Items filtered by date: Saturday, 02 December 2017

கடும் காற்றுடன்கூடிய அடைமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஒருவர்  காணாமல் போயுள்ளதுடன், 61 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 31,165 குடும்பங்களைச் சேர்ந்த 106,076  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த 1,421 குடுங்பங்களைச் சேர்ந்த 5,435 பேர் 66 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தத்தால் 694 வீடுகள் முழுமையாகவும் 25,117  வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

Published in உள்நாடு

சம்சுங் நிறுவனம் கே.டி.டி.ஐ உடன் இணைந்து, ஓடும் அதிவேக ரயிலில் 5ஜி இண்டர்நெட் ஸ்பீட் வசதியினை அளிக்க முயற்சித்து வருகிறது. இதற்காக ஜப்பானும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கு முன்னர் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ரயிலில், நொடிக்கு 1.7 ஜி.பி இணைய வேகத்தை பெறும் முயற்சி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

இந்த சோதனைகள் கடந்த அக்டோபர் 17 முதல் 19 வரை, டோக்கியோ அருகில் உள்ள சைதமா நகரில் நடத்தப்பட்டுள்ளன. இதில் சம்சுங் நிறுவனத்தின் 5ஜி சேவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சேவையில் 5ஜி ரவுட்டர் (CPE Route), ரேடியோ சேவை (5G Radio), வேர்ச்சுவல் ரேன் (Virtual RAN) உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

சோதனை ஓட்டத்தின் போது 8k வீடியோ டவுன்லோட் செய்து, 4k வீடியோ அப்லோட் செய்யப்பட்டது. இது 5ஜி செயல்பாட்டில் மிகமுக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, மூன்று வித கிரிக்கெட்டிலும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வருகிறார். டில்லி நடைபெறும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட்  போட்டியில் லக்மல் பந்தில் நான்கு ஓட்டத்தினை பெற்ற கோஹ்லி, டெஸ்ட் அரங்கில் 5000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்த இலக்கை எட்டிய 11வது இந்திய வீரர் விராட் கோஹ்லி ஆவார். இதுவரை 63 போட்டியில் 5013 ஓட்டங்களை எடுத்துள்ளார். குறைந்த இன்னிங்சில் இந்த இலக்கை அடைந்த நான்காவது இந்திய வீரர் ஆவார்.

இந்திய அணி தலைவர் கோஹ்லி நேற்று 43 ஓட்டங்கள் எடுத்த போது, டெஸ்ட் (5014), ஒருநாள் (9030), ‘டுவென்டிT20’ (1956) என, மூன்று விதமான  கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து, 16,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். குறைந்த இன்னிங்சில் இந்த இலக்கை அடைந்த முதல் வீரர் கோஹ்லி ஆவார் (350 இன்னிங்ஸ்). அடுத்தடுத்த இடங்களில் தென்னாபிரிக்காவின் ஆம்லா (363), மேற்கிந்திய தீவுகளின் பிரையன் லாரா (374) போன்ற வீரர்கள் உள்ளனர்.

 

“முதற் கனவே“ இணையத்தொடரின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

எமது கலைஞர்கள, எமது தொழில்நுட்பவியலாளர்கள், எமது தயாரிப்பு என்ற பெருமையுடன் 12 பாகங்களைக் கொண்ட குறுந்தொடராக இணையத்தில் விரைவில் வெளியாகவிருக்கின்றது.
“முதற் கனவே“ தமிழ்க் கலாசாரத்துடன் முட்டிமோதும் காதல், உறவுகளுக்கு இடையிலான போராட்டம், தனிமனித முடிவுகள், வாழ்க்கைப் போராட்டம் என உணர்வுகளின் வெளிப்பாடாகவே வெளிவரவிருக்கின்றது “முதற் கனவே“

இந்த தொட எழுதி, இயக்கியிருக்கின்றார் ஊவா சமூக வானொலி முன்னாள் அறிவிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், இலங்கை இதழியல் கல்லூரிவிரிவுரையாளர், வானொலி செய்தி ஆசிரியர், பல சர்வதேச அரசார்பற்ற நிறுவனங்களில் ஊடகத்துறைசார் தொழிற்துறைகளில் கடமையாற்றியவர், வானொலி நாடக கலைஞர் என பண்முகத்திறமைக் கொண்ட மணிவாணன்.

இந்த தொடரில் பல தொலைக்காட்சி நாடகங்களிலும், சிங்கள திரைப்படங்களிலும் நடித்த அனுபவமுள்ள ஜெராட் ஜெயஜோதி , சாந்தா, மிருனன், ரெக்ஸ்சன் விக்கி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

 

ரஜினிகாந்த் ஒரு சமயத்தில் ஒரு படத்தில் நடிப்பதை மட்டுமே பல வருட வழக்கமாக வைத்திருக்கின்ரார். அந்த வழக்கத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாற்றிக் கொண்டு '2.0' படத்தில் நடிக்கும் நேரத்தில் 'காலா' படத்திலும் நடிக்க ஆரம்பித்தார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து படப்பிடிப்புக்கள் நிறைவடைந்த நிலையில்.

