும் வாரதும் இல்ல' எவ்வாறாயினும் இந்த மக்கள் கேட்பாரற்ற நிலையில் வாழ்வது மிகவும் வேதனைக்குரியதொன்றாகும். தமிழ் மக்கள் எங்கு சென்றாலும் கேட்பாரற்ற நிலையில்தான் வாழ வேண்டுமா என்ற கேள்வியும் எழுகின்றது.

 

மகாஓயாவை பாதுகாப்பதற்கான சங்கம்

மகாஓயாவை பாதுகாப்பதற்கான சங்கத்தின் அங்கத்தவரான சந்தன செனவிரத்னவிடத்தில் வினவியபோது, மகாஓயõவின் மேல்பகுதியான அரநாயக்க கிராமத்தில் வசிக்கின்றார்கள். நாங்கள் முன்னர் மகா ஓயõவின் நீரேந்தும் பிரதேசம் மிகவும் பெறுமதியான ஒன்றாகக் காணப்பட்டது. இருப்பினும், தற்போது அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரநாயக்கவில் கணிசமான அளவில் மரங்கள் வெட்டப்படுவதால் மழைவீழ்ச்சியின் அளவும் குன்றியுள்ளது. பல தொழிற்சாலைகளின் கழிவுகளும் நேரடியாக இந்த ஆற்றில் கலந்துவிடப்படுகின்றது. இதனால் மகாஓயா பெரிதும் மாசடைந்து வருகின்றது.

 

மத்திய சுற்றாடல் அதிகாரசபை

மத்திய சுற்றாடல் அதிகார சபை இந்தப் பிரச்சினை குறித்து அறிந்துள்ளது. நேரடியாக ஆற்றில் கழிவுகளை கலக்கச் செய்யும் செயற்பாட்டிற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. எனினும் நதிகளை அண்மித்துக் காணப்படும் காடுகளை அழித்து கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. ஆனால், அதுகுறித்து நகர அபிவிருத்தி அதிகாரசபைதான் கவனமெடுக்க வேண்டும். இங்குள்ள சில பிரதேச செயலாளர்கள் ஊடாக போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்துக்கொண்டு கட்டடன நிர்மாண செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாகத் தகவல். எனவே, அது குறித்து அதிகாரசபையின் அவதானம் திரும்ப வேண்டியதே அவசியமானதாகும்.

 

இலங்கை நீர் பேரவை

இந்த விவகாரம் குறித்து நீர் பேரவை அமைப்பிடத்தில் வினவிய போது அதன் தலைவர் குசும் அதுகோரல, களனி ஆற்றுக்கு அடுத்தபடியாக மகா ஓயா ஆற்றினை நம்பியே அதிக தொழிற்சாலைகள் இலங்கையில் இயங்கி வருகின்றன. மேலும் இரண்டு இலட்சம் மக்களும் இதனால் பயனடைகின்றார்கள். இந்த நதியின் மேல்பிரிவிலும் கீழ்ப்பிரிவிலும் வசிக்கும் சகல தரப்பிலும் மக்கள் இதுகுறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும். இந்த நதி நீரை மாசுபடுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்தாலும், பெரும் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

 

மகா ஓயாவில் மலக்கழிவுகளும் கலப்பு

மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின்போது மகாஓயாவில் மலக்கழிவுகளும் கலப்பதாக தகவல் கிடைத்திருந்தது. குறிப்பாக, 2013ஆம் ஆண்டளவில் மகாஓயாவின் நீரில் மலக்கழிவுகள் கலக்கும் அளவு 16.7 சதவீதமாக இருந்துள்ளது. இன்று மகாஓயாவில் ஆற்று நீரை ஆய்விற்குட்படுத்தினால் நிலைமை எவ்வாறாக இருக்கும் என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

காரணம் முன்பிருந்ததைவிட தற்போது பெருமளவு மலக்கழிவுகள் இந்நதியில் கலப்பதாகத் தெரியவந்துள்ளது. மேலும், 2013 ஆம் ஆண்டில் இந்த நதியின் மத்திய பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் மகா ஓயாவில் கலக்கும் மலக்கழிவுகளின் அளவு 33.3 சதவீதம் ஆக காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வு மாவனல்லை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேசமயத்தில் அலவ்வ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 50 வீதமலக்கழிவுகள் நதி நீரில் கலந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆய்வு முடிவுகளில் மலநீர் கலக்கும் அளவு அதிகம் என்றோ குறைவென்றோ கூறப்பட்டாலும், நாம் மனிதாபிமான ரீதியில் சிந்திக்கின்றபோது 2 மில்லியனுக்கும் மேலான மக்கள் அன்றாடம் 
நீர்த்தேவைக்காகப் பயன்படுத்தும் இந்த நீரில் மலக்கழிவுகளைக் கலப்பது எத்தனை தவறான செயற்பாடென சிந்திக்க வேண்டும். இவ்வாறான மனிதாபிதான சிந்தனைகளை மறந்துவிட்டு மழை பெய்யும் காலங்களில் சூட்சுமமாக மலக்கழிவுகளை ஆற்றுநீருடன் திறந்துவிடுகின்றவர்கள் சற்று சிந்திக்க வேண்டும். இந்தக் கழிவு அடுத்தவர் ஆகாரத்தில் கலந்து விஷமாக்குகின்றது என்ற சிந்தனை உள்ளங்களில் யாருக்காவது வந்தால் மாத்திரமே போதுமானது. இந்த இயற்கையின் கொடையைப் பாதுகாத்து பல உயிர்களுக்கான காப்பீடையும் வழங்க முடியும்.

