Items filtered by date: Wednesday, 22 November 2017

வாக்காளர்களை பதிவு செய்யும் சட்டத்தினை திருத்தம் செய்து, வருடாந்தம் துணை வாக்காளர் இடாப்பொன்றை தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமைச்சரவை இணைப் பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “1980ஆம் ஆண்டு 44ஆம் இலக்க வாக்காளர்களை பதிவு செய்யும் சட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் முதலாம் திகதி 18 வயது பூர்த்தியாகின்ற அனைவருக்கும் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ள முடியும்.

அதற்காக வாக்காளர் இடாப்பு வருடாந்தம் மறுசீரமைக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் குறித்த பணியினை மேற்கொள்வதற்கு எடுக்கும் காலப்பிரிவினுள் ஏதேனுமொரு தேர்தல் வரும் சந்தர்ப்பத்தில் கடந்த வருடத்தின் வாக்காளர் இடாப்பே பயன்படுத்தப்பட்டு வருவது வழமையாகும்.

இதனால், குறித்த வருடத்தில் 18 வயதினை அடைகின்ற இளைஞர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் போகின்றது. இதனைக் கருத்திற் கொண்டு ஒவ்வொரு வருடமும் துணை வாக்காளர் இடாப்பொன்றை தயாரிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் ஆணைக்குழு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.

அதற்கு அவசியமான அம்சங்களை உள்ளடக்கி 1980ஆம் ஆண்டு 44ஆம் இலக்க வாக்காளர்களை பதிவு செய்யும் சட்டத்தினை திருத்தம் செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பிலான யோசனைக்கு அமைந்நரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்திருந்தார்” எனக் குறிப்பிட்டார்.

Published in உள்நாடு

“பாகிஸ்தான் பள்ளிவாசல்களில் சிறுவர்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள் வருகின்றன, எனினும் சட்டமும், பொலிஸாரும் அவற்றிற்கு உறுதுணையாக இருப்பதோடு, தீவிரவாதிகள், மதகுருமார்கள், அதிகார வர்க்க வலைப்பின்னல், வலதுசாரி இயக்கங்களின் துணையுடன் குற்றவாளிகளான மதகுருமார்கள் தப்பி வருகின்றனர்“ என அசோசியேட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“தனது 9 வயது மகனின் இரத்தம் தோய்ந்த காற்சட்டையை நினைத்துக் கொண்டு கண்ணீருடன் தாயார் கவுசர் பர்வீன் தன் மகன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதை விபரித்துள்ளார். கெரோர் பாக்கா என்ற ஊரில் உள்ள இஸ்லாமியப் பாடசாலையிவ் இந்தச் சிறுவன் படித்து வந்தான். இந்நிலையில் ஒரு ஏப்ரல் மாத கடும் வெயிலில் இஸ்லாமிக் மத்ரசாவில் தன் அருகே மதகுருமார் படுத்திருப்பதைக் கண்டான் அந்தச் சிறுவன். அதன் பிறகு மூர்க்கமான பாலியல் பலாத்காரத்தில் அவர் ஈடுபட்டதாக தாயார் கூறுகிறார்.

பாகிஸ்தான் மத்ரஸாக்களில் பாலியல் துஷ்பிரயோகம் என்பது மிகப் பரவலாக ஊடுருவிய ஒரு தீங்காகி விட்டது என்பதே. மதகுருமார்கள் அதிகாரம் செலுத்தும் ஒரு சமூகத்தில் பாலியல் துஷ்பிரயோகம் என்பது பேசாப்பொருளாகியுள்ளது. இது பொதுவெளியிலும் எப்போதாவது விவாதிக்கப்பட்டு வருகிறது. எப்போதாவது இத்தகைய தீய செயல்கள் தண்டிக்கப்படுவதும் நடந்து வருகிறது.

இத்தகைய விவகாரங்களில் பொலிஸுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து நீதி நிலைநாட்டப்பட முடியாமல் மதகுருமார்களால் தடுக்கப்பட்டும் வருகிறது என பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.

