Items filtered by date: Wednesday, 06 December 2017

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் இறுதிப் போட்டி டெல்லியில் சற்று முன்னர் நிறைவுபெற்றது.

குறித்த போட்டியில் முரளி விஜயின் சதத்துடனும் விராட் கோலியின் இரட்டைச் சதத்துடனும் தனது முதல் இனிங்ஸை 536 ஓட்டங்களுடன் நிறைவு செங்தது இந்திய அணி. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி மெத்தியுஸ் மற்றும் சந்திமாலின்சதங்களுடன் 373 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இரண்டாவது இனிங்ஸில் 246 ஓட்டங்களை பெற்ற நிலையில் டிக்லெயர் செய்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 ஆவது நாள் நிறைவில் தனஞ்சயவினுடைய சதத்துடன் 299 ஓட்டங்களைப்பெற்று,

போட்டியை வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவுசெய்துள்ளது.

ஆர்ஜென்டினா காற்பந்து அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியின் உருவச் சிலை மீண்டும் உடைக்கப்பட்டுள்ளது.

பியுனஸ் ஏர்சில் நிறுவப்பட்டிருந்த குறித்த சிலை, இனந்தெரியாத சிலரினால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கால்களை உடைத்து கீழே தள்ளி விடப்பட்ட நிலையில் காணப்படும் இச் செயலுக்கு  பலரும் தங்களது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

 

dqiidkmxkaa9jxg.jpg

 

உலகின் சிறந்த வீரருக்கான பிபா விருதை ஐந்து முறை வென்றுள்ள 30 வயதான மெஸ்ஸியின் குறித்த சிலை, கடந்த ஜனவரி மாதம் அரை பகுதி உடைக்கப்பட்டு. பின்னர் திருத்தப்பட்டது,

அதே இடத்தில் நிறுவப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக உடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

அதிகாரப் பகிர்வின் மூலம் தமிழ் மக்களது பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது என காலியில் இடம்பெற்ற எலிய அமைப்பின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
வேறு இராச்சியமொன்றை உருவாக்கவே அதிகாரப் பகிர்வைப் பற்றி பேசுகின்றனர். தங்களுடன் சேர்த்து நூற்றுக்கு 68 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் ஏனைய பிரதேசங்களில் வசிக்கின்றனர்.
 
இவ்வாறான நிலையில் அந்த பிரதேசத்துக்கு மட்டும் அதிகாரத்தைப் பகிர்ந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வைக் காண்பது என கோட்டாபய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
 
எனவேஇ அவர்களது இரகசிய எண்ணம் என்னவென்பது இதனூடாக தெளிவாகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
 
அதேநேரம் எலிய அமைப்பை இனவாத அமைப்பாக காண்பிக்க சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால் இந்த அமைப்பு இனவாதமானதல்ல.
 
சிங்களஇ தமிழ்இ முஸ்லிம் என்ற அனைத்து இன மக்களும் கௌரவமாக வாழக்கூடிய நாட்டை உருவாக்கவே தமது போராட்டம் இடம்பெறுவதாக கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
 
நாட்டைப் பிரிப்பதற்கு எதிராகவே இந்தப் போராட்டம் என்றும் கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Published in உள்நாடு

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல், ஸ்ரீலங்கா சுதத்திர கட்சி போட்டியிடும் சின்னம், மாவட்ட மட்டத்தில் இணையும் கூட்டணி கட்சிகளுக்கு அமைய மாற்றம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக

ஸ்ரீலங்கா சுதத்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

Published in உள்நாடு

பேலியகொட துட்டுகெமுனு மாவத்தையில் வைத்து 25 கிராம் ஹெரோயினுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல்மாகாண மோசடி ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய நேற்று குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஹெரோயின் மூலம் வருமானமானம் எனக் கருதப்படும் சுமார் 55 ஆயிரம் ரூபா பணம் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Published in உள்நாடு

தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக சீ.டீ. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சீ.டீ. விக்ரமரத்ன நிர்வாக நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் அதேவேளை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Published in உள்நாடு

“சட்டம் என்பது அடித்தளம் இல்லாத பள்ளம்’ இது ஜான் அர்புத்னாட் என்ற ஆங்கில கணிதமேதையின் கூற்று, அன்று அவர்சொன்னதை இன்றும் நிரூபிக்கும் வகையில் பல சம்பவங்கள் அரங்கேறிச்செல்கின்றன. குறிப்பாக மலைய பெருந்தோட்டமக்களுக்கு தோட்ட நிர்வாங்களில் இழைக்கப்படும் கொடுமைகள், அதற்கு தீர்வு காண போராடும் தொழிலாளிக்கு உரியநியாயம் கிடைக்கிறதா என்றால், அதற்கு சாமான்யனின் பதில் இல்லை என்பதே.

“சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு; அது ஏழைக்கு எட்டாத விளக்கு” என்றார் தமிழகத்தின் முன்னாள்முதல்வர் அறிஞர் அண்ணாதுரை. உண்மையும் அதுதான், கிடைக்கும் சம்பளத்தில், அதனை சம்பளம் என்றுகூட கூற முடியாது, கிடைக்கும் கூலியில் தனது குடும்பத்துக்கு வயிராற உணவு போடுவதே மகா சாதனையாக இருக்கும் மலையகத்தில், தோட்டநிர்வாகத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதற்கு எதிராக, சட்டத்தின் கோட்டையில் வழக்கறிஞர் வழி நுழைவதுசாத்தியமானதா? என்பது நீங்களே யோசித்து பாருங்கள்.

“சட்டம் என்பது சிறிய பூச்சிகளை மட்டுமே பிடித்துக்கொண்டு பெரிய குளவி போன்ற பூச்சிகளை வெளியேறவிடும் ஒருசிலந்திவலை போன்றது” என்கிறார் ஆங்கிலேய அறிஞரான ஜெனாதன் சுவிப்ட். இந்த சிலந்திவலையை பயன்படுத்தியேபெருந்தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு எதிரான அநீதிகளில் இருந்து தப்பிச்செல்கின்றன.

“தனிமனிதர்களின் ஆட்சியைவிட, சட்டத்தின் ஆட்சி மேலானது” என்று அரசில் அறிஞர் அரிஸ்டோட்டில் கி.மு 350 இல்சொல்லிவைத்தார். ஆனால், பாமரனுக்கு சட்டத்தின் ஆட்சி எவ்வளவு தூரம் பலனளிக்கின்றது என்ற கேள்வி இன்றையகாலத்தின் தேவை.

“மலையகத் தமிழர் அல்லது பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் என்போர் இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சியின்போது 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தேயிலை, இறப்பர், கோப்பி முதலிய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகளுக்காகதமிழ்நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்களை குறிக்கும்” என்பதை இந்த இடத்தில் நினைவுப்படுத்திக்கொள்ளலாம்.

பெருந்தோட்ட மக்களை ஆங்கிலேயர்கள் அடிமை போன்றநிலையில் வைத்திருந்ததனாலும், அதன்பின்னரும் தற்போதுவரைதொடரும் ஒடுக்குமுறைகளினாலும் இம்மக்களின் வாழ்வு இலங்கையின் ஏனைய சமுதாயத்தினருடன் ஒப்பிட முடியாதஅளவில் பின் தள்ளப்பட்ட நிலையிலேயே உள்ளது.

 

post116.jpg

 

இந்த பின்னடைவு காரணமாக ஒருசிலரை தவிர, கிட்டத்தட்ட அனைவரும் இந்தியாவில் உள்ள தமது உறவுகளுடனான உறவுதுண்டிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டதுடன், இந்தியாவில் தமக்கு சொந்தமாக இருந்த நிலம் மற்றும் சொத்துக்களையும்இழந்தவர்களாகி இன்றும் சொந்த வீடற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

காலங்கள் கடந்த நிலையிலும் அந்த மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தோட்ட நிர்வாகங்களினால் இன்றும்அரங்கேற்றப்பட்டுகொண்டுள்ளதை பெருந்தோட்டங்களின் “உண்மையான நிலை”யை அறிந்தவர்கள் மறுக்க மாட்டார்கள்.