 

அரசியல் பின்புலம்

எமது நாட்டில் அரங்கேற்றப்படும் பல்வேறு நாசகார செயற்பாடுகளின் பின்புலத்தில் அரசியல், பின்புலக் காரணங்கள்தான் உள்ளதென்பது பலரும் அறிந்த உண்மைபின்புலம் அவ்வாறிருக்கின்ற  போது. இந்த விவகாரத்தில் மாத்திரம் எப்படி அரசியல் காரணங்கள் இல்லாமல் போய்விடும். கடந்த அரசாங்கத்தினால் மகாஓயா ஆற்றுக்கு மேற்புறத்தில் அமைந்துள்ள கிரிமெடியாவப் பகுதியில் குப்பை கொட்டும் செயற்பாடுகளினை முறையற்ற விதத்தில் முகாமைத்துவம் செய்வதன் பின்னணியிலும் யடிநுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் துசித வலகெதர உள்ளிட்டோரின் தலைமையிலான குழுவொன்றே இயங்கிவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதனால் நாசகார செயல்களை நிறுத்த வேண்டுமாயின் முதலில் அவற்றின் பின்புலத்திலுள்ள அரசியல் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டியதே அவசியமாகும். குறுகிய கால அரசியல், அதிகார நோத்திற்காக பல்லாயிரக்கணக்கிலான மக்களின் குடிநீர்த் தேவைக்கு குந்தகம் ஏற்படுத்திவிடாதீர்கள் என்றே கோருகின்றோம்.

 

க.கமல்

காலி மாவட்டத்தில் உள்ள ஜின்தோட்டை பகுதியில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களை அங்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பில் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று காலை ஊரடங்கு சட்டம் நீங்கப்பெற்றது.

இதனையடுத்து பிரதமர் ரணில் ஜின்தொட்டைக்கு சென்றுள்ளார்.

ஜின்தொட்டையில் ஏற்பட்ட பாதிப்புககளை கண்கானித்த பின்னர் சிங்கள மற்றும் முஸ்லிம் குழுவுடன் கலந்தாலோசித்துள்ளார்.

இதன் போது வஜிர அபேவர்தன, சாகல ரத்நாயக்க மற்றும விஜேபால ஹெரத் ஆகியோரும் சென்றுள்ளமை குறிப்பிடத்தகதாகும்.

இதன் போது பிதமர் ரணில் விக்ரமசிங்க வன்மையாக செய்றபட்டவர்களுக்கு எதிராக எவ்வித பாரபட்சமும் இன்றி தண்டனை வழங்குமாறும் நீதியை சரியான முறையில் செயற்படுத்துமாறும் பொலிஸாரிடம் கூறியள்ளதாக தெரிவித்தார்.

Published in உள்நாடு

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’.

இதில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இவருடைய இசையில் ‘நானா தான வீணா போன...’ என்ற பாடலும் ‘சொடக்கு மேல...’ என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று ஆர்வமாக காத்திருந்த இந்நிலையில், இப்படத்தின் டீசரை எதிர்வரும் 30ம் திகதி வெளியிட இருப்பதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

கூகுள் கிளாஸ் திட்டம் தோல்வியுற்றதாக அனைவரும் நினனக்கின்றோம் அதற்கு பதில் அளிக்கும் வகையில் கூகுள் கிளாஸ் மீண்டும் வெளியாகவிருக்கின்றது.

இம்முறை கூகுள் கிளாஸ் ஆட்டிசம் எனும் மூளை குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு உதவ இருக்கிறது.

மூளை சக்தி என்ற நரம்பியல் சார்ந்த ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி முறையில் எம்பவர் மி என்ற மென்பொருளை சில தினங்களுக்கு முன் வெளியிட்டது.

இந்த மென்பொருள் ஸ்மார்ட்கிளாஸ் உதவியுடன் ஆட்டிசம் குறைபாடுள்ளவர்கள் தங்களுக்கு தேவையான சமூக மற்றும் அறிவாற்றல் திறன்களை கற்பித்து கொள்ள முடியும்.

பிரெயின் பவர் நிறுவனம் இந்த மென்பொருளை கூகுள் கிளாஸ் தளத்தில் பயன்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

மக்களை மேம்படுத்த வேண்டும். மக்களுக்கு தீங்கு விளைவிப்பதாக தொழில்நுட்பத்தின் மீது குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அந்த வகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டு மக்கள் எதிர்பாராத வகையில் நெருக்கமாக எடுத்து சென்று, ஒவ்வொருவர் மூளையில் உள்ள தனித்துவத்தை வெளிப்படுத்த முடியும் என பிரெயின் பவர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நெட் சஹின் தெரிவித்துள்ளார்.


