Items filtered by date: Friday, 24 November 2017

எகிப்து வடக்கு சினாய் மாகாணத்திலுள்ள பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலொன்றில் குறைந்தது 184 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவூம் 120 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாகவூம் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமய ஆராதைகளின் பின்னர் குறித்த இடத்தை நோக்கி வந்த தாக்குதல்தாரிகள் குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

egypt-gettyimages-878431536.jpg

 

பள்ளவாசலில் வைக்கப்பட்டிருந்த குண்டும் வெடித்தமையினால் உயிரிழந்தவர்களின் தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் வைத்து இளைஞரொருவரை கறுப்பு டிபெண்டரில் கடத்திச் சென்று தாக்கியதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டு, தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட எண்மரில் அறுவருக்கு தலா 12 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று தீர்ப்பளித்தது.
 
அத்துடன், 2, 8ஆவது பிரதிவாதிகள் தவிர அறுவருக்கு தலா 32,000 ரூபாய் தண்டப்பணம் விதித்ததுடன், தாக்கப்பட்ட நபருக்கு 285,000 ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் கட்டளையிடப்பட்டது.
 
2012ஆம் ஆண்டு டிசெம்பர் 21ஆம் திகதியன்று, தெமட்டகொடை பகுதியில் வைத்து டிபெண்டரொன்றில் கடத்தப்பட்ட அமில பிரியங்கர அமரசிங்க என்ற இளைஞர் தாக்கப்பட்டிருந்தார்.
 
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கறுப்பு டிபெண்டர், ஹிருணிகா எம்.பியுடையது என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்ததுடன், அச்சம்பவதத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஹிருணிகா எம்.பி உட்பட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், இவர்களுக்கு எதிராக அதிகுற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
 
அந்த வழக்கு, மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்க முன்னிலையில் இம்மாதம் 6ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 1,3,6,7 ஆம் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணியும் 2,4,5,8ஆம் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணியும் தங்களுடைய சேவை பெறுநர்கள் 1,2,11,13,14,23 ஆகிய குற்றங்களையும் ஒப்புக்கொள்வதாக மன்றில் அறிவித்திருந்தனர்.
 
எனினும், ஹிருணிகா எம்.பியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தமது சேவை பெறுநர் தன்மீதான குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் வழக்கின் சாட்சியப்பதிவை நடத்த வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
 
நேற்றையதினம் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 1,3,6,7ஆம் பிரதிவாதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையால் ஒத்திவைக்கப்பட்ட தண்டனையும் சாதாரண நட்டஈடும் விதிக்குமாறு அவர்களுடைய சட்டத்தரணி கோரினார்.
 
2,4,5,8 ஆம் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி காமினி அல்விஸ் தமது சேவை பெறுநர்களில் 2ஆவது பிரதிவாதி அரச சேவையாளர் என்றும் அவருடைய எதிர்காலத்தைக் கருத்திற் கொள்ளுமாறு கோரியதுடன், 8ஆம் பிரதிவாதி 17 வயது நிரம்பியவர் என்றும் நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்ததுடன், 2,8ஆம் பிரதிவாதிகள் நீதவான் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் இனங்காணப்படவில்லை என்றும் அறிவித்தார்.
 
மேலும், குறைந்த பட்ச தண்டனை வழங்குமாறும் 2,8ஆம் பிரதிவாதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் கோரிநின்றார்.
 
கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட அமில பிரியங்கர சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தமது சேவை பெறுநர் இன்றுவரை வேலைக்குச் செல்லவில்லை என்றும் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவித்தார். அவருக்கு உரிய நட்டஈடு வழங்கப்பட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
 
ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதினாறரை வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும்  என்று மன்றில் தெரிவித்த சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஜானக பண்டார, எதிர்காலத்தில் இவ்வாறான குற்றங்களைத் தடுக்கும் வகையில் தண்டனை அமையவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
 
கடையில் வேலைசெய்தவரை இழுத்துச்சென்று நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் வைத்துத்தாக்கியுள்ளனர். மாணவர், அரச ஊழியர் என்பதற்கு அப்பால் இவ்வாறான விடயங்களைச் செய்ய இவர்கள் யார் என்று கேள்வியெழுப்பியதுடன், உட்சபட்ச தண்டனை வழங்கக்கோரினார்.
 
1ஆவது குற்றத்துக்காக, 2,8ஆம் பிரதிவாதிகள் தவிர ஏனையோருக்கு 12 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 1 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, 2 ஆவது பிரதிவாதி தவிர ஏனையோர் 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தவேண்டும் என்றும் செலுத்தத் தவறின் 4 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் கட்டளையிட்டார்.
 
11ஆவது குற்றத்துக்காக, ,8ஆம் பிரதிவாதிகள் தவிர ஏனைய குற்றவாளிகளுக்கு 12 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 1 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, 2ஆவது குற்றத்துக்காக 2 ஆவது பிரதிவாதி தவிர ஏனை அறுவரும் 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தவேண்டும் என்றும் செலுத்தத் தவறின் 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் கட்டளையிட்டார்.
 