தேயிலை செடிக்காகவே வாழ்ந்து அந்த மண்ணுக்காகவே ஊனையும், இரத்தத்தையும், உயிரையும் இழக்கின்ற “உண்மையானஉழைப்பாளி”களுக்கு, சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலைக்கு கிடைக்கும் உயரிய மரியாதை அதனைஉருவாக்கியவர்களுக்கு கிடைப்பதில்லை.

காலையில் வேலைக்கு செல்லும் பெண்கள், தேயிலை மலையில் அனுபவிக்கின்ற கொடுமைகள் அருகிலிருந்து பார்க்கும்தோட்ட நிர்வாகிகளின் கண்களுக்கே தெரிவதில்லை. அப்படியிருக்கையில், “தேயிலை என்றால் தொலைக்காட்சிவிளம்பரங்களிலும் சுப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைப்பது” என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு (சந்தா வாங்கும்மலையக அரசியல்வாதிகள் உட்பட) எப்படித் தெரிய போகின்றது.

தோட்டத் தொழிலாளர்கள் குறிப்பாக பெண்கள் நிர்வாகத்தினால் பல்வேறு அநீதிகளுக்கு ஆளாக்கப்படுகின்றர்கள் என்பது, கொழும்பிலோ நகர் புறங்களிலோ குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து நிர்வாகத்தை கண்காணிப்பவர்கள் நேரடியாகஈடுபடுகின்றனர் என்று அர்த்தம் அல்ல. இவர்களுக்காக அநீதி தன் சார்ந்த இனத்தினரால் இழைக்கப்படுகின்றது என்பதே!

இன்று பெருந்தோட்டங்களில் மேலதிகாரிகளாக கடமையாற்றுபவர்கள் அதே மண்ணிலிருந்து வந்தவர்கள், தொழிலாளிகளின்பிள்ளைகள் என்பதை மறந்து விட்டு, மேலதிகாரிகளிடம் நல்லபெயர் பெற்றுக்கொள்வதற்காக தன் இனம் சார்ந்தவர்களுக்குஅநீதி இழைப்பதுதான் கொடுமை.

“தொர.. தொர” என்று கணக்குப்பிள்ளை மற்றும் தோட்ட முகாமையாளரின் பின்னால்திரியும் சிலர், தன் இன பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டி, இழிவுப்படுத்தி பேசுவது எத்தனை பேருக்கு தெரியும்.அத்தனை அவஸ்தைகளையும் தாங்கிக்கொண்டு தமது குடும்பத்துக்காக உழைக்கும் எம் மலையக பெண்களுக்கு உள்ளபொறுமை நிச்சயம் உயர்வானது.

ஆனால், ஓட்டுமொதமாக அனைவரையும் இந்த இடத்தில் குறைகூறவில்லை. இவ்வாறானவர்களுக்கு இடையில் நல்லவர்களும்இருக்கிறார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கங்காணிகள் உள்ளிட்டவர் பேசும் கீழ்த்தரமானவார்த்தைகளையும், அவற்றால் படும் துன்பத்தையும் மலைகய மாதர்களிடம் கேட்டுப்பார்த்தால்தான் புரியும்.

இது இவ்வாறு இருக்க, அவர்களை எதிர்த்து கேட்கும் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தால் பழிவாங்கப்படும்போது, “திக்கற்றவனுக்கு தெய்வமே துணை” என்பதற்கும் மேலாக இந்த மக்கள் தொழிலாளர் நீதிமன்றங்களையே நாடுகின்றனர்.

அங்கும், தோட்ட நிர்வாகங்களின் அதிகாரம் மற்றும் பண பலம் என்பவை தொழிலாளர்களின் முன்னாள் வந்து தொல்லைதந்தமைக்கு ஆயிரம் சம்பவங்களை தொழிலாளர்களிடம் கேட்டால் சொல்வார்கள். வறுமை உள்ளிட்ட தடைகளை தாண்டிஇருக்கும் சகலதையும் விற்று வழக்கினை நடத்தினால். இறுதியில் அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்பதும்நிச்சயமில்லை.

சாதாணமாக ஒரிரு மாதங்களில் விசாரித்து முடித்துவிடக்கூடிய முறைப்பாடுகள் வழங்குகளால் பரிமாணப்படுத்தப்பட்டு 5 வருடங்கள் வரை கூட இழுத்தடிக்கபடுகின்றதை என்னவென்று சொல்வது, இது சட்டத்தில் காணப்படும் முக்கியமான காலம்தாழ்த்துதல் என்று அடையாளப்படுத்தலாம்.

