Items filtered by date: Tuesday, 07 November 2017

நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் பெற்றோலிய தட்டுப்பாடு சூடான விவாதங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவியவந்துள்ளது. இதில் அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் அர்ஜுன ரணதுங்கவிடையே கடும் வாக்குவாதம் நிலவியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க விளக்கமளிக்க முற்படுகையில் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிக்கிட்டு பேசியதாலேயே இந்த பிரச்சினை வலுவடைந்துள்ளது.

அமைச்சர் தயாசிறி ஜயசேகர எரிபொருள் தட்டுப்பாட்டு விவகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இக்கட்டான நிலைக்கு தள்ளும் எனக்கூறி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மீதும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் போது குறிக்கிட்டுள்ள அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க , இது சிறிய பிரச்சினை அல்ல, எண்ணெய் களஞ்சியப்படுத்தி வைக்கபடாத காரணத்தினாலேயே இந்த பிரச்சினை உருவெடுத்துள்ளது. ஆனால் இது ஒரு மாபியா பிரச்சினையாகும். இதை இலகுவாக எடுக்க முடியாது. எனது காலத்திலும் இந்த மாபியா குழு செயற்பட்டது. தற்போது நாம் இந்த பிரச்சினையை தீர்ப்பது குறித்தே அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

இங்கு கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் தயாகமகே, அமைச்சர், தரமற்ற எண்ணெயை இந்த நாட்டுக்கு கொண்டுவராமைக்காக அர்ஜுன ரணதுங்க அவர்களுக்கு எமது நன்றிகள். கடந்த காலங்களிலும் தரமற்ற எண்ணெய் கொண்டுவரப்பட்டது. மூன்று முறைகள் எண்ணெயை பரிசோதித்தும் தரமற்ற எண்ணெயை நாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். சந்திம வீரக்கொடி அமைச்சரை பாத்தவாரே கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த அமைச்சர் சந்திம வீரக்கொடி, எனது காலத்தில் இப்படிப்பட்ட பிரச்சினை இருக்கவில்லை என கூறியுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அமைச்சர் தயாசிரியை நோக்கியவாரு இந்த பிரச்சினை தொடர்பாக உடனடியாக விசாரனையொன்றை மேற்கொள்ளவேண்டும் குறுஞ்செய்தியூடாக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வேலை நிறுத்தம் செய்யும் என ஒரு குறுச்செய்தி பரப்பப்பட்டது. இது பற்றி விசாரனையொன்றை மேற்கொள்ளவேண்டும். நாங்கள் எப்படியாவது இந்தப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இந்தப் பிரச்சினையில் தயாசிரி அமைச்சர் இலாபம் தேடுவதை நினைத்து நான் கவலைப்படுகின்றேன். அவருடைய அமைச்சை சரியாக செய்யமுடியவில்லையே என்று அமைச்சர் அர்ஜுன ரணதுங்க“ தெரிவித்துள்ளார்.

Published in உள்நாடு

சுதந்திர கட்சி சக்திமிக்கதாக மாத்திரமன்றி வெற்றியை மாத்திரமே மையப்படுத்திய கட்சியாக எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் களமிறங்குமென சுதந்திர கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு 7 சிறுபான்மை கட்சிகளும் உள்ளடங்ளாக பல கட்சிகளுடன் பேச்சுவார்தைகளை முன்னெடுத்துவதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே சு.க மற்றும் கூட்டமைப்பினதும் செயலாளர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில்,  “ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று ஒரு தரப்பும் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவதே சிறந்தது என மற்றுமொரு தரப்பும் இரு நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளதால் தற்போதுவரையில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. விரைவில் இது குறித்த இறுதி தீர்மானத்தை சுதந்திர கட்சி அறிவிக்கும்.

அத்துடன் தற்போது சுதந்திர கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட 20 கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில் 4 தமிழ் கட்சிகளும் 3 முஸ்லீம் கட்சிகளும் உள்ளடங்குகின்றனர். அவர்கள் எம்முடள் இணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எதிர்ப்பே எங்களுக்கும் உள்ளது.

மேலும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அக்கட்சியுடன் அரசாங்கத்தில் இணைந்து செயற்பாட்டாலும் அவர்களுடன் தேர்தலில் போட்டியிட நாங்கள் விரும்பவில்லை. அதனால் உள்ளூராட்சி தேர்தல் மாத்திரமன்றி எந்தவொரு தேர்தலிலும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட நாங்கள் தயாரில்லை.