களிமண் வீடுகள் கொண்ட கிராமங்கள் முதல் நாகரீகம் அடைந்த நகரங்கள் வரை பாகிஸ்தானில் இஸ்லாமியப் பாடசாலைகளில் பாலியல் வன்முறைகள் பரவலாகியுள்ளதாக அசோசியேட் பிரஸின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன, 20 இலட்சம் குழந்தைகள் பாகிஸ்தான் இஸ்லாமியப் பாடசாலைகளில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மதகுருமார்களின் பாலியல் வன்முறைகளுக்கு இவர்கள் ஆளாவது பற்றிய விசாரணை பொலிஸ் ஆவணங்கள், பாதிக்கப்பட்டோரிடம் நேர்காணல்கள், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், உதவிக்குழுக்கள் மற்றும் மத அதிகாரிகள் ஆகியோரிடம் நேரில் பேசியது என பல வழிகளில் இந்த ஆய்வுகள் நடத்த இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

மதகுருமார்கள் மற்றும் இவர்களுக்கு ஆதரவளிக்கும் தீவிரவாத அமைப்புகள் மீது பயம் அதிகரித்துள்ளது. இந்த பாலியல் துஷ்பிரயோகங்களை பதிவு செய்யும் பணி அளிக்கப்பட்ட அமைச்சக அதிகாரி ஒருவர் கருத்து வெளியிடுகையில் “'மத்ரசாக்களில் பாலியல் வன்முறைகளால் தொற்று நோய் போல் நிரம்பியுள்ளது' என்றார். இவர் தன் பெயரைக் கூற விரும்பவில்லை, காரணம் இவர் மத்ரசா பாலியல் வன்முறைகளைப் புகாராக பதிவு செய்வதால் இவர் தற்கொலைத் தாக்குதல் இலக்காக்கப்பட்டுள்ளார்.

'மத்ரசாக்களில் ஆயிரக்கணக்கில் பாலியல் வன்முறைகள் நிகழ்கின்றன. இது மிகவும் சகஜமாகி விட்டது' என அவர் அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் இத்தனை மிரட்டல், அபாயங்களையும் மீறி 359 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இது பனிமலையின் ஒரு முகடு மட்டுமே என்கிறார் சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்யும் போக்குக்கு எதிரான சாஹில் என்ற அமைப்பை நடத்தி வரும் முனிஸா பானு.

பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட இஸ்லாமியப் பாடசாலைகளின் எண்ணிக்கை 22,000 ஆகும். இங்கு படிக்கும் மாணவர்கள் மிகவும் ஏழைகள், இந்தப் பாடசாலைகளில் உணவும், கல்வியும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் மதகுருமாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 10 வயது சிறுவன், “எனக்கு பயமாக இருக்கிறது, நடந்ததை வெளியே சொன்னால் என் குடும்பத்தினரை கொலை செய்வதாக அச்சுறுத்தினார்” எனத் தெரிவித்துள்ளார்.

எனினும் உள்ளூர் சமூகத் தொண்டு அமைப்பான ரோஷன் பாகிஸ்தான் மதகுருமாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணைப் போராடி வழக்குத் தொடுக்க சம்மதிக்க வைத்தனர், இதனால் 2016ஆம் ஆண்டு குற்றவாளி மதகுருமாருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது.

பல சந்தர்ப்பங்களில் மிரட்டலுக்குப் பயந்தும் சில சமயங்களில் பணம் வாங்கிக் கொண்டும் ஏழை மக்கள் அமைதியாகி விடுகின்றனர்.

மூலம் - அசோசியேட் பிரஸ் மற்றும் தி ஹிந்து

அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தில் கட்டட உரிமையாளருக்கு சுமார் 1480 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க விமான நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி அல்-குவைதா தீவிரவாதிகள் விமானங்களை கடத்தி நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டடத்தின் மீது மோதி வெடிக்கச் செய்தனர்.

இதில் பயணிகள் உள்ளிட்ட 2,750 பேர் உயிரிழந்தனர். மேலும் அமெரிக்க .ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மற்றொரு விமானத்தை மோதி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் மொத்தமாக 3,000 பேர் வரை உயிரிழந்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான இரட்டை கோபுரம், நியூயோர்க் மற்றும் நியூஜெர்ஸி துறைமுக கழகத்திற்குச் சொந்தமானது. சம்பவம் நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன், சில்லவர்ஸ்டீன் என்பவர் 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருந்தார்.

கட்டடத்திற்கு அவர் காப்புறுதி செய்திருந்த நிலையில் தாக்குதலுக்கு பின், சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்திடம் இருந்து 30,000 கோடி ரூபாயை இழப்பீடு தொகையாகப் பெற்றார்.