13,14ஆம் குற்றங்களுக்காக 2 ஆவது பிரதிவாதி தவிர ஏனைய அறுவரும் தலா 2,000 ரூபாய் தண்டப்பணம் செலுத்தவேண்டும் என்றும் 8ஆவது பிரதிவாதியை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான தனிப்பிணையில் விடுத்த நீதிபதி, அவரை ஒரு வருடத்துக்கு கண்காணிப்பில் வைத்திருக்குமாறு பிணையாளரைான அவருடைய தந்தைக்கு அறிவுறுத்தினார்.
 
மேலும்,  பாதிக்கப்பட்ட நபருக்கு 2ஆவது பிரதிவாதி 75,000 ரூபாய் நட்டஈடும் 5 ஆவது பிரதிவாதி 10,000 ரூபாயும் ஏனைய ஐவரும் தலா 40,000 ரூபாய் நட்டஈடும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், நட்டஈடு மற்றும் தண்டப்பணத்தை ஜனவரி 26ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை அன்றைதினத்துக்கே ஒத்திவைத்தார்.
 
Published in உள்நாடு

பாடசாலை சீருடைகளுக்கான வவூச்சருக்கு மேலதிகமாக வறிய மற்றும் அதிக வறிய மாணவர்கள் சுமார் 3 இலட்சம் பேருக்கு பாதணிகளை கொள்வனவூ செய்வதற்கான வவூச்சர் வழங்கப்பட உள்ளதாக கல்வியமைச்சு கூறியூள்ளது.

அத்தோடு சீருடை மற்றும் பாதணிகளுக்காக 45 இலட்சம் வவூச்சர்கள் அச்சிடப்படுவதுடன் தற்போதிருக்கின்ற நிலமைக்கு அமைய பாடசாலை விடுமுறைக்கு முன்னதாக மாணவர்களின் கைகளுக்கு இது கிடைப்பதில் பிரச்சினை இருப்பதாகவும் கல்வியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 15 ஆம் திகதியாகும் போது அனைத்து வவூச்சர்களையூம் அச்சிட்டு தருவதாக அரச அச்சக திணைக்களத்தினால் கூறப்பட்டிருந்த போதிலும்இ அது 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அந்த வவுச்சர்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அடுத்த வாரத்திற்குள் கிடைக்காவிட்டால் விடுமுறைக்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்று கல்வியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published in உள்நாடு

 

ஜனாதிபதியின் உறவினர் ஒருவரின் வீடு உள்ளிட்ட 40 வீடுகளில் கொள்ளையடித்த சந்தேகநபர் ஒருவர் இன்று தம்புத்தேகம கொன்வேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்திலிருந்து தப்பிச்சென்றுள்ள குறித்த சந்தேகநபருக்கு எதிராக கொள்ளைச்சம்பவங்கள் தொடர்பில் சுமார் 40 இற்கும் அதிகமான வழக்குகள் காணப்படுவதாகவூம் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர் ஜனாதிபதியின் உறவினர் ஒருவரின் வீட்டில் 20 பவூன் நகை மற்றும் 450000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

'ஸ்மார்ட் சிட்டி' எனப்படும் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட புதிய நகரத்தைக் கட்டும் திட்டம் ஒன்றில், 522 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறார், 'மைக்ரோசாப்ட்' அதிபர் பில் கேட்ஸ்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திலுள்ள பீனிக்ஸ் நகரை ஒட்டி, 24 ஆயிரத்து, 800 ஏக்கர் பரப்பளவில் உருவாகவிருக்கின்றது இந்த ஸ்மார்ட் சிட்டி. 

இதில், 3,800 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், அங்காடிகள் போன்றவை இருக்கும்.

470 ஏக்கரில் கல்வி நிலையங்கள் அமைக்கப்படும். மேலும் 80 ஆயிரம் வீடுகளும் இப்பகுதியில் கட்டித் தரப்படும். எல்லாவற்றையும் விட முக்கியமாக, 3,400 ஏக்கர் பரப்பளவு திறந்த வெளியாகவே விட்டு வைக்கப்படும்.

வழக்கம் போல ஸ்மார்ட் சிட்டியின் இலக்கணங்களான அதிவேக இணைய, தகவல் தொடர்பு வசதிகள், தானோட்டி பயணியர் மற்றும் சரக்கு வாகனங்களுக்கேற்ற சாலைகள், புதிய தொழில் நுட்பத்தின் அடிப்படையிலான உற்பத்தி முறைகள் போன்றவை இந்நகரில் இருக்கும்.

அஸ்திவார நிலையிலிருந்தே ஸ்மார்ட் சிட்டியாக திட்டமிடப்படுவதால், பில் கேட்சின் முதலீட்டு பிரிவான, 'கேஸ்கேட் இன்வெஸ்ட்மென்ட்ஸ்' இந்த நகரின் மீது கோடிகளை கொட்டியிருக்கிறது. 

