Items filtered by date: Sunday, 03 December 2017

நாட்டில் நிலவிய அசாதரனமான காலநிலையை அடுத்து தொடர்ந்தும் ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை நீடிக்க தேசிய கட்டட ஆய்வு மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி இரத்தினபுரி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, பதுளை ஆகிய மாவட்டங்களுக்கே, இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று காலை 9.30 மணி முதல் நாளை காலை 9.30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Published in உள்நாடு
பொல்பிதிகம பிரதேசத்தில்  யானை தந்தங்களுக்கு தங்கம் பூசி தயாரிக்கட்ட பெண்டன்களை  க‍விநியோகித்த கிராம சேவகர்கள் இருவர் நிகவெரடிய குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். 
 
மகுல்பொத,தொரவேறுவ உள்ளிட்ட பிரதேசங்களின் கிராம சேவகர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இவர்கள் இருவரும் 43,32 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
குறித்த இருவரையும் மஹாவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள நிகவெரடிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 
Published in உள்நாடு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நேற்று டெல்லி பெரோ ஷா கொட்லா மைதானத்தில் ஆரம்பமாகிறது.

நேற்று ஆரம்பமான போட்டியில் தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 536 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதில் 243 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் விராட் கோலி சன்டகன் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யு முறைியல் ஆட்டம் இழந்தார்.

டெல்லியில் புகை மாசு காரணமாக குறித்த சூழலில் விளையாட முடியாது என சந்திமால் நடுவர்களிடம் முறையிட்டதையடுத்து ஆட்டம் 16 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு நடுவர்களால் ஆட்டம் தொடரப்படவேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.

நிதானமாக துடுப்பெடுத்தாடி வந்த விராட் கோலி இவ்வாறு மேற்கொள்ளப்பட் காலதாமதம் சிக்கலினால் குழப்பமான சூழ்நிலையில் கவனம் செழுத்த முடியாது ஆட்டமிழந்தார். இதனால் முச்சதம் பெறக்கூடிய வாய்ப்பு இருந்தும் அதனை தவறவிட்டார் விராட் கோலி.

அதன் பின் மீண்டும் ஆட்டத்தில் பந்துவீச காலதாமதம் ஏற்பட ஆட்டத்தை இடைநிறுத்திக்கொள்வோம் என மைதானத்தில் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த வீரர்களுக்கு அரையிலிருந்து ஆவேசமாக தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நேற்று டெல்லி பெரோ ஷா கொட்லா மைதானத்தில் ஆரம்பமாகிறது.

நேற்று ஆரம்பமான போட்டியில் தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 536 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதில் முரளி விஜயின் சதமும், ரோஹித் சர்மாவின் அரைச்சதமும் மற்றும் விராத் கோலியின் 6வது இரட்டைச்சதமும்  பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கததாகும்.

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

50 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள சந்தை ஒன்றில் நேற்று நுழைந்த இரண்டு பெண் தற்கொலைத் தீவிரவாதிகள் தங்களது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து இச்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தின் மீதான தாக்குதலுடன் தொடர்புடைய தெஹ்ரிக்-இ-தலிபான் என்ற தீவிரவாத அமைப்பினைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் கீழ் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த சிலர் பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

குறித்த இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்து 35 பெர் காயமடைந்திருந்தினர்.

பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள பாகிஸ்தான் உளவுத்துறை அலுவலகத்தை தாக்குவதற்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கூட்டணி தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுடன் தமிழ் முற்போக்குக் கூட்டணி இன்று விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணி போட்டியிடவுள்ள உள்ளூராட்சி சபைகள் தொடர்பாக இதுவரையில் நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைகள் தொடர்பிலேயே ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஆசன பங்கீட்டு பேச்சுகளில் ஏறக்குறைய முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. ஏனைய சபைகளைப் பொறுத்தவரையில் பேச்சுகள் முற்றுப்பெறவில்லை.