 

kaala-1.jpg

 

'2.0' திரைப்படம் ஜனவரி மாதம் 25ஆம் திகதியன்று வெளிவரும் என்ற அறிவிப்பையடுத்து, அக்டோபர் மாதம் இசை வெளியீடு விழாவை நடத்திய படக் குழுவினர், நவம்பர் மாதம் டீசரை வெளியிடாததைப் பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

தமிழ்த் திரையுலகில் ஏப்ரல் மாதம் படம் வெளிவரும் என்றும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் படத்தை வெளியிடலாம் என்கிறார்கள். அதற்குள் சி.ஜி, வேலைகள் முடிய வேண்டும். ஏப்ரலில் '2.0' படம் வந்துவிட்டால், பா.ரஞ்சித் இயக்கியுள்ள 'காலா' திரைப்படத்தை ஒகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

“காலநிலை மாற்றம் மற்றும் மூல வள பாதுகாப்பு, தெற்காசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு துறைகளுக்கான சவால்கள்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த சர்வதேச செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டு நாடு எதிர்நோக்கியுள்ள தற்போதைய காலநிலை மாற்றத்திற்கு ஏற்றாற்போல் இச்செயலமர்வின் தொனிப்பொருள் அமையப்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், “தெற்காசிய நாடுகள் முகங்கொடுக்கும் சவால்கள் மற்றும் சிரமங்கள் என்பன மிக கடுமையானதாகும். அத்துடன் காலநிலை மாற்றம் மோதலுக்கு நேரடியான காரணியாகவும் அமைகின்றது. எவ்வாறாயினும், நிலம் மற்றும் வாழ்வாதார இழப்பு போன்ற விளைவுகளின் தாக்கம் உலக ஸ்திரமற்ற தன்மையையும் மோதல்களின் அபாயத்தை அதிகரிக்கும் திறனையும் கொண்டுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில், காலநிலை மாற்றமானது, அச்சுறுத்தல் பெருகுவதற்கு முக்கிய காரணியாக கூறப்படுகிறது. இப்பகுதியில் உள்ள செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மை என்பன உணவு மற்றும் நீர் ஆதாரங்களுடன் இணைந்துள்ளது. காலநிலை மாற்றம் வளங்களை ஒரு குறிப்பிடத்தக்க அழுத்தத்தை வழங்குகிறது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு துறையின் வகிபாகத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதுடன் தெற்காசியாவில் தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்பிற்கான காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்வது இச்செயலமர்வின் முக்கிய நோக்கமாகும். மேலும், சார்க் பிராந்தியத்திற்குள் அறிவினை பரிமாற்றி கொள்வதற்கு பங்களிக்களிக்கும் வகையில் இச்செயலமர்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, புதிய கூட்டணியொன்றை உருவாக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒன்றிணைந்த எதிரணியிலுள்ள 20ற்கும் அதிகமான அரசியல் கட்சிகளுடன் இணைந்து இந்த புதிய முன்னணி உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தாமரை மொட்டு சின்னத்தில் “ஒன்றிணைந்த பொதுஜன முன்னணி” என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணியில் போட்டியிடவுள்ளதாக அறியமுடிகின்றது.

மாகாண சபை தேர்தலில் நாடு முழுவதும் சகல மாவட்டங்களிலும் “ஒன்றிணைந்த பொதுஜன முன்னணி” போட்டியிட தீர்மானித்துள்ளதுடன் அதற்காக அரசியல் கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய முன்னணிக்கு ஒத்துழைப்பு வழங்கவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் சிலரும் ஒன்றிணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Published in உள்நாடு

அசாதாரண காலநிலை காரணமாக அனர்த்தங்களை எதிர்நோக்கியுள்ள பொதுமக்களுக்கு 10,000 ரூபா நட்டஈடு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நட்டஈட்டுத் தொகைகளை பிரதேச செயலாளர் காரியாலயங்களில் சென்று பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அந்த அமைச்சு அறிவித்துள்ளது. இதன்பொருட்டு, அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலாளர் காரியாலயங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமையும் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்த நிலைமைகள் தொடர்பாக தகவல்கள் கிடைத்திருப்பின் அது தொடர்பாக பிரதேச செயலாளருக்கோ அல்லது உள்நாட்டலுவல்கள் அமைச்சின் 1902 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அழைப்பை ஏற்படுத்தி தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

இலங்கை - இந்திய கடற்படையினருக்கிடையில், கடல் எல்லைப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்வகையில் அடுத்த மாதம் பேச்சுக்கள் நடைபெறும் என்று இந்திய கிழக்கு பிராந்திய கடற்படையின் ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இந்திய கடற்படை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரி கடல் பகுதியை உள்ளடக்கிய கிழக்கு பிராந்திய கடற்படையின் ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர் சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான சுமித்ரா போர் கப்பலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோதே இதுதொடர்பில் கருத்து வெளியிட்டள்ளார்.

மேலும், ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக, புதுச்சேரி மீனவர்களுக்கு ஏதேனும் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டால் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கிழக்கு பிராந்திய கடற்படை செய்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு
Page 1 of 3

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top