சுதந்திர கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவிக்கையில், “கடந்த காலங்கயில் சுதந்திர கட்சி கடந்த காலங்களில் குட்டிதேர்தலுக்கான பலமான அடித்தளங்களை வலுப்படுத்திகொண்டிருந்தது. எனவே எதிர்வரும் தேர்தலின் போது சக்திமிக்க கட்சியாக மாத்திரமன்றி ஐக்கிய வெற்றியையே இலக்காக கொண்ட கட்சியாக போட்டியுடும்“ என்றார்.

Published in உள்நாடு

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய யாழ் மாவட்டத்தில் 125 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

“யாழ் மாவட்டத்தில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 125 பேரில், சுமார் 70 பேர் வள்வெட்டித்துறை- புளிபண்டி பொது நோக்கு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலையினை தொடர்ந்து இரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

75 மில்லிமீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பத்தில் இரத்தனபுரி மாவட்டத்தின், அயகம, கரியெல்ல மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட பிரதேச செயல பிரிவுகளுக்குற்பட்ட பகுதிகளுக்கே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண் சரிவு முன் எச்சரிக்கைகளான, நிலம் தாழிறங்கள், நிலத்தில் வெடிப்புக்கள் ஏற்படுதல், தீடிரென நீரூற்றுக்கள் உருவாகுதல், நீருற்றுக்கள் இல்லாது பேகுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் குறித்த இடங்களில் இருந்து மக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் தேசிய கட்டட ஆய்வு நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்து காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு. கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களில் நாளை காலை முதலே மழை பெய்யும் சாத்திய கூறுகள் இருப்பதாகவும் அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மாகாணம், மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம் தென் மாகாணத்திலும் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு 100 மில்லி மீற்றருக்கு அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் எனவும்,
மேலும் கடற்பிராந்தியங்களில் 60 கிலோ மீற்றரை விட அதிக வேகத்தில் காற்று வீசலாம் என எதிர்பார்க்கப்படுவதாலும் கடற்தொழிலாளர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும், இடி மின்னல் தாக்கங்கள் தொடர்பிலும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும். எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Published in உள்நாடு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20,000 மெற்றிக் தொன் நாட்டரிசி சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

தற்சமயம் சதொஸ விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் என்பனவற்றின் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட 136 கோடி ரூபா பெறுமதியான அரிசி சந்தைக்கு விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஒரு கிலோ நாட்டரிசி 74 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 78 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

டிசம்பர் பண்டிகைக் காலத்தை கருத்திற்கொண்டு 50,000 மெற்றிக் தொன் நாட்டரிசியும், 30,000 மெற்றிக் தொன் சம்பா அரிசியும் இறக்குமதி செய்யப்படும் .

இதனால், சந்தையில் எந்த விதத்திலும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட மாட்டாது என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

Published in வணிகம்

அமுலில் உள்ள நிதிக் கொள்கை உள்நாட்டு வெளிநாட்டு பொருளாதார சூழலுக்கு பொருத்தமானதென இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய நிதிக் கொள்கையிலும், வட்டி வீதத்திலும் மாற்றங்களை மேற்கொள்வதில்லை எனவும் சபை தீர்மானித்துள்ளது.

“இதன் இலக்குகள் வட்டி வீதத்தை தனி அலகினால் பேணுதல், இதன் மூலம் நிலைபேறான அபிவிருத்திப் பாதைக்குரிய வசதிகளை ஏற்படுத்துதல் என்பனவாகும்.

இதனையடுத்து பூகோள பொருளாதார செயற்பாடுகள் தொடர்ந்தும் வலுவடையும் எனவும் இலங்கையின் பொருளாதாரம் இரண்டாவது காலாண்டில் சாதகமான நிலைக்கு மாறும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கான காரணம் கைத்தொழில் சேவைகள் துறைகளின் வளர்ச்சியும், விவசாயத்துறை வழமைக்கு திரும்புகின்றமையேயாகும் என்றும்“ என மத்திய வங்கியின் நாணயச் சபை தெரிவித்துள்ளது.

Published in வணிகம்

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முன்மொழிவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் ஆலோசனைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஊடகத்துறை மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கையளித்துள்ளது.