உள்ளூராட்சி சபைகளை, நமது வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்டையில் மக்கள் பெரும்பான்மையாக வாழும் சபைகள், குறைவாக வாழும் சபைகள், கணிசமாக வாழும் சபைகளென தரம் பிரித்துள்ளோம். எமது மக்கள் பெரும்பான்மையாக வாழும் சபைகள் மற்றும் குறைவாக வாழும் சபைகளைப் பொறுத்தவரையில் ஐ.தே.கவுடன் கூட்டிணைந்து ஐக்கிய தேசிய முன்னணி என்ற அடிப்படையில் போட்டியிடுவதில் சிக்கல் கிடையாது.

ஆனால், நமது வாக்காளர்கள் கணிசமாக வாழும் சபைகளைப் பொறுத்தவரையில் ஐக்கிய தேசிய முன்னணியாக போட்டியிடுவதில் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து நிலவுகிறது. ஏனென்றால், புதிய கலப்புத் தேர்தல் முறையில் வட்டாரங்களில் மட்டுமல்லாமல், பட்டியலிலும் உறுப்பினர்களைப் பெறவேண்டியுள்ளது. ஆகவே, நமது வாக்காளர்கள் கணிசமாக வாழும் சபைகளில் அனைத்து வட்டாரங்களிலும் நாம் போட்டியிடுவதன் மூலமே உரிய இலக்கை அடைய முடியும்.

இதனால், சில சபைகளில் சேர்ந்து ஐக்கிய தேசிய முன்னணியாகவும், சில சபைகளில் தனித்து முற்போக்குக் கூட்டணியாகவும் போட்டியிட வேண்டும் என்பதுவே தமிழ் முற்போக்குக் கூட்டணியில் தற்போது கலந்தாலோசிக்கப்படுகிறது.

எவ்வாராயினும் இன்று ஞாயிற்று கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க குழுவுடன் பேச்சுகள் நடத்திய பின்னர் ஐந்தாம் திகதி கொழும்பில் கூடும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் குழுவில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Published in உள்நாடு

2020ஆம் ஆண்டு ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படப்போவது யார்? என்று தற்போதும் நாட்டில் பிரபல்யமாக உள்ள ஐந்து பேரின் பெயர்களை முன்னிலைப்படுத்திய கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடகப்பிரிவு நடத்திய கருத்துக்கணிப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுவார் என்று அதிகமானவர்கள் கூறியுள்ளனர்.

18 தொடக்கம் 35 வயதுவரையான 505 பேரிடம் நடத்திய இந்த விசேட கருத்துக்கணிப்பில் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாஸ, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க உள்ளிட்ட ஐவரின் பெயர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் 39.18வீதமானவர்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், 28.64வீதமானவர்கள் சஜித் பிரேமதாஸவுக்கும், 9.18வீதமானவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், 8.64வீதமானவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வுக்கும் வாக்களித்துள்ளனர்.

நாட்டில் செப்டெம்பர் முதல் நவம்பர் மாதம்வரையானக் காலப்பகுதியை இடம்பெற்ற அரசியல் நிலைமையைகளை அடிப்படையாக கொண்டே இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published in உள்நாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை இணைத்துக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி உள்ளூராட்சிசபைத் தேர்தலில்களமிறங்கவுள்ளமையானது, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு முஸ்லிம்களுக்கு இழைக்கும் பாரிய அநீதியாகும் என்று தொழிற்துறை அமைச்சரான தயாகமகே தெரிவித்தார்

அத்துடன், உள்ளூராட்சிசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி கிழக்கு மாகாணத்தில் தனித்து களமிறங்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் அவ்வாறெனில் மட்டுமே தமது கட்சி பலமடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2018 பெப்ரவரி முதல்வாரத்தில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை அரசியல்கட்சிகள் தற்போது ஆரம்பித்துள்ளன.