எனினும் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு இரட்டை கோபுர தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட அமெரிக்க எயார்லைன்ஸ் மற்றும் யுனைடெட் எயார்லைன்ஸ் விமான நிறுவனங்கள் மீதும் சில்லவர்ஸ்டீன் வழக்கு தொடர்ந்தார். அந்த முறைப்பாட்டு மனுவில் அவர் 18,9,714 கோடி ரூபாய் இழப்பீடும் கோரி இருந்தார்.

இந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றங்களில் கடந்த 17 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், 625 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க விமான நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன. இதை சில்லவர்ஸ்டீனும் ஏற்றுக்கொண்டுள்ளதை அடுத்து வழக்கு நிறைவுக்கு வந்துள்ளது.

இன்று நாட்டின் பெற்றோலிய வியாபாரத்தில் பெறும் மாபியா கும்பல் ஒன்று உள்ளது. நான் அமைச்சராக இருக்கும் வரையில் ஒருவருக்கும் திருட்டு வழியில் பணம் செய்ய அனுமதிக்கமாட்டேன். தனிப்பட்ட ஒரு குழு மாத்திரம் பெற்றோலிய விற்பனையில் இலாபமீட்டுவதையும் நான் விரும்பவில்லை.
 
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்களுடனான சம்பள உயர்வு தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று பெற்றோலிய வளத்துறை அமைச்சில் கைசாத்திடப்பட்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,  நான் அமைச்சராக இருக்கும் வரை இந்நிறுவனத்தை விற்க ஒப்புக்கொள்ளமாடடேன். எனது கொள்கை அரச சொத்துக்களை பாதுகாப்பதே.  நாங்கள் எங்கள் நிறுவனத்தின் செலவுகளை குறைத்து முன்னேறிச்செல்லவேண்டும். 
 
நாடு என்ற ரீதியில் இந்த நிறுவனத்தை லாபமீட்டு ஒரு நிறுவனமாக மாற்றுவதா அல்லது மக்களுக்கு சேவைசெய்யும் நிறுவனமாக மாற்றுவதா என்ற விடயங்களில் கவனம் செலுத்திவருகின்றோம். பெற்றோலிய கூட்டுத்தாபனம், மின்சார சபை, நீர் வடிகாலமைப்புச் சபை போன்ற நிறுவனங்களில் இலாபமீட்ட முடியாது. நாங்கள் இலாபம் என்று பார்ப்பது சேவை வழங்கவும் முடியாது. 
 
பெற்றோலி கூட்டுதாபனத்தின் தொழிலாளர்கள் எரிபொருளில் இருந்து வரும் விஷவாயுக்களால் நிரைய ஊழியர்களுக்கு நோய்கள் ஏற்பட்டுள்ளது. இதை நாங்கள் மறுக்கக்கூடாது.எனவே ஊழியர் இந்நிகழ்வு இடம்பெறக் காரநலன் கருதிய இவ்வாறான ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளது. 
Published in உள்நாடு

தாதிகள் மற்றும் சுகாதார சேவை ஊழியர்கள் ஒன்றிணைந்த கூட்டமைப்பினரால் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டமொன்று இடம்பெற்றது.

சுகாதார சேவை சம்பள பிரச்சினை, மேலதிக சேவை நேரத்தின் மிகுதி சம்பளத்தை உடனடியாக வழங்குமாறு கோரியே இந்த வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த வேலை நிறுத்தப் போராட்டமானது இன்று காலை 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை அமுல்படுத்தப்படும் எனவூம் 17 சுகாதார சேவை அமைப்புக்கள் இதில் பங்கேற்றுள்ளதாகவூம் சுகாதார சேவை ஊழியர்களின் ஒன்றிணைந்த கூட்டணியின் இணை ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

அதேநேரம் குறித்த பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அவகாசம் வழங்கப்படும் வேளையில் எந்நேரத்திலும் குறித்த வேலைநிறுத்தத்தை கைவிட தயாராக இருப்பதாகவூம் சுகாதார சேவை ஊழியர்களின் ஒன்றிணைந்த கூட்டணியின் இணை ஒருங்கிணைப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

சர்வதேச விண்வெளி நிலையம் இலங்கை வான்பரப்பில் தென்படும் என நாசா விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையமானது இன்று மாலை இலங்கை வான்பரப்பினூடாக இலங்கையை கடந்து செல்லவுள்ளது.