தோட்ட நிர்வாகங்களினால் வேலை நிறுத்தப்பட்டு வருமானத்தை இழந்துள்ள ஒரு தொழிலாளி 5 வருடங்கள் வழக்கினைநடத்திவிட்டு நியாயம் கிடைக்காமல், அல்லது, இது செல்லுபடியற்ற வழக்கு என்று தீர்ப்பு வருவதாக இருந்தால், அதனைவிடஅந்த தொழிலாளிக்கு பெரிய துன்பமொன்று வந்துவிட முடியாது.

ஒரு சம்பவம், கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக, சுமார் 20 வருடங்கள் பெருந்தோட்ட தொழிலாளியாக இருந்த பெண், கங்காணியின் தகாத வார்த்தை பிரயோகங்களை எதிர்த்து கேட்டதால், பழிவாங்கப்படுகின்றார். அவருக்கான வேலைமறுக்கப்படுகின்றது. வேதனையுடன் வீடு திருப்பிய அவருக்கு அடுத்த நாளும் வேலை மறுக்கப்பட்டு இனி வேலைக்கு வரவேண்டாம் முடிந்ததை செய்துகொள்ளுங்கள் என்று கங்காணியின் அடாவடி பேச்சு துரத்துகின்றது.

அது குறித்து கங்காணியை விட உயர்ந்த அதிகாரி என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருந்த மேற்பார்வையாளர் மற்றும்கணக்குப்பிள்ளை உள்ளிட்டவர்களிடம் அந்த தொழிலாளி முறையிட்டும் பலனில்லை. இது குறித்து தோட்ட முகாமையாளர்விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை புறக்கணிக்கப்படுகின்றது.

அதனையடுத்து, தொழிற்சங்கம் ஊடாக கடிதம் அனுப்பியும் உரிய பதில் இல்லாத காரணத்தால், தொழிாளர் நீதிமன்றத்திடம்முறையிட அந்த வழங்கு 5 வருடங்களுக்கும் அதிகமாக நடைபெற்றது. நடைபெற்றது

என்பதை விட இழுத்தடிக்கப்பட்டது என்றுசொல்ல வேண்டும். பல தடவைள் சமூகமளிக்காமல் தோட்ட நிர்வாகம் வழைக்கை இழுத்தடிக்க இக்காலப்பகுதியில் வழக்கைவிசாரித்த நீதவான் இடமாற்றம் பெற்று செல்ல புதிய நீதவான் வழக்கை விசாரிக்கின்றார். வழக்கு ஆரம்பிக்கப்பட்டு ஐந்துவருடங்களுக்கு பின்னர் இந்த வழக்கு செல்லுபடியற்றது என்று ஒற்றை வரியில் தீர்ப்பு அறிவிக்கப்படுகின்றது.

 

1.jpg

 

இந்த இடத்தில் தீர்பை விமர்சிக்கவில்லை, சட்டத்தை கரைத்து குடித்த சட்டவறிஞர்கள் வழங்கிய தீர்ப்பை சாமானியர்கள்ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் சட்டவாட்சி. ஆனால், ஓரு வழக்கு செல்லுபடியற்றது என்பதை அறிவிக்க ஐந்துவருடங்களுக்கு அதிக காலம் எடுத்துக்கொள்ளப்பட்டமைதான் தொழிலாளர் நீதிமன்றங்களின் நிலை குறித்துஎழுப்பப்படுகின்ற கேள்வி.

கேட்டால், வழக்குள் அதிகம் என்பதால் தாமதங்கள் என்று காரணம் சொல்லாம், அதைத்தான் சொல்வார்கள், (அப்படியொன்றால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை நான் சொல்லிதெரியவேண்டியதில்லை) அவ்வாறாயின் தொழிலாளர் நீதிமன்றங்களின் கேள்வியை அறிந்து அதன் எண்ணிக்கையைஅதிகரிப்பது குறித்து இதுவரை யாருக்கும் தோன்றவில்லையா என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.