2018 வரவு செலவுத் திட்டம் நாளை மறுதினம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், 2018 வரவு செலவுத் திட்டத்திற்காக சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள ஆலோசனைகள் அடங்கிய அறிக்கை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவினால் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவை குறைத்தல், நாட்டின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் கல்வி, சுகாதார சேவைகள் குறித்த ஆலோசனைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்துள்ளது.

கடந்த வரவு செலவுத்திட்டத்தின் போதும் சுதந்திரக் கட்சியினால் யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலான யோசனைகள் ஏற்கப்பட்டதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

Published in உள்நாடு

எரிபொருட்களுடனான இந்திய கப்பல் ஒன்று இலங்கைக்கு வந்துகொண்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எரிபொருள் நெருக்கடி நிலை தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

எரிபொருளை களஞ்சியப்படுத்த எரிபொருள் தாங்கிகளை புனரமைத்து எரிபொருள் தாங்கி மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

இது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் எரிபொருள் தாங்கிய இந்திய கப்பல் 9ஆம் திகதி அல்லது 10ஆம் திகதி அளவில் இலங்கையை வந்தடையும் என்றும் தெரிவித்தார்.

Published in உள்நாடு

நாடளாவிய ரீதியில் பெற்றோலுக்கான பெரும் தட்டுபபாடு நிலவிவரும் நிலையில் களுத்துரை எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இருந்த மக்களை ஒதுக்கிவிட்டு பொலிஸ் பாதுகாப்புடன் வந்த வாகனமொன்று எரிபொருள் நிரப்பட்டதால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு நிலைமையின் காரணமாக களுத்துறை மாவட்டத்தில அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் அதிகாலை வேளையிலேயே எரிபொருள் கொள்வனவிற்காக கூட்டம் அலைமோதியது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் திடீரென பொலிஸ் பாதுகாப்புடன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னாள் வந்து அங்கு கூடியிருந்த சகலரையும் தள்ளிவிட்டு குறித்த வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பட்டுள்ளது.

அதன்போது அங்கு எரிபொருளை பெற்றுகொள்வதற்காக அதிகாலையிலிருந்து காத்திருந்த நபர் ஒருர் கோபமுற்று பொலிஸ்மா அதிபரின் பாதுகாப்பு தரப்புக்களுடனும் எரிபொருள் விநியோக நிலையத்தின் ஊழியரகளுடனும் வாக்குவாத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Published in உள்நாடு

ரயில்வே எஞ்சின் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் நாடுதழுவிய ரீதியாலான வேலை நிறுத்த போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

சம்பளப் பிரச்சினையை மையப்படுத்தியே இந்த வேலை நிறுத்த போரட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே எஞ்சின் இயக்குனர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

ரயில் கட்டுப்பாட்டாளர்கள், ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில்வே எஞ்சின் உள்ளிட்ட சகல ரயில்வே ஊழியர்கள் சங்கங்களும் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் இணைந்துக்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கடந்த நாட்களில் வேலைநிறுத்தங்களை முன்னெடுத்து அழுத்தம் கொடுத்திருந்த போதும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டாத நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாட்டின் மத்தியில் ரயில்வே திணைக்களத்தின் வேலை நிறுத்தம் பொது போக்குவரத்து சேவைகளில் பெறும் பாதிப்பை ஏற்பபடுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Published in உள்நாடு

ரக்பி விளையாட்டைப் பார்க்கச் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுடன் முக்கிய அரசியல் விடயங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டாராம்.

"எனக்குத் தெரியும் மலிக். உங்கள் கட்சியில் பலரும் என்னோடு பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர். புதிய அரசமைப்பை ரணிலைத் தவிர வேறு யாரும் உங்கள் கட்சியில் விரும்பவில்லை என்பதும் எனக்குத் தெரியும். ரணில் கொடுத்த கயிற்றை உங்களது கட்சியும் விழுங்கிவிட்டது.

தமிழ்க் கூட்டமைப்பும் விழுங்கிவிட்டது என்று சத்தமாக சிரித்தபடி சொன்னாராம் மஹிந்த.vஇதற்குப் பதில் எதனையும் கூறாமல் வேறு விடயங்கள் பற்றி இப்போது பேசுவோமே என்று கதையை வேறு போக்கிற்கு மாற்றினாராம் மலிக்.

Page 1 of 3

Calendar

« November 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      
Go to top