மும்பையை சேர்ந்த ஹிந்தி நடிகர் வருண் தவான் காரில் பயணம் செய்யும் போது, தனது தலையை வெளியே நீட்டியபடி அருகில் ஆட்டோவில் பயணம் செய்த ஒரு ரசிகையுடன் ‘செல்பி’ எடுத்து உள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குறித்த செயலை யாரோ படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக மும்பை போலீஸ் நடிகர் வருண் தவானை டுவிட்டரில் எச்சரித்து உள்ளது

அந்த பதிவில்,

இதுபோன்ற ஆபத்தான சாகசத்தை வெள்ளித்திரையில் செய்து கொள்ளுங்கள். சாலையில் வேண்டாம். இது உங்களுக்கும், ரசிகர்களுக்கும், மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்து. உங்கள் வீடு தேடி பொலிஸ் வந்து கொண்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பை போலிசாரின் இந்த டுவிட்டர் எச்சரிக்கையை தொடர்ந்து, நடிகர் வருண் தவான் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

‘கார் இயக்கத்தில் இருக்கும் போது நான் ‘செல்பி’ எடுக்கவில்லை. சிக்னலில் நின்றபோது தான் எடுத்தேன்.

எனது ரசிகையின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தான் இப்படி நடந்து கொண்டேன். இனி இதுபோன்ற செயலுக்கு ஊக்கம் அளிக்க மாட்டேன். பாதுகாப்பை மனதில் வைத்து கொள்வேன்’ என தெரிவித்து உள்ளார்.

 

மூலம் - மாலைமலர்

ஸ்மார்ட்போன் மற்றும் கணினிகளில் தரவுகளை பரிமாற்றம் செய்ய உதவும் பிரபல செயலியான ஷேர்இட் உலகம் முழுவதும் 120 கோடி வாடிக்கையாளர்கள் பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மார்ச் 2014 இல் ஒரு கோடி பேர் தரவிறக்கம் செய்திருந்த ஷேர்இட் செயலி வெறும் இரண்டறை ஆண்டுகளில் 120 கோடி பயனர்களை பெற்றுள்ளதாக ஷேர்இட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் இயங்குதளத்தில் கிடைக்கும் ஷேர்இட் செயலி கொண்டு ஸ்மார்ட்போன்களிடையே தரவுகளை மிக வேகமாக பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

“உலகின் பிரபல செயலிகளில் ஒன்றாக ஷேர்இட் இருப்பதற்கு எங்களின் சர்வதேச பயனர்களுக்கு நன்றியும், பெருமையாக உணர்கிறோம். பெரும்பாலான சந்தைகளில் சமூக தரவுகளை ஒருங்கிணைந்து பரிமாற்றம் செய்யும் செயலிகளில் அனைத்து வயதினர் பிரிவுகளில் பிரபல செயலியாக இருக்கிறது. இசை, வீடியோ, புகைப்படம், செயலி உள்ளிட்டவற்றை ஸ்மார்ட்போன்களிடையே பரிமாற்றம் செய்ய ஷேர்இட் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது” என ஷேர்இட் இந்தியா நிர்வாக இயக்குனர் ஜேசன் வாங்க தெரிவித்துள்ளார்.

இந்த செயலியானது 39 நாடுகளில் 200க்கும் அதிகமான மொழிகளில் பயன்படுத்த முடியும்.

ஷேர்இட் மேற்கொண்ட ஆய்வினில் குறித்த இந்த செயலியை 16 முதல் 28 வயதுடைய வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

எல்.பி.டபிள்யூ. முறையீட்டின் போது அவுட் கொடுக்காத காரணத்தால் நடுவரிடம் கோபத்தை வெளிப்படுத்திய வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் டாக்கா டைனமைட்ஸ் அணி, கொமிலா விக்டோரியன்ஸ் அணியை எதிர்கொண்ட பொழுது,

டாக்கா டைனமைட்ஸ் அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் வீசிய பந்து, பேட்டிங் முனையில் இருந்த இம்ருல் காயேஸ் காலில் பட்டது.

ஷாகிப் அல் ஹாசன் எல்.பி.டபிள்யூ.வுக்கு முறையிட்டபோது, நடுவர் அவுட் கொடுக்காததால் ஆவேசமடைந்தார்.

ஷாகீப் அல் ஹசனின் செயலுக்காக அவருக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

புதிய தேசிய வருமான வரி சட்டத்தின் கீழ் புதிய கட்டமைப்பிற்கமைய வருமான வரி தொடர்பான தீர்மானங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சாதாரண மக்களுக்கு வரிச்சுமையை அதிகரிப்பதைவிட, அனைத்து மக்களுக்கும் சமமான முறையில் வரி அறவீட்டினை மேற்கொள்ள குறித்த இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக,

மாத்தறையில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட நிதி அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Published in உள்நாடு
Page 1 of 4

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top