“தொழிலாளர்களால் நாம் தொழிலாளர்களுக்காக நாம்” என்று மார்தட்டிக்கொள்ளும் மலையக தொழிற்சங்கங்கள் மற்றும்மலையக அரசியல் வாதிகள், தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்தற்கு எந்தளவு முன்வந்துள்ளார்கள் என்பது இன்னும்கேள்வியாகவே நின்றுவிடுகின்றது.

நிச்சயம் நீதித்துறையில் மாற்றங்கள் வேண்டும். அதன் ஆரம்பமாகவேணும் தொழிலாள் நீதிமன்றங்களில் மாற்றங்களைஏற்படுத்தி தொழிலாளர் பிணக்குகளை வழக்குகளாக மாற்றாமல் விரைவில் தீர்வைப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கைஎடுத்தால், வழக்கு செல்லுபடியற்றது என்பதை தெரிந்துகொள்ள ஐந்து வருடங்கள் அலைய தேவையில்லையல்லவா? “சட்டத்தின் அலட்சியம் ஈர்ப்பு விதியை இடமாற்ற அனுமதிக்கிறது” என்று அப்போதே அறிஞர் ஆர். ஏ. லஃபெர்ர்டிசொல்லியிருக்கின்றார்.

“யாரும் எதிர்­பார்க்­காத மாற்­றத்தை எதிர்­வரும் இரண்டு மாதங்­க­ளுக்குள் நீதி­மன்ற கட்­ட­மைப்பில் ஏற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­கின்றேன். சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் பாரி­ய­ளவில் வழக்­குகள் குவிந்­தி­ருக்­கின்­றன என நீதிமற்றும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள, அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த விடயம்தொடர்பிலும் அவரின் கவனம் சென்றடைந்தால் அது தொழிலாளர்களுக்கு ஆறுதலாகவாவது அமையும்.

 “வெட்கத்திற்குப்புரிவது, சட்டத்திற்குப் புரியாது” என்று மு. வரதராசனார் சொன்னது இப்போதுதானா என் நினைவுக்கு வரவேண்டும்!.

ஜே.ஏ.ஜோர்ஜ்

ஜெர்மனியின் தியூசல்டோர்ஃபு பகுதியில் இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூர் நேரப்படி சுமார் 6:30 மணியளவில் 150க்கும் மேற்பட்டோருடன்  சென்று கொண்டிருந்த பயணிகள் புகையிரதம் எதிர்பாராத விதமாக சரக்கு புகையிரதம் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

German-traincrash3.jpg

 

 

இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விபத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சுமார் 6 பேர் காயமடைந்துள்ளதாக மீர்பஸ்க் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ள போதிலும் காவல்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் இந்த  விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜெரூசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படுவது உறுதி என்று அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் அரபு நாட்டு தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஜோர்தான் நாட்டு மன்னர் அப்துல்லா மற்றும் பாலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸ் ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட டிரம்ப், ஜெருசலேத்தில் தூதரகம் அமைக்கும் முடிவில் தாம் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார்.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜெருசலேத்திற்கு மாற்றப்பட உள்ளது.

ஜெருசலேம் சர்ச்சைக்குரிய பகுதியாக இருப்பதால் அதனை இஸ்ரேலின் தலைநகராக ஏற்க அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் மறுத்து வருகின்றன.

யஇஸ்ரேல்-பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுமே ஜெருசலேம் தங்கள் புனிதத் தலம் என்று உரிமை கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் மாநிலத்தின் வடக்கே வென்ச்சுரா கவுன்ட்டி மலையோரப் பகுதியை ஒட்டியுள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் கட்டுப்படுத்த இயலாத காட்டுத்தீ அங்குள்ள புதர்களில் பற்றி எரிந்துள்ளது.

அப்பகுதியில் மணிக்கு சுமார் 115 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் பலத்த காற்றால் பிற பகுதிகளிலும் தீ பரவியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட பகுதியில் வசித்துவரும் கல்லூரி விடுதி மாணவர்கள் சுமார் 390 பெர் மற்றும் 500 குடும்பங்களை சேர்ந்தவர்களும் தற்காலிகமாக குறித்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Calendar

« December 2017 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Go to top