கூகுள் கிளாஸ் கண்ணாடியில் உள்ள மென்பொருள் செயற்கை நுண்ணறிவு மற்றும் தலை அசைவுகளை புரிந்து கொள்ளும். இதனால் பெற்றோர், பயிற்சியளிப்பவர்கள் அல்லது நண்பர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள இந்த சாதனம் வழி செய்யும்.

தென் அமெரிக்காவில் கண்டத்தில் அமைந்துள்ள அர்ஜென்டினா நாட்டின் கடற்படைக்கு சொந்தமான சான்ஜூ யர்னஸ் என்ற நீர் மூழ்கி கப்பல் மார்டெல் பிளாடா கடற்படை தள பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.

அதில் ராணுவ வீரர்கள் உள்பட 44 ஊழியர்கள் இருந்தனர். 

அக்கப்பல் கடந்த 3 நாட்களாக திடீரென மாயமானது. கட்டுப்பாட்டு அறையுடன் ஆன ரேடார் தொடர்பும் துண்டிக்கப்பட்டது.

எனவே அந்த கப்பலை தேடும் பணியில் அர்ஜென்டினா கடற்படை ஈடுபட்டுள்ளது. அதில் போர்க்கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. 

மோசமான தட்ப வெப்பநிலை காரணமாக இக்கப்பல் மாயமாகி இருக்கலாம் என கருதப்படுகிறது.

காலி, கிந்தோட்டை முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொலைபேசியில் தகவல் சொன்னாராம். இந்தத் தகவல் கிடைக்கப்பெற்றபோது மஹிந்த கொழும்பில் புதிதாக திறக்கப்பட்ட ஷங்கிரி லா ஹோட்டலில் இரவுநேர விருந்துபசாரத்தில் இருந்தாராம். (மஹிந்தவுக்கு நன்றி செலுத்தும் வகையில் ஹோட்டல் நிர்வாகம் இந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்தது.)

இந்த நிகழ்வில் இருந்தபடியே பிரதமர் ரணிலுக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய மஹிந்த, 'காலி தாக்குதல் நிலைமை என்ன? என்ன செய்திருக்கிறீர்கள்? நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர விசேட அதிரடிப்படையை களத்தில் இறக்குங்கள்" என்று ஆலோசனை சொன்னாராம்..

அதற்குப் பதிலளித்த பிரதமரோ, 'நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. சாகலவை அங்கு அனுப்பியுள்ளேன். பிரச்சினையில்லை" என்று கூறினாராம்.

பின்னர் அந்த முஸ்லிம் வர்த்தகரோடு தொடர்புகொண்ட மஹிந்த நிலைமையை விளக்கிக் கூறியதாக தகவல்.

இன ரீதியான முறுகல்களைக் கட்டுப்படுத்தத் தவறும்போது ஏற்படும் விளைவுகள் குறித்து தனக்கு அருகே இருந்தவர்களிடம் கூறிக் கவலைப்பட்டாராம் மஹிந்த. (அளுத்கம பாதிப்பிலிருந்து அவர் இன்னமும் மீளவில்லை போலும்)

காலி, கிந்தோட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் இடம்பெற்ற சிங்கள - முஸ்லிம் வன்முறைக்கு காரணமானவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
 
அத்துடன், அரசின் நல்லிணக்கச் செயற்பாட்டுக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே இது காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
காலி, கிந்தோட்டைப் பகுதியில் நேற்றுமுன்தினம் சிங்களம், முஸ்லிம் மக்களிடையே முறுகல் ஏற்பட்டதையடுத்து பெரும் பதற்றம் உருவானது.
 
இதையடுத்து முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடுகள், கடைகள் மற்றும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன.  
 
சிறுபான்மை இனத்தவரின் பெரும்பாலான வாக்குகளால் ஆட்சிப்பீடமேறிய இந்த அரசிலும்  இவ்வாறான அட்டூழியங்கள் இடம்பெறுகின்றமையானது பாரிய விமர்சனத்துக்குள்ளாகியுள்ள நிலையிலேயே, இது விடயம் தொடர்பில் தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்துக்குப்  பொறுப்பான அமைச்சர் மனோ கணேசனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
'இந்த முறுகல் நிலைமையானது அரசின் சமாதானம், சகவாழ்வு செயற்பாடுகளுக்கு விடுக்கப்பட்ட பாரிய சவாலாகவே இருக்கின்றது. இன மோதல் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதனை அரசு ஒருபோதும் பார்த்துக்கொண்டிருக்காது. எனவே, இச்சம்பவத்துக்கு காரணமானவர்களுக்கு எதிராகவும் இதுதொடர்பில் தேவையில்லாத வதந்திகளைப் பரப்பி சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்துவோருக்கு எதிராகவும் கடுமையான சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்"- என்றார்.
Published in உள்நாடு
Page 1 of 3

Latest News

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top