இவ் மையமானது இன்று மாலை 6.25 மணியளவில் இலங்கைக்கு தென்மேற்காக பயணிக்குமெனவும் 5-8 நிமிடங்கள் மாத்திரமே இலஙகைக்கு மேலாக பயணிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இவ் விண்வெளி மையத்தை மக்கள் வெற்றுக்கண்கால் பார்க்க முடியும் என்றும் நாசா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Published in உள்நாடு

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ வெற்றிப் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பொன்ராம் - சூரி - டி.இமான் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைகிறது.

இப் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

மற்றும் சிம்ரன், நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியனும், முதல்முறையாக வில்லியாக சிம்ரனும் நடிப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியிருக்கிறது.

24 ஏ.எம். ஸ்டூடியோஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகின்றார்.

இந்த படத்தின் முதல் காட்சிப்படமானது சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்ரிக்க நாடான சிம்பாப்வேயில் ராபர்ட் முகாபே 1980-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்தார்.

அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி அந்நாட்டு துணை ஜனாதிபதி எம்மர்சன் நாங்காவாவை முகாபே பதவி நீக்கம் செய்தார்.

ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சிவெங்கா, நீக்கப்பட்ட துணை அதிபர் நாங்காவாவுக்கு ஆதரவாக இருந்ததால், கடந்த 15-ம் தேதி தலைநகர் ஹரரேவை ராணுவ பீரங்கிகள் சுற்றி வளைத்தன.

அதிபர் முகாபேவுக்கு எதிராக ராணுவம் கிளர்ந்துள்ளதற்கு அந்நாட்டு மக்கள் ஆதரவு அளித்த நிலையில், முகாபே பதவி விலகவேண்டும் என ஆளும்கட்சி எம்.பி.க்கள் உள்பட அனைவரும் போர்க்கொடி தூக்கினர்.

இதனையடுத்து, முகாபே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், அனைவரும் எதிர்பார்த்த படி முகாபேவால் நீக்கப்பட்ட முன்னாள் துணை ஜனாதிபதி எம்மர்சன் நாங்காவா அந்நாட்டின் புதிய அதிபராக வரும் 24-ம் தேதி பதவியேற்க உள்ளதாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

மேஜர் ஜெனரல் ஷி ஷோங்வூ தலைமையிலான 56 சீன படை அதிகாரிகளைக் கொண்ட குழு கல்வி சுற்றுலாவை  மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்புகள், கடந்த கால யுத்த அனுபவங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த விடயங்களை  நேரில் அறிந்து கொள்ளவே சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக குழு விஜயம் மேற்கொண்டுள்ளது.

இந்தக் குழுவின் தலைவரான மேஜர் ஜெனரல் ஷி ஷோங்வூ தலைமையில், ஐந்து அதிகாரிகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

2018ஆம் ஆண்டில் 2.5 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கவருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக  முதலீட்டுச் சபையின் தலைவர் துமிந்திர ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

“இந்த ஆண்டு 1 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆண்டு  இறுதிக்குள், 1.5 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பெற முடியும்“ என அவர் கூறினார்.

எனினும், இந்த ஆண்டு முதலீடுகள் மேற்கொண்ட பிரதான நாடுகள் பற்றிய விபரத்தையோ, எவ்வாறு 500 மில்லியன்  டொலர் நிதியை வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் பெற்றுக்கொள்ள முடியும் என்ற விபரத்தையோ அவர் வெளியிடவில்லை.

ஒரே ஆண்டில், அதிகபட்ச வெளிநாட்டு முதலீடு பெற்றுக் கொள்ளப்பட்டது இதுவே முதல் முறையாகும் எனவும், 2012ஆம்  ஆண்டு 941 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடு திரட்டப்பட்டதே, ஒரு ஆண்டின் அதிகபட்ச சாதனையாக இருந்து  வந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

2016ஆம் ஆண்டில், 898 மில்லியன் டொலரும், 2015ஆம் ஆண்டு 680 மில்லியன் டொலரும், வெளிநாட்டு நேரடி முதலீடாகப்  பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published in வணிகம்
Page 1 of 4

Latest News

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top