கட்டுப்பணம் செலுத்துதல், வேட்பாளர்கள் தெரிவு, கூட்டணியமைப்பது மற்றும் அமைத்த கூட்டணிக்குள் தொகுதிகளை பிரித்துக்கொள்வது என அனைத்து செயற்பாடுகளும் தற்போது மும்முரமாகவே நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தின் கீழ் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸக்கு கிழக்கு மாகாண தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளமை தொடர்பில் வினவியபோதே அமைச்சர் தயாகமகே மேற்கண்டவாறு கூறினார்.

அதாவது, ஐக்கிய தேசிய முன்னணியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைவாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எமது கூட்டணியில் இணைத்துக்கொள்ளப்பட்டன.

எனினும், இக்கட்சிகள் இல்லாமல் தனித்து போட்டியிட வேண்டும் என்பது தான் எனது தனிப்பட்ட நிலைப்பாடு.

இக்கட்சிகள் இல்லாவிட்டால் கிழக்கில் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்குமா என உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், ஐக்கிய தேசியக் கட்சி பலமடையும் என்பதையும் அடுத்தடுத்த தேர்தல்களில் தனித்து களமிறங்கக்கூடிய ஒரு சக்தி எமது கட்சிக்கு கிடைக்கும் என்பதையும் கூறிக்கொள்ள முடியும். மேலும், இந்த முஸ்லிம் கட்சிகளை இணைத்துக்கொண்டு களமிறங்குவதானது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு முஸ்லிம் மக்களுக்கு இழைக்கும் ஒரு அநீதியாகவே எம்மால் கருதப்படுகிறது. ஏனெனில், கிழக்கைப் பொறுத்தவரை ஜனாதிபதித் தேர்தலின்போதெல்லாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு பாரிய எதிர்ப்பே வெளியிடப்பட்டது. எவ்வாறாயினும், இத்தேர்தலில் எமது கட்சியானது அதிக ஆசனங்களை வெற்றிக்கொள்ளும் என்பது மட்டும் உறுதியாகும் என்றுத் தெரிவித்தார்.

Published in உள்நாடு

பெப்ரவரி முதல் வாரத்தில் அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் தேர்தலை நடத்தும் வேட்புமனு கோரலுக்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணையகம் நாளை வெளியிடவுள்ளது.

உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான வேட்புமனு கோரலுக்கான தினங்கள் கடந்த 27ஆம் திகதி அறிவிக்கப்படவிருந்தன. என்றாலும், கடந்த பெப்ரவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல் எல்லை நிர்ணயம் குறித்து வெளியிடப்பட்டவர்த்தமானியின் குறைப்பாடுகளைச் சுட்டிக்காட்டி மேல்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் காரணமாக 93 உள்ளூராட்சி

சபைகளுக்கான வேட்புமனுக்களுக்கான கோரல் மாத்திரமே அறிவிக்கப்பட்டிருந்தது.

மேல்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சுதந்திரக் கட்சியின் மத்தியஸ்தத்தின் கீழ் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் அனைத்து உள்ளூராட்சிமன்றங்களுக்குமான தேர்தலை நடத்தக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

அதன் அடிப்படையில் நாளை அனைத்து உள்ளூராட்சிமன்றங்களுக்குமான வேட்புமனுகோரலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையகம் வெளியிடவுள்ளது. ஏற்கனவே, அறிவிக்கப்பட்டிருந்த தினங்களுக்கான வேட்பு மனுகோரல் தினமும் இன்று அறிவிக்கப்படும் தினம்வரை நீடிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், அடுத்தாண்டு பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்திருந்தார்.

அரசியலமைப்பு பிரகாரம் சனிக்கிழமையொன்றிலேயே தேர்தலொன்றை நடத்த முடியும். அதன்படி பெப்ரவரி முதல் வாரத்தில் 3ஆம் திகதியே சனிக்கிழமையாக காணப்படுகிறது. சுதந்திர தினத்திற்கு முதல் தினம் என்பதால் அடுத்துவரும் சனிக்
கிழமையே (10.02.2018) தேர்தல் நடத்தப்படும் வாய்ப்புள்ளது.

Published in உள்நாடு
Page 1 